Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
காதலர் வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்த போகுது தெரியுமா?.
பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை என ஒரு வார காலம் காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் வாரத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
பிப்ரவரி மாதம் காதலர்களுக்கான விசேஷமான மாதம். ஏனெனில் இந்த மாதத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை என ஒரு வார காலம் காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஏழு நாட்களில் முதல் நாளில் ரோஸ் தினமும், இரண்டாம் நாளில் ப்ரபோஸ் தினமும், மூன்றாம் நாளில் முத்த தினமும், நான்காம் நாளில் ஹக் தினமும், ஐந்தாம் நாளில் டெடி தினமும், ஆறாம் நாளில் சாக்லேட் தினமும் மற்றும் இறுதியாக ஏழாவது நாளில் காதலர் தினமும் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் வாரத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதை இப்போது பார்ப்போம்.


மேஷம்
2021 காதலர் வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் உங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணையும் உங்களுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார். அதுமட்டுமின்றி, அவர் உங்களுக்கு பல ஆச்சரியங்களையும் அளிக்க திட்டமிடலாம். திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள். மொத்தத்தில், இந்த காதலர் வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரப் போகிறது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் வாரம் கடந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்கள் அல்லது தம்பதியர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். இந்த வாரம் முழுவதும் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் காதலிக்காமல் சிங்கிளாக இருந்தால், இந்த வாரத்தில் காதலில் விழ வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த காதலர் வாரம் பல ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் காதலர் உங்களுக்கு அளிக்கும் ஆச்சரியம், உங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக இருக்கும். உதாரணமாக நீங்கள் காதலிப்பவர்களாக இருந்தால், உங்கள் துணை உங்களிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கலாம். நீங்கள் திருமணமாகி தொலை தூர உறவில் இருந்தால், இந்த வாரத்தில் இந்த தூரத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதாவது உங்கள் துணையை சந்தித்து, அவருடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களே, நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி அதிக அக்கறை கொள்ளாமல் இருப்பவராயின், இந்த வாரம் உங்களுக்கு சற்று கடினமாகவே இருக்கும். இந்த வாரத்தில் உங்களின் காதல் உறவு முறிந்து போக வாய்ப்புள்ளது. உங்களின் செயலால் உங்கள் துணையை உணர்ச்சி ரீதியாக காயப்படுத்துவீர்கள். திருமணமானவர்களாக இருந்தால், இந்த வாரம் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவு வலுவாக இருக்கும் மற்றும் அன்பும் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த காதலர் வாரம் கலவையான முடிவுகளைத் தரக்கூடியதாக இருக்கும். வாரத்தின் ஆரம்பம் கொஞ்சம் மந்தமாக இருக்கும். ஆனால் வாரத்தின் நடுவே உங்கள் துணை உங்களுக்காக சில நல்ல திட்டங்களைத் தீட்டலாம். காதலிப்பவராக இருந்தால், உங்கள் துணை உங்களிடம் திருமணத்தை மிகவும் காதல் முறையில் முன்மொழியலாம். திருமணமானவராக இருந்தால், இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையுடனான சிறு வேறுபாடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, இந்த காதலர் வாரம் மிகுந்த நிம்மதியைத் தருவதாக இருக்கப் போகிறது. நீங்கள் காதலிப்பவருடனான உங்கள் உறவு சரியாக இல்லாவிட்டால், இக்காலத்தில் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும் மற்றும் உங்கள் துணை உங்களை உண்மையாக நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். திருமணமானவர்களுக்கு, இந்த வாரம் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். உங்களை மகிழ்விக்க உங்கள் துணை அவர்களால் முடிந்ததை செய்வார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு, இந்த காதலர் வாரம் காதல் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் துணை உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். திருமணமானவர்களின் வாழ்வில் சிற வெற்றிடங்களும் இருக்கும். உங்கள் துணை உங்களை புறக்கணிப்பதை உணர்வீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காதலர் வாரத்தில் உங்கள் துணை உங்களை விட அதிகமாக உங்களை மதிப்பிடுவார். இக்காலத்தில் நீங்கள் குறுகிய பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, நீங்கள் உங்கள் துணையிடமிருந்து மதிப்புமிக்க பரிசையும் பெறலாம். திருமணமானவர்களுக்கு, இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையின் அன்பும், நட்பும் உங்களுக்கு ஒரு நல்லுணர்வை ஏற்படுத்தும். நீங்களும் அவர்களை மகிழ்விக்க உங்களால் முடிந்ததை செய்வீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள், இந்த காதலர் வாரத்தை மகிழ்ச்சியான ஒன்றாக மாற்ற நினைத்தால், நாவைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் சிறு பேச்சும் உங்கள் உறவில் கசப்பை அதிகரிக்கக்கூடும். எனவே உங்கள் பேச்சிலும், நடத்தையிலும் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. திருணமானவர்கள், இக்காலத்தில் சண்டைகள் மற்றும் மோதல்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் துணையின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள், இந்த வாரத்தில் உங்கள் துணையின் அன்பில் மூழ்கி, உங்கள் துணையுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள். மேலும் உங்கள் உறவைத் தொடரவும் நீங்கள் முடிவு செய்யலாம். திருமணமானவர்களுக்கு, இந்த காதலர் வாரம் மிகவும் நன்றாக இருக்காது. இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடன் உறவில் சிறு விரிசல் இருக்கலாம். உங்கள் துணையின் நடத்தை உங்களிடம் சரியாக இருக்காது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு, இந்த காதலர் வாரத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் சிறிது ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருந்தால், எல்லா பிரச்சனைகளும் இந்த காலத்தில் தீர்க்கப்படும். உங்கள் இருவருக்குள்ளான அன்பு வளரும் மற்றும் நம்பிக்கையும் பலப்படுத்தப்படும். மறுபுறம், திருமணமானவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணையின் அனைத்து குறைகளையும் நீக்க உங்களால் முடிந்தவரை முயற்சிப்பீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள், இந்த வாரம் உங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் துணையுடன் ஒரு அட்டகாசமான இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் பழைய மற்றும் நல்ல நினைவுகளில் சிலவற்றை புதுப்பிக்க முயற்சிப்பீர்கள்.



Click it and Unblock the Notifications











