Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்கார ஜோடிங்க மிகவும் பொருத்தமான தம்பதிகளாக இருப்பங்களாம்...உங்க காதலர் ராசி என்ன?
மிதுனம் மற்றும் கும்பம் இருவருக்கும் பொதுவான பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் சுதந்திரமான செயல் . அவர்களின் சுதந்திர மனப்பான்மை மற்றும் மகிழ்ச்சியான நடத்தை உடனடியாக மற்றவர்களை ஈர்க்கிறது.
திருமண உறவிலோ அல்லது காதல் உறவிலோ தம்பதிகள் இருவரும் இணக்கமாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். பொதுவாக ஆண், பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கும். உறவில் அன்பு, நம்பிக்கை மற்றும் புரிந்துகொண்டு விட்டுக்கொடுக்கும் பண்புகள் இருக்க வேண்டும். இது ஒரு உறவை நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியாக கொண்ட செல்ல உதவும். மேலும் உறவு என்பது ராசிபலன்களாலும் கணக்கிடப்படுகிறது. இரண்டு நபர்களுக்கிடையேயான உறவு என்பது அவர்கள் பிறந்த ராசியின் அடிப்படையில் மட்டுமல்ல. அவர்களின் அடையாளம் வாழ்க்கையில் இதுவரை வடிவமைத்த தாக்கங்கள் மற்றும் அவர்களின் இலக்குகளை நோக்கி அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் உள்ளுணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. அது அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திசையையும் காட்டலாம்.

இருப்பினும், நீங்கள் விரும்பக்கூடிய நபருக்கு முதலில் பொருந்துகிறீர்களா என்பதை அறிய ராசிக் கருத்துகளைச் சார்ந்து இருப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. சில உறவுகளை வாழ்க்கை முழுக்க கொண்டு செல்ல முடியாது. உங்களுக்கான சரியான ஜோடிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள சேர்க்கைகளின் அடிப்படையில் உங்களின் இணக்கமான ஜோடி யார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

சிம்மம் மற்றும் தனுசு
சிம்மம்: 23 ஜூலை - 22 ஆகஸ்ட்
தனுசு: 22 நவம்பர் - 21 டிசம்பர்
சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சிலிர்ப்பூட்டும் புதிய அனுபவங்களின் தேடலை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியான, நேர்மறை மற்றும் நேசமான ஜோடிகளாக இருப்பார்கள். இதனால், அவர்கள் விஷயங்களை இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பெரும்பாலான அம்சங்களில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். மேலும் அவர்களின் இந்த குணாதிசயங்கள், நேர்மறை மற்றும் பொதுவான உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த குணங்கள் ஒருவரையொருவர் ஈர்ப்பதோடு அவர்களின் உறவை வலுப்படுத்துகிறது.

கும்பம் மற்றும் மிதுனம்
மிதுனம்: 21 மே - 20 ஜூன்
கும்பம்: 20 ஜனவரி - 18 பிப்ரவரி
மிதுனம் மற்றும் கும்பம் இருவருக்கும் பொதுவான பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் சுதந்திரமான செயல் . அவர்களின் சுதந்திர மனப்பான்மை மற்றும் மகிழ்ச்சியான நடத்தை உடனடியாக மற்றவர்களை ஈர்க்கிறது. இந்த ராசிக்காரர்கள் மக்களை எளிதில் படிக்க கற்றுக் கொள்கிறார்கள், அவர்கள் தங்கள் அறிவை ஒரே கருத்து உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் இருவரும் மிகவும் இணக்கமாக இருப்பார்கள். இருவரும் தங்களுக்கும் ஒருவருக்கொருவர் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கையை நேர்மையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ கற்றுக்கொள்கிறார்கள்.

கடகம் மற்றும் மீனம்
கடகம்: 21 ஜூன் - 22 ஜூலை
மீனம்: 19 பிப்ரவரி - 20 மார்ச்
கடகம் மற்றும் மீனம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று இணையான தம்பதிகள். இவர்கள் ஒருவருக்கொருவர் தெய்வீக பொருத்தத்திற்கு இணையாக இருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆன்மாவின் ஆழத்தைக் கண்டறிந்தவுடன் காதலோடு வலுவான இணைப்பு தொடர்கிறது. உணர்ச்சி ரீதியாக அவர்கள் மிகவும் இணக்கமாக இருக்கும் ஜோடிகள். இந்த ராசிக்காரர்கள் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொண்டு, தேவைப்படும் சமயங்களில் ஒருவரையொருவர் ஆதரிப்பார்கள். அவர்களுக்கு ஆலோசனை அல்லது ஆறுதல் தேவைப்படும்போதெல்லாம், சாய்வதற்கு தோளும், நான் இருக்கிறேன் என்ற ஆறுதலும் கிடைக்கும்.

கன்னி மற்றும் ரிஷபம்
கன்னி: 23 ஆகஸ்ட் - 22 செப்டம்பர்
ரிஷபம்: 20 ஏப்ரல் - 20 மே
கன்னி மற்றும் ரிஷப ராசிக்காரர்கள் இருவரும் மிகவும் பொருத்தமான ஜோடிகள். ஆனால், இருவரும் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய அன்பை கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் வீட்டு வேலைகள், நேர்மையான விவாதங்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒரு நடைமுறைக் கண்ணோட்டத்துடன் கடின உழைக்கக்கூடிய ஜோடிகள் மற்றும் அவர்களின் உறவைச் செயல்படுத்தத் தயாராக உள்ளனர். சரியான துணையாக இருக்க வேண்டியதை ஒருவருக்கொருவர் செய்வார்கள்.

மகரம் மற்றும் ரிஷபம்
மகரம்: 22 டிசம்பர் - 19 ஜனவரி
ரிஷபம்: 20 ஏப்ரல் - 20 மே
மகர மற்றும் ரிஷபம் ஒரு உறவில் இணக்கமான சமன்பாடுகளை விரும்புகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் தங்கள் இலக்குகளை அடைய தங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் நடைமுறை வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழக்கூடியவர்கள். இந்த ராசிக்காரர்கள் இருவரும் சற்று மந்தமானவர்களாகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் தோன்றலாம். ஆனால், வேறு எங்கும் பார்க்க முடியாத வகையில், உறவில் மிகவும் மகிழ்ச்சியான முறையில் அவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.



Click it and Unblock the Notifications