Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
காதலர் தினத்தில் இந்த நிற பூக்களை மறந்தும் கூட உங்க காதலிக்கு கொடுக்காதீங்க...
மல்லிகையும் ரோஜாவும் காதலர்களுக்கு மிகவும் பிடித்த மலர்கள். மல்லிகையின் மணத்திலும் ரோஜாவின் அழகிலும் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இரண்டுமே சுக்கிரபகவானின் ஆதிக்கம் நிறைந்த மலர்கள்.
வண்ண வண்ண ரோஜாவின் அழகும் மனதை மயக்கும் மல்லிகையின் மணமும் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது. ரோஜாவிற்கும் மல்லிகைக்கும் காரகர் சுக்கிரன்தான். மனதை கவரும் இந்த மலர்கள் காதலர் தினத்தில் அதிகம் பரிமாறிக்கொள்ளப்படும். இன்னும் சில தினங்களில் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த நிறத்தில் ரோஜாக்களையும், மல்லிகையை யாருக்கும் பரிசளிக்கலாம் என்று பார்க்கலாம்.

அன்பு, காதல் என அனைத்திற்கும் காரகர் சுக்கிரபகவான் தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.ஜோதிடத்தில் செவ்வாய் ஆண்மகனையும், சுக்கிரன் அழகிய இளம்பெண்ணையும் குறிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் எந்த விததில் சேர்க்கை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு காதல் மற்றும் காம உணர்ச்சி அதிகமாக இருக்கும். இத்தகைய அமைப்பு பெற்றவர்கள் காதலில் ஒரு வேகத்தோடு இருப்பதோடு அதிகமாக சிகப்பு ரோஜாவையே தன் காதலிக்கு வழங்க விரும்புவார்கள். சிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா விளங்குகிறது.
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப மற்றும் துலாம் ராசியை லக்னமாகவோ சந்திரா லக்டனமாகவோ கொண்டவர்கள். சுக்கிரன் ரிஷபம் அல்லது துலா ராசியில் ஆட்சி பெற்றவர்கள் மற்றும் மீனத்தில் உச்சமடைந்தவர்கள், கன்னியில் புதன் சந்திரனோடு சேர்ந்து நின்று நீசபங்க மடைந்தவர்கள் ரோஜாப்பூக்களை விரும்புவார்கள்.

ரோஜாவை விரும்பும் காதலர்கள்
எந்த லக்னமாக இருந்தாலும் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள்.லக்னம் சுக்கிரன் சாரத்தில் அமையப் பெற்றவர்கள். பஞ்ச மகா புருஷயோகத்தில் மாளவியா யோகம் பெற்றவர்கள். சுக்கிரன் ஆத்ம காரகனாக அமையப்பெற்றவர்கள் ரோஜாக்களை விரும்புவார்கள். ஜாதகத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை பெற்றவர்கள் ரோஜாக்களை விரும்புவார்கள். ரிஷப, துலாம் வீடுகளை 2,5,7,9 வீடுகளாக அமையப்பெற்றவர்கள் அல்லது 2,5,7,9 ஆகிய வீடுகளில் சுக்கிரன் நிற்கப்பெற்றவர்கள். ரோஜாவை விரும்புவார்கள்.

சிவப்பு நிற ரோஜாக்கள்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களின் அதிபதிகளுடன் பகை உணர்வோடு செயல்படுபவர்கள். வெள்ளை, பச்சை, கருப்பு ஆகிய நிறங்களை தவிர்த்து விடுங்கள். ரிஷப லக்னகாரர்களுக்கு வெள்ளை, சிவப்பு, ரத்த சிவப்பு, மஞ்சள் ராசியான நிறமல்ல. மிதுன லக்ன காரர்களுக்கு சிவப்பு, மஞ்சள், வெள்ளை, கிரீம் நிறம் ராசியானதல்ல.

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பச்சை, வெள்ளை, கருப்பு நிற மலர்கள் ஏற்றதல்ல, சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளை, பச்சை, மலர்கள் வேண்டாம். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிற மலர்கள் ராசியானதல்ல. அதே போல துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கருஞ்சிவப்பு, மஞ்சள் நிற மலர்கள் ஏற்றதல்ல.

எந்த நிற ரோஜாக்கள்
விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளை, பச்சை, கருப்பு வேண்டாம். தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளை, பச்சை, கருப்பு ராசியான நிறமல்ல. மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நல்லதல்ல. கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிவப்பு, வெள்ளை, க்ரீம் சரியான நிறமல்ல. மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளை, பச்சை, நீலம், கருப்பு நிற மலர்களை பரிசாக கொடுக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications