For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைகுண்ட ஏகாதசியில் ஏன் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது? விரதம் இருப்பதால் உங்களுக்கு கிடைக்கும் பயன்?

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தாம் வழிபடும் பெருமாளின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசியில் திறக்கப்படுவதாக நம்புக

|

மார்கழி மாதம் என்றாலே, தனிச்சிறப்பு வாய்ந்தது என்று கூறப்படும். அப்படிப்பட்ட மார்கழியில் வரும் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெருமாள் பக்தர்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியமான நாளாகும். அன்றைய நாளில் விரதமிருந்து இரவு தூங்காமல் கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெருமாளை வணங்கி விரதம் மேற்கொண்டு வைகுண்ட ஏகாதசியை கடைபிடிப்பார்கள்.

Vaikuntha Ekadashi 2022 date, history, rituals and significance in tamil

சொர்க்க வாசலை காணுவது என்பது, நாம் இறந்ததற்கு பிறகு சொர்க்கத்திற்கு செல்வோம் எனக்கூறப்படுகிறது. அத்தகைய வைகுண்ட ஏகாதசி இந்தாண்டு இரண்டு முறை நடப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கட்டுரையில் வைகுண்ட ஏகாதசி ஏன், எப்போது, எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தாம் வழிபடும் பெருமாளின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசியில் திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவிலுக்கு செல்வர். விடியற்காலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே திறக்கும் 'சொர்க்க வாயில்' என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.

வைகுண்ட ஏகாதசி கதை

வைகுண்ட ஏகாதசி கதை

முரன் என்ற அரக்கன் தேவர்களையும், முனிவர்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பெருமாளிடம் முறையிட்டனர். பெருமாள், முரனுடன் போரிட்டு வென்றார். போரில் வென்ற பின்னர் ஒரு குகையில் ஓய்வெடுக்க சென்ற பெருமாளை, தோல்வியின் விரக்தியில் இருந்த முரன் கொள்ள சென்றார். அப்போது திருமாலின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பெண் வடிவில் உருவெடுத்து, முரனுடன் போரிட்டு வென்றாள். முரனை வென்ற அந்த திருமாலின் சக்தியால் உருவான அந்த பெண்ணுக்கு ஏகாதசி என அரங்கன் பெயர் சூட்டினார். அதோடு அன்றைய திதிக்கு ஏகாதசி பெயர் வந்தது. இந்நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகா பெருமாள் வரமளித்தார். இதனால் இத்தினத்தை வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி

இந்துக்களின் முக்கியமான நிகழ்வான வைகுண்ட ஏகாதசி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கொண்டாடுவது வழக்கம். இந்த முறை திருச்சி ஸ்ரீ ரங்கம் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்தின் முதல் நாள் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கார்த்திகையில் தொடங்கப்பட்டது. சொர்க்க வாசல் டிசம்பர் 14ஆம் தேதி திறக்கப்பட்டது. டிசம்பர் 23ஆம் தேதி இராப்பத்து நாளின் 10ஆம் நாள் அனுசரிக்கப்பட்டு, டிசம்பர் 24ஆம் நாள் நம்மாழ்வார் மோட்சம் அடைந்த நாளாக கொண்டாடப்பட்டது.

எப்போது வைகுண்ட ஏகாதசி?

எப்போது வைகுண்ட ஏகாதசி?

மற்ற வைணவத் திருக்கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருநாளுக்கான பகல் பத்து ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏகாதசி திதி ஜனவரி 12ம் தேதி இரவு 8.03 மணிக்கு தொடங்கி, ஜனவரி 13ம் தேதி இரவு 9.56 மணி வரை இருக்கிறது. அதனால் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 13ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதேபோல ஜனவரி 22ஆம் தேதி 2022 அன்று இராப்பத்து நாளின் 10ஆம் நாள் அனுசரிக்கப்பட்டு, ஜனவரி 23ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் அடைந்த நாளாக கொண்டாடப்படுகின்றது.

விரதம்

விரதம்

இந்துக்கள் ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி நாளிலும் விரதம் மேற்கொண்டு, திருமாலை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு, நன்மைகள் நடக்கும் என நம்புகின்றனர். அனைத்து ஏகாதசி நாட்களிலும் விரதம் இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசியன்று மேற்கொள்ளும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்நாள் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

21-நாள் சிறப்பாக கொண்டாடப்படும்

21-நாள் சிறப்பாக கொண்டாடப்படும்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருவார். ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க சொர்க்க வாசல் வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.

சொர்க்க வாசல் திறப்பு

சொர்க்க வாசல் திறப்பு

ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும். பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை வணங்குவது வழக்கம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டு 2 முறை அதாவது கார்த்திகை கடைசி நாளிலும் மார்கழியிலும் வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vaikuntha Ekadashi 2022 date, history, rituals and significance in tamil

Here we are talking about the Vaikuntha Ekadashi 2022 date, history, rituals and significance in tamil.
Story first published: Monday, January 10, 2022, 16:38 [IST]
Desktop Bottom Promotion