For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்வ வளத்தை அள்ளித்தரும் பொன் மஞ்சள் அரளிச் செடி..!

மஞ்சள் அரளிச் செடிகளை வீட்டில் வளர்ப்பதால், சுத்தமான காற்றோட்டம் கிடைப்பதோடு, மஞ்சள் நிறம் என்பது மங்களத்தின் அடையாளம் என்பதால், அதிக அளவில் செல்வ வளத்தை வீட்டிற்கு கொண்டு வரும் வாஸ்து சாஸ்திரத்தில் க

|

மஞ்சள் அரளிச் செடிகளை வீட்டில் வளர்ப்பதால், சுத்தமான காற்றோட்டம் கிடைப்பதோடு, மஞ்சள் நிறம் என்பது மங்களத்தின் அடையாளம் என்பதால், அதிக அளவில் செல்வ வளத்தை வீட்டிற்கு கொண்டு வரும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனாலேயே வீடுகள் தோறும் மஞ்சள் அரளிச் செடியை தற்போது வளர்க்க தொடங்கிவிட்டனர். போதுமான இடவசதி இல்லாதவர்கள் வீட்டு மாடிகளில் சிறிய தொட்டிகளில் வளர்க்கத் தொடங்கி விட்டனர்.

MOST READ: வாடகை வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் யாரைப் பாதிக்கும்? வீட்டு ஓனரையா அல்லது குடியிருப்பவரையா?

அன்றைய கால கட்டங்களில் கிராமப் புறங்களில் பெரிய அளவில் வீட்டை கட்டி குடியிருப்பவர்கள், வீட்டை கட்டத் தொடங்கும் போதே, செய்யும் முதல் காரியம், வீட்டின் பின்புறத்தில் வீட்டு உபயோகத்திற்காக காய்கறி தோட்டங்களை அமைப்பார்கள். கூடவே நிழலுக்காகவும், சுத்தமான காற்றோற்றத்திற்காக நாலைந்து தென்னை மரங்களையும், மாமரங்களையும், பூஜைக்காக பூச்செடிகளையும், அழகுக்காக காகிதப் பூ செடியையும் நட்டு வைத்து விடுவார்கள்.

MOST READ:வாங்கும் தங்கத்தை உப்புக்குள் வைத்து எடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இனியாவது அப்படி செய்ங்க...

வீட்டை கட்டி முடிக்க குறைந்த பட்சமாக ஆறு மாதங்களாவது ஆகிவிடும். வீடு கட்டி குடியேறிய உடனேயே, வீட்டு தோட்டத்திலிருந்து கிடைக்கும் கிடைக்கும் காய்கறிகளையும், பழங்களையும் தாங்கள் பயன்படுத்திக் கொள்வதோடு அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் தந்து உதவுவார்கள். அதே போல் நகர்ப்புறங்களில் வீடு கட்டுபவர்கள் வீட்டின் மாடியிலேயே சிறிய அளவில் தோட்டங்களை அமைத்து பயன்படுத்தி வந்தார்கள்.

MOST READ: இறந்தவர்களின் படத்தை இந்த இடத்தில் மாட்டுவது உங்கள் வீட்டில் திடீர் மரணத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

அப்போதெல்லாம், யாருமே வாஸ்து சாஸ்திரம் பற்றியோ, எந்த செடி அல்லது மரத்தை வைத்தால் நல்லது என்பது பற்றியோ அறிந்திருக்கவில்லை. தங்களின் அனுபவ அறிவை வைத்தே எந்த செடியை அல்லது மரத்தை வைத்தால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சிந்தித்து அதன்படியே நடந்தகொண்டார்கள். காலப்போக்கில் வாஸ்து சாஸ்திரம் என்னும் நம்பிக்கை சம்பந்தமான விஷயத்தை மக்கள் சிந்திக்க தொடங்கினார்களோ, அப்போதே மரம் செடி கொடிகளையும் வாஸ்துவோடு சம்பந்தப்படுத்த தொடங்கிவிட்டனர்.

MOST READ: சிவனின் இந்த உருவத்தை வீட்டில் வைப்பது உங்கள் வீட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை தரும் வாஸ்து செடிகள்

நன்மை தரும் வாஸ்து செடிகள்

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கு ஏற்ப, எந்த செடியை, எந்த மரத்தை வீட்டில் எந்த திசையில் வைத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்லது, வீட்டில் செல்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்றெல்லாம் யோசித்து அதன்படி தான் நடந்து கொள்கின்றனர். இதற்காகவே போன்சாய் வகையிலான வாஸ்து செடிகளையும் விற்பனை செய்து வருகின்றனர். மக்களும் அவற்றை வீட்டினுள் வைத்து வளர்த்து வருகிறார்கள். அந்த வாஸ்து செடிகளால் வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன நன்மை விளையும் என்று யோசிப்பதில்லை.

பூஜைக்கு உகந்த பூக்கள்

பூஜைக்கு உகந்த பூக்கள்

உண்மையில் வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்துக்கும், சுத்தமான காற்றை அளிக்கவும், பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களையும் தரும் அற்புதமான ஒரு செடியாக உள்ளது அரளி செடியாகும். அரளி செடியானது அசுத்தமான காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றை வெளியிடுகின்றது. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் இச்செடிகளை வீட்டில் வைத்து வளர்க்க விரும்புவதில்லை. கோவில்களில் மட்டுமே வைத்து வளர்க்கின்றனர். அதிலிருந்து கிடைக்கும் பூக்களை பூஜைக்கு பயன்படுத்துவதுண்டு.

நன்மை தரும் அரளி செடிகள்

நன்மை தரும் அரளி செடிகள்

இதன் அறிவியல் பயன்பாட்டை தெரிந்து தான், பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவில் (Centre Median) அரளி செடிகளை நட்டு வைத்து வளர்த்து வருகிறார்கள். வாகனங்கள் வெளியிடும் நச்சுக் காற்றை தன்னுள் கிரகித்துக்கொண்டு, சுத்தமான காற்றை வெளியிடுகிறது. எந்நேரமும் வாகனங்கள் சென்று வருவதால் அந்த இடத்திலுள்ள காற்றில் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் கார்பன்-மோனாக்ஸைடு என இரண்டும் சேர்ந்து நச்சுத் தன்னையுள்ள மாசு அதிக அளவில் நிறைந்திருக்கும். அதை கட்டுப்படுத்தவே தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் அரளிச் செடிகளை வளர்த்து வருகின்றனர்.

மஞ்சள் அரளிச்செடிகள்

மஞ்சள் அரளிச்செடிகள்

அரளிச் செடியில் மூன்று வகைகள் உள்ளன. சிவப்பு, வெள்ளை மற்றும் பொன் மஞ்சள் என மூன்று வகைகளில் வளரும் இதன் தாவரவியல் பெயர் ஓலியான்டர் (Oleander) எனப்பெயர். செவ்வரளி மற்றும் வெள்ளை அரளிச் செடிகளை வீட்டில் பெரும்பாலும் வளர்ப்பதில்லை. இதன் இலை மற்றும் காய்களில் அதிக விஷத்தன்மை நிறைந்திருப்பதால், குழந்தைகள் தொட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், தற்கொலை செய்ய நினைப்பவர்கள் இந்தச் செடியின் காய்களை பறித்து பயன்படுத்திவிடுவார்கள் என்பதாலும் பெரும்பாலான வீடுகளில் இச்செடியை வளர்ப்பதில்லை.

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே

மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே

நகரப்புறங்களில் உள்ள வீடுகளில் பொன் மஞ்சள் நிற அரளிச் செடிகளை அதிக அளவில் வளர்த்து வருகிறார்கள். மஞ்சள் அரளிச் செடிகளை வீட்டில் வளர்ப்பதால், சுத்தமான காற்றோட்டம் கிடைப்பதோடு, மஞ்சள் நிறம் என்பது மங்களத்தின் அடையாளம் என்பதால், அதிக அளவில் செல்வ வளத்தை வீட்டிற்கு கொண்டு வரும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனாலேயே வீடுகள் தோறும் மஞ்சள் அரளிச் செடியை தற்போது வளர்க்க தொடங்கிவிட்டனர். போதுமான இடவசதி இல்லாதவர்கள் வீட்டு மாடிகளில் சிறிய தொட்டிகளில் வளர்க்கத் தொடங்கி விட்டனர். செவ்வரளி பூ சிவபெருமான், முருகன் மற்றும் துர்கைக்கும் உகந்த மலராகும். ஆகவே செவ்வரளி செடியை பாதுகாப்பாக வீட்டில் வளர்க்கலாம். இதனால் சுத்தமான காற்றோட்டம் கிடைப்பதோடு வீட்டைச் சுற்றிலும் பக்தி மணம் கமழும் என்பது உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vaastu Tips: Yellow Oleander Plants Give A Lot Of Wealth

Vastu Shastra is said to bring a lot of wealth to the house, because the yellow Oleander plants are grown in the house, get clean air and the yellow color is the sign of Mangala. This is why they are now starting to grow homemade yellow Oleander plants. Those who do not have enough space have begun to grow in small pots on the ground floor.
Story first published: Friday, March 13, 2020, 17:12 [IST]
Desktop Bottom Promotion