Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அக்டோபரில் இந்த 5 ராசிக்காரங்க அதிக பண பிரச்சனையையும், சிரமங்களையும் சந்திப்பாங்களாம்.. உஷார்...
2022 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இந்த 2022 அக்டோபர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தின் உதவியுடன் வரும் மாதங்கள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றுகின்றன. அதுவும் மனித வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகங்கள் தனது நிலையை மாற்றுகின்றன. இதனால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைத்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் மற்றும் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும்.

ஒருவரது வாழ்வில் நடக்கவுள்ள நல்ல விஷயங்களை அறிந்து கொள்வதை விட, சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், சற்று எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா? எனவே இப்போது 2022 அக்டோபர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும் என்பதைக் காண்போம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் தொல்லை நிறைந்த மாதமாக இருக்கும். இம்மாதத்தில் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். தேவையில்லாத செலவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். மேலும் இம்மாதத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சவால் நிறைந்ததாக இருக்கும். தொழிலை நினைத்து சற்று கவலைப்பட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் உறவுகளிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் எதை பேசும் முன்பும் யோசித்து பேசுங்கள். இல்லாவிட்டால் வருத்தப்பட வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சவாலானதாக இருக்கும். இந்த ராசியைச் சேர்ந்த பலர் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதோடு வேலை மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இம்மாதத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதத்தில் நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதலிப்பவர்களுக்கு இம்மாதம் சற்று சவாலானதாக இருக்கும். இம்மாதத்தில் அனைத்து விஷயத்திலும் சற்று பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பல பிரச்சனையை சந்திப்பீர்கள். குறிப்பாக உறவில் மனக்கசப்பு ஏற்படாமல் இருக்க, பேசும் போது அதிக கவனமாக இருங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கிரக நிலைகளால் அதிக செலவுகளை சந்திக்கக்கூடும். இதனால் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இம்மாதத்தில் எந்த செலவையும் நன்கு சிந்தித்த பின் செய்யுங்கள். இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications