Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
மார்ச் மாசம் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும்.. உங்க ராசியும் இதுல இருக்கான்னு பாருங்க..
மார்ச் மாதத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களால் 4 ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
Unlucky Zodiac Signs In March 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் ராசி மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலனும், சிலருக்கு கெடு பலன்களும் கிடைக்கலாம். அந்த வகையில் 2023 மார்ச் மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. அதில் செவ்வாய் மிதுன ராசிக்கும், சுக்கிரன் மேஷ ராசிக்கும், சூரியன் மீன ராசிக்கும் செல்கிறார்கள்.

அதே சமயம் இந்த மாதத்தில் புத்திகாரகன் புதன் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். அதுவும் இந்த மாதம் முழுவதும் புதன் அஸ்தமன நிலையிலேயே ராசியை மாற்றுகிறார். இதனால் புதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் தடைபடும். இந்த கிரகங்களின் ராசி மாற்றங்களால் 4 ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது அந்த துரதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்வில் மன உளைச்சல், பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். இருப்பினும் சனி பகவான் நல்ல நிலையில் இருப்பதால், பண வரவில் பிரச்சனை ஏதும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று சுமாராகவே இருக்கும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கர்ப்பிணிப் பெண்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தின் தொடக்கமே மன உளைச்சல் நிறைந்ததாக இருக்கும். வேலையைப் பற்றிய கவலை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடக்க வேண்டும். மாணவர்களுக்கு மார்ச் 12 வரையிலான காலம் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கு பின் கஷ்டமாக இருக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், சனி உதயமான பின் உங்கள் ஆராக்கியம் மேம்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் சாதகமற்றதாக துரதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் விபத்துக்கள், காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மார்ச் 12 வரை வேலை மற்றும் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்தாலும், மார்ச் 12-க்கு பின் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தால், இம்மாதத்தில் ஒரு முடிவு கிடைத்துவிடும். மொத்தத்தில் இந்த மாதமானது ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதமானது தீங்கை விளைவிக்கும் மாதமாக இருக்கும். அதுவும் இந்த மாதத்தில் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, நிதி நிலையும் பாதிக்கப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனைகளை வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. கண்கள் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். தாயின் ஆரோக்கியம் மோசமடையலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications