Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ஜூலை மாசம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாசமா இருக்குமாம்.. கவனமா இருங்க...
2022 ஆம் ஆண்டின் முதல் பாதியை கடந்து, அதாவது 6 மாதங்களைக் கடந்து, இரண்டாம் பாதியான ஏழாவது மாதத்தில் நுழைகிறோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜூலை மாத கிரக நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது.
ஜூலை மாதம் மிகவும் முக்கியமான மாதமாகும். 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியை கடந்து, அதாவது 6 மாதங்களைக் கடந்து, இரண்டாம் பாதியான ஏழாவது மாதத்தில் நுழைகிறோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜூலை மாத கிரக நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சொல்லப்போனால் இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு மோசமான மாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இம்மாதம் சிலருக்கு அதிர்ஷ்டத்தை தரும் மாதமாகவும் இருக்கும். இவை அனைத்தும் கிரக நிலைகளைப் பொறுத்தது.

கிரகங்கள் நமது வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றில் மாற்றம் ஏற்படும் போது வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும். இப்போது கிரக நிலைகள் மற்றும் பெயர்ச்சிகளால் ஜூலை மாதம் எந்த ராசிகளுக்கு எல்லாம் பிரச்சனைகள் நிறைந்த மோசமான மாசமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் ஜூலை மாதத்தில் குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி இடையூறுகளை சந்திப்பார்கள். இவர்களுக்கு இம்மாதத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கதவுகள் மூடப்பட்டிருக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் நெருக்கடியை இவர்களால் எதிர்கொள்ளவே முடியாது. இம்மாதத்தில் முன்னேற்றத்தைக் காண்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதனால் ஆழ்ந்த துன்பத்தில் மூழ்கியிருப்பார்கள்.

தொடர்ச்சி...
அதுமட்டுமின்றி, ரிஷப ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் பொருளாதார ரீதியாக பின்னடைவுகளையும், கஷ்டங்களையும் சந்திப்பார்கள். வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறையும். குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மை நீடிக்கும். மொத்தத்தில் தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒருவித விரக்தியை உணர்வார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் உடல் மற்றும் மனச்சோர்வை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகள் பல சவால்களை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள். நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்தாவிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு கொண்டு செல்லும். அதுமட்டுமின்றி, உங்கள் வேலையை இழக்க நேரிடும். எனவே பணியிடத்தில் கவனமாக செயல்படுங்கள்.

தொடர்ச்சி...
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் சிரமப்படும் காலமாகும். இம்மாதத்தில் நெருக்கடிகளை அதிகம் சந்திப்பீர்கள். இந்த மாதத்தில் வெற்றியானது உங்கள் அருகில் கூட வராது. எனவே இந்த மாதத்தில் எந்த செயலை செய்யும் போதும் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இம்மாதத்தில் பலவிதமான நெருக்கடிகள் உங்களைத் தேடி வரும். எனவே இந்த வருடத்தில் ஜூலை மாதம் மிகவும் மோசமான மாதமாக இருக்கும். ஆகவே கவனமாக இருங்கள். உறவுகளில் விரிசல் ஏற்பட்டு பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீங்கள் அடிக்கடி மற்றவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். ஆனால் யாரும் உங்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். எனவே இதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

தொடர்ச்சி...
ஜூலை மாதத்தில் உங்கள் வாழ்க்கை குறித்து முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சித்து தோல்வி அடைவீர்கள். வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். வாய்ப்புகளைத் தேடி அலைவீர்கள். அதே வேளையில் பல நல்ல வாய்ப்புக்களையும் நீங்கள் இழப்பீர்கள். இந்த மாதத்தில் உங்களின் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்காது. எனவே கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications