Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்கும் எந்த மாதம் மோசமான மாதமாக இருக்கும் தெரியுமா?
2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எந்த மாதம் மிகவும் மோசமானதாக, துரதிர்ஷ்டம் நிறைந்தாக இருக்கும் என்பதை இப்போது காண்போம்.

2022 ஆம் வருடத்தைப் பற்றிய பல விஷயங்கள் நமது மனதில் ஓடிக் கொண்டிருக்கும். இதுவரை நாம் 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்குமான பலன்களைப் பார்த்தோம். பொதுவாக ஒருவருக்கு ஒரு வருடத்தில் வரும் அனைத்து மாதங்களுமே சிறப்பாக இருக்காது, அதேப் போல் அனைத்து மாதங்களுமே மோசமாக இருக்காது. ஆனால் நிச்சயம் சில மாதங்கள் மிகவும் கடினமாக, பல சோதனைகளை சந்திக்கும் மாதங்களாக இருக்கும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எந்த மாதம் மிகவும் மோசமானதாக, துரதிர்ஷ்டம் நிறைந்தாக இருக்கும் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் மிகவும் சோதனை நிறைந்த மற்றும் சவால் நிறைந்த கடினமான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தை உணர்வதோடு, மிகவும் பதட்டத்துடனேயே இருப்பார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் எல்லாமே தவறாக நடக்கும். குறிப்பாக தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் இம்மாதத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க அதிக சிரமப்படுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் கடினமான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் எதுவும் சரியாக நடக்காது மற்றும் கிரகங்கள் உங்களுக்கு எதிராகவே இருப்பதால், அனைத்துமே தவறாக நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் 2022 ஆம் ஆண்டின் மே மாதத்தில் அதிக கஷ்டப்படுவார்கள். உறவில் இருப்பவர்கள் தவறான புரிதல்களால் துணையுடன் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இம்மாதத்தில் எதையும் மனதில் வைத்துக் கொண்டு இல்லாமல், மனம் திறந்து பேச முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! 2022 ஆம் ஆண்டில் உங்களுக்கு ஜூலை மாதம் மோசமான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் பொறுமையை சோதிக்கும் வகையில் பல சோதனைகளை கடக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த ஜூலை மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் மோசமாக இருக்கும். இம்மாதத்தில் நீங்கள் போடும் திட்டங்கள் எதுவுமே நடக்காது மற்றும் அப்படியே நடந்தாலும் அது தோல்வியில் முடியும். முன்னேற்றம் காண முடியாததால் இம்மாதத்தில் விரக்தியடைவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் சாதகமற்றதாக இருக்கம். இம்மாதத்தில் வணிகத்திலும், நிதியிலும் இடையூறுகள் ஏற்படும். இம்மாதத்தில் உங்களுக்கு நெருக்கமானவர் உங்களைப் பிரியலாம். இதனால் உங்களால் எதையும் திறம்பட கையாள முடியாமல் போகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் மோசமானதாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை பதற்றம் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் காதலை தெரிவிக்க நினைத்தால், அதற்கு இந்த மாதம் சாதகமான மாதம் அல்ல.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 2022 மோசமான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் காதல் வாழ்க்கை அல்லது வேலையில் முடிவுகளை எடுக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். முக்கியமாக என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் கட்டுப்படுத்தமுடியாத செலவுகளைச் செய்வீர்கள். இந்த வருடத்திலேயே இந்த மாதத்தில் மிகவும் சிரமப்படுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் சோதனை நிறைந்த மாதமா இருக்கும். உறவில் இருப்பவர்கள் அல்லது டேட்டிங் செய்பவர்களுக்கு, இந்த மாதம் சிரமமிக்கதாகஇருக்கும் ..

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் அனைத்தும் தவறாக நடக்கும். இதனால் மனம் உடைந்து போகாமல், நேர்மறையாக இருக்க போராடுவீர்கள். இருப்பினும் நீங்கள் தொலைந்தது போன்று உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications