For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென்னிந்தியாவை மொத்தம் எத்தனை வம்சத்தினர் எத்தனை ஆண்டுகள் ஆண்டார்கள் தெரியுமா?

|

இந்தியா என்பது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. மற்ற உலகநாடுகளைக் காட்டிலும் இந்தியா பல விஷயங்களில் மேலோங்கியதாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்தியா பல மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் நிறைந்த தனித்துவம் வாய்ந்த நாடாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தென்னிந்தியாவும், வடஇந்தியாவும் பல தளங்களில் வித்தியாசமானயவையாக இருக்கிறது.

தென்னிந்தியா பொதுவாக சுற்றுலாத்தங்களுக்கும், அதன் வரலாற்றுக்கும் புகழ் வாய்ந்த பகுதியாகும். இங்கு இருக்கும் சில சிறப்புகள் வடஇந்தியா மட்டுமின்றி உலகத்தின் எந்த பகுதியிலும் காண முடியாததாக இருக்கிறது. இந்த பதிவில் தென்னிந்தியா பற்றிய சில சுவராயஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 படையெடுப்பாளர்கள்

படையெடுப்பாளர்கள்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று ஆங்கிலேயர்களின் ஊடுருவலுக்கு முன்பு வரை எந்த படையெடுப்பாளாராலும் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை. இறுதிவரை தென்னிந்தியா அதன் பூர்வகுடி மன்னர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது.

 பேரரசுகள்

பேரரசுகள்

தென்னிந்தியா 18-க்கும் மேற்பட்ட வம்சங்களால் கிட்டதட்ட 4000 ஆண்டுகள் ஆளப்பட்டு வந்தது. இதில் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், சதாவஹனர்கள், பல்லவர்கள், ஹொய்சாலாக்கள், கடம்பாக்கள், வோடியர்கள், ககாதியாக்கள், ராஷ்டிரகூடர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு ஆகியவை மிக முக்கியமான வம்சங்கள் ஆகும். தென்னிந்தியாவில் முஸ்லீம் பேரரசின் எழுச்சி 1323 இல் நடந்தது, பின்னர் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து நிஜாம்களும், பிரிட்டிஷார்களும் ஆட்சி செய்யத் தொடங்கினர்.

பட்டு மற்றும் பருத்தி

பட்டு மற்றும் பருத்தி

தென்னிந்தியாவின் பட்டு புடவைகளுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய புகழ் உள்ளது. கேரளாவின் பட்டுபுடவைகள், தெலங்கானாவின் போச்சம்பள்ளி பட்டுப்புடவைகள், காஞ்சிபுரத்தின் பட்டுப்புடவைகள் போன்றவை உலக அரங்கத்தில் தென்னிந்தியாவின் சின்னமாக உயர்ந்து நிற்கின்றன. பட்டு உற்பத்தியின் தாயகம் என்றே தென்னிந்தியாவை கூறலாம்.

MOST READ:முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவில் என்ன உள்ளது? முஸ்லிம் அல்லாதவர்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை?

 மொழிகள்

மொழிகள்

இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் அதில் ஆறு மட்டும்தான் இலக்கிய நயம் வாய்ந்த மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் 4 மொழிகள் தென்னிந்தியாவை சேர்ந்தது என்பது நாம் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். அனைத்து தென்னிந்தியர்களும் குறைந்தது இரண்டு மொழிகளை தெரிந்து வைத்திருப்பார்கள். உலகின் மிக பழமையான மொழியாக கருதப்படுவது இலத்தீன்தான். ஆனால் அந்த மொழி இப்போது எங்கு வழக்கில் இல்லை, இன்றும் உயிர்ப்புடனும், கோடிக்கணக்கான மக்கள் பேசும் மொழியாகவும் இருப்பதுடன் உலகின் பழமையான மொழியாக இருக்கும் பெருமை தமிழுக்கு மட்டும்தான் உள்ளது.

 இயற்கை சார்ந்த இடம்

இயற்கை சார்ந்த இடம்

தென்னிந்தியாவில் 450 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், சுமார் 140 பாலூட்டி இனங்கள், 260 ஊர்வன மற்றும் 175 நீர்வீழ்ச்சிகள் உள்ளன; 6000 க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் உள்ளன. ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் பெரும்பாலானவை தென்னிந்தியாவிலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பரப்பளவு

பரப்பளவு

இந்திய துணைக்கண்டத்தின் மொத்த பரப்பளவில் 19.31 சதவீதத்தை தென்னிந்தியா உள்ளடக்கியுள்ளது. இந்தியாவின் பரப்பளவில் இது கிட்டதட்ட 245, 480 சதுர மீட்டர் ஆகும். தென்னிந்தியாவில் வெறும் நான்கு மாநிலங்களும், ஒரு யூனியன் பிரேதசம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார முன்னேற்றம்

பொருளாதார முன்னேற்றம்

தென்னிந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் என்பது வடஇந்தியாவை விட இருமடங்கு அதிகமாகும். தென்னிந்தியாவின் ஆண்டு சராசரி பொருளாதார வளர்ச்சி 17 சதவீதம் ஆகும், வடஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 8 சதவீதம்தான். இந்தியாவின் மொத்த GDP-ல் 1.7 சதவீதம் தென்னிந்தியாவை சார்ந்து இருக்கிறது.

MOST READ:கள்ளக்காதலில் ஈடுபடுவதால் பெண்களுக்கு மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா?

 மசாலாப்பொருட்கள்

மசாலாப்பொருட்கள்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே மசாலாப் பொருட்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா ஒரு வருடத்திற்கு 1.5 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்கிறது. இதில் பாதிக்கும் மேலான அளவு தென்னிந்தியாவில் இருந்து வருகிறது. இந்த பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது, அதனால்தான் போர்ச்சுக்கல் தென்னிந்தியாவை குறிவைத்து முதலில் வந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown Facts About South India

Here are some unknown interesting facts about south india.
Story first published: Thursday, January 9, 2020, 15:31 [IST]