For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமசூத்ராவில் வெறும் 20 சதவீதம்தான் பாலியல் நிலைகளை பற்றியதாம்... அப்ப மீதி எதைப்பற்றியது தெரியுமா?

|

காமசூத்ரா என்பது பாலியல் நிலைகளின் பொக்கிஷம் என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் அதில் அதனைப் பற்றி மட்டுமே கூறியிருப்பதாக நாம் நினைத்தால் நம்முடைய எண்ணம் முற்றிலும் தவறாகும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இது இப்போது வரை பாலியல் கல்வியின் முக்கியான மையமாக கருதப்படுகிறது.

வாழ்க்கையில் உற்சாகத்தை மீண்டும் கொண்டு வர உதவும் காமசூத்ரா பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம். பாலியல், நிர்வாணம் என்ற உண்மைகளைத் தவிர, காமசூத்ரா பற்றிய சில அரிய உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை 1

உண்மை 1

காம சூத்திரம் அடிப்படையில் சமஸ்கிருத இலக்கியத்தில் இயற்றப்பட்ட மனிதர்களின் பாலியல் நடத்தை ஆகும், இது வேத மரபில் இந்து தத்துவஞானியாக இருந்த வத்ஸ்யானா எழுதியது, அவர் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

உண்மை 2

உண்மை 2

"காம" என்பது இந்து வாழ்க்கையின் நான்கு குறிக்கோள்களில் ஒன்றாகும், அதாவது ஒரு நபரின் பாலியல் ஆசை மற்றும் "சூத்திரம்" என்பது பொருள்களை ஒன்றாக வைத்திருக்கும் ஒரு நூல் அல்லது கோடு (அதாவது மனிதனை குறிக்கிறது).

உண்மை 3

உண்மை 3

காம சூத்திரம், உலகம் முழுவதும் ஆக்கபூர்வமான பாலியல் நிலைகளை மட்டும் கூறுவதாக கருதப்படுகிறது அல்லது சித்தரிக்கப்படுகிறது, ஆனால் உண்மையில், காம சூத்திரத்தில் 20% மட்டுமே உண்மையில் பாலியல் நிலைகளைப் பற்றியது.

வழுக்கைத்தலையை குணமாக்க செய்யப்பட்ட பண்டையகால சிகிச்சைகள்... இதுக்கு சொட்டையாவே இருந்திரலாம்...!

உண்மை 4

உண்மை 4

வத்ஸ்யாயனா, பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை ஒப்பிட்டு, அவர்களின் படைப்புகளை தனது சொந்த படைப்பான காம சூத்திரத்துடன் தொகுத்தார். தனது படைப்பின் ஏழு முக்கிய பகுதிகள் தத்தகா (முதல் பகுதி), சுவர்ணனபா (இரண்டாம் பகுதி), கோட்டகமுக (மூன்றாம் பகுதி), கோனார்டியா (நான்காம் பகுதி), கோனிகபுத்ரா (ஐந்தாம் பகுதி), சாராயணா (ஆறாவது பகுதி) மற்றும் குச்சுமாரா (ஏழாவது பகுதி) ஆகியவை நீண்ட படைப்புகளின் சுருக்கம் என்று அவர் கூறினார்.

உண்மை 5

உண்மை 5

காமசூத்ரா என்பது பொதுவாக புருஷார்த்தங்கள் என்று அழைக்கப்படும் "வாழ்க்கையின் நான்கு முக்கிய குறிக்கோள்களை" அடிப்படையாகக் கொண்டது.

1. நல்லொழுக்கம் என்று பொருள்படும் தர்மம்.

2. அர்த்த என்று பொருள்படும் பொருள் செழிப்பு.

3. காம அதாவது ஆசை

4. விடுதலை என்று பொருள்படும் மோட்சம்.

உண்மை 6

உண்மை 6

பல்வேறு தத்துவஞானிகள் கூறுகையில், தர்மம், அர்த்தம் மற்றும் காமா ஆகியவை அன்றாட வாழ்க்கையின் நோக்கங்கள், அதே நேரத்தில் மோட்சம் மரணம் மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். காமசூத்திரம் இதுபற்றி கூறும் போது, அர்த்தத்தை விட தர்மம் சிறந்தது, காமாவை விட அர்த்தம் சிறந்தது. ஆனால் மனிதர்களின் வாழ்வாதாரத்திற்காக அர்த்தாவை எப்போதும் மன்னர் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த ராசிக்காரங்க தாங்கள் காதலிக்கிறவங்கள எப்பவும் சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுவாங்களாம்... உஷார்!

உண்மை 7

உண்மை 7

வத்ஸ்யாயனா, தனது காம சூத்திரத்தில், புலன்கள் ஆபத்தானவை என்பதை ஒப்புக்கொள்கிறார். " முழு பாய்ச்சலில் இருக்கும் ஒரு குதிரை தனது ஆற்றலால் கண்மூடித்தனமாக, பாதையில் எந்த இடுகை அல்லது துளை அல்லது பள்ளத்தில் கவனம் செலுத்துவதில்லை, அதேபோல இரு காதலர்கள் உணர்ச்சிமிகுதியால் கண்மூடித்தனமாக, பாலியல் போரின் உராய்வில், அவர்களின் கடுமையான ஆற்றலில் சிக்கி, ஆபத்துக்கு கவனம் செலுத்துவதில்லை " என்று கூறியுள்ளார்.

உண்மை 8

உண்மை 8

புத்தர் அத்தகவகாவில் அமைந்துள்ள ஒரு காம சூத்திரத்தையும் பிரசங்கித்துள்ளார், இது சூத்திர எண் 1 ஆகும். இருப்பினும், இந்த காம சூத்திரம் மிகவும் மாறுபட்ட தன்மையைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது மனிதர்களில் இன்பங்களைத் தேடும் அபாயங்களுக்கு எதிராக எச்சரிக்கிறது.

உண்மை 9

உண்மை 9

மேற்கத்திய உலகில் பலர் காம சூத்திரத்தை தாந்த்ரீக பாலினத்திற்கான ஒரு கையேடு என்று தவறாக கருதுகின்றனர். இந்து தந்திரத்தின் மிகப் பரந்த மரபுக்குள் பாலியல் நடைமுறைகள் இருக்கும்போது, காம சூத்திரம் ஒரு தாந்த்ரீக உரை அல்ல அல்லது எந்தவொரு தாந்த்ரீக நடைமுறைகளையும்அது ஊக்குவிப்பதும் இல்லை.

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் மனைவிக்கு உங்க மேல இருந்த காதல் காணாமல் போய்விட்டது என்று அர்த்தம்!

உண்மை 10

உண்மை 10

காம சூத்திரத்தின் மிகவும் பரவலாக அறியப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு 1883 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ஓரியண்டலிஸ்ட் மற்றும் எழுத்தாளர் சர் ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் பெயரில் தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்டது. எவ்வாறாயினும், பர்ட்டனின் நண்பரின் வழிகாட்டுதலிலும், சிவராம் பரசுராம் பைடே என்ற மாணவரின் உதவியுடனும் இந்திய தொல்பொருள் ஆய்வாளர் பகவான் லால் இந்திராஜி அவர்களால் தலைமைப் பணி செய்யப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown Facts About Kamasutra

Check out some eye-opening facts about Kama sutra everyone should know.
Story first published: Wednesday, May 27, 2020, 17:35 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more