Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பற்றி பலரும் அறியாத உண்மைகள்... அமெரிக்காவின் எதிர்காலம் என்னவாகும்?
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் நவம்பர் 7 சனிக்கிழமையன்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தோற்கடித்து அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஆனார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுக்கு முழு உலகமும் காத்திருக்கையில், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் அதிபர் ட்ரம்ப் தோல்வியுற்றதை அமெரிக்க மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். ஜோ பிடன் (ஜோசப் ராபினெட் பிடென்) அமெரிக்க அரசியலிலும் பல ஊடக நிறுவனங்களிலும் ஒரு புதிய முகம் அல்ல, கடந்த 30 ஆண்டுகளாக இந்த வாய்ப்புக்காக தான் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் நவம்பர் 7 சனிக்கிழமையன்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தோற்கடித்து அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஆனார். பிடென் 2009 முதல் 2017 வரை ஒபாமா நிர்வாகத்தின் கீழ 47 வது துணை ஜனாதிபதியாக பணியாற்றினார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக செனட்டில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் இருந்தார். இது அவரைப்பற்றி அனைவரும் அறிந்த விஷயங்கள்தான், ஆனால் அவரைப் பற்றி பலரும் அறியாத தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

#1
ஜோ பிடன் நவம்பர் 20, 1942 அன்று அமெரிக்காவின் ஸ்க்ரான்டன் பென்சில்வேனியாவில் பிறந்தார். அவர் பிறந்த காலத்தில் பிடனின் தந்தை ஒரு செல்வந்தராக இருந்தார், ஆனால் பின்னர் சில நிதி பின்னடைவுகள் காரணமாக, குடும்பம் பல நிதி சிக்கல்களை எதிர்கொண்டது.

#2
ஜோ பிடன் படிப்பில் அதிகம் ஆர்வம் உள்ளவராக இருந்தார், டெலாவேர் பல்கலைக்கழகத்தில் படித்த அவர் 1968ல் சிராகஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கச் சென்றார்.

#3
சட்டம் படித்த இரண்டே ஆண்டுகளில் அவர் அரசியலில் நுழைந்தார். 1970 ஆம் ஆண்டில் அவர் நியூ கேஸ்டல் நாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அமெரிக்க வரலாற்றிலேயே தேர்ந்தேடுக்கப்பட்ட ஆறாவது இளைய செனட்டராக ஜோ பிடன் மாறினார்.

#4
பிடென் செனட் வெளியுறவுக் குழுவின் நீண்டகால உறுப்பினராக இருக்கும் பெருமையை பெற்றுள்ளார். அதன்பிறகு அவர் அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிடனின் அரசியல் பயணம் என்பது நீண்ட வரலாற்றை உடையது.

#5
2008 ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்ற பின்னர், பிடென் மீண்டும் செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ஒபாமாவின் நிர்வாகத்தில் துணை ஜனாதிபதியாக பணியாற்றினார். மேலும் ஒபாமா நிர்வாகத்தில் பணியாற்றிய நான்காவது மிக மூத்த செனட்டர்களில் ஒருவராக இருந்தார்.

#6
2010 வரி நிவாரண சட்டம், பின்னர் 2012 ஆம் ஆண்டின் அமெரிக்க வரி செலுத்துவோர் நிவாரண சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களை நிறைவேற்றுவதற்காக காங்கிரஸின் குடியரசுக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் பணியாற்றினார். இதன்மூலம் அவர் குடியரசு கட்சியினருடனும் தனது நட்புறவை வளர்த்துக் கொண்டார்.

#7
பிடன் இராணுவ செயல்பாட்டிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அவர் அமெரிக்கா-ரஷ்யா புதிய ஸ்டார்ட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பணியாற்றினார் மற்றும் லிபியாவில் இராணுவத் தலையீட்டை ஆதரித்தார். 2011 ஆம் ஆண்டில் அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதன் மூலம் ஈராக்கிற்கு யு.எஸ் கொள்கையை வகுப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். ஜனவரி 2017 இல், பிடனுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவால் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது.

#8
தன்னுடைய அற்புதமான அரசாங்க அனுபவத்துடன், பிடென் இன்றைய உலகில் ஒரு நிலையான மற்றும் சக்திவாய்ந்த முக்கிய நபராக தன்னை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். தற்போது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் 2021 ஜனவரியில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்பார். இதனால், அமெரிக்க வரலாற்றில் டொனால்ட் டிரம்ப் (74) க்குப் பிறகு அவர் மிக வயதான ஜனாதிபதியாக (78) பதவியேற்பார்.



Click it and Unblock the Notifications











