For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

18 வயதிலேயே ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்ட இந்தியாவின் இளம் புரட்சியாளர் யார் தெரியுமா?

|

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. பல ஆண்டுகள் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகம் மற்றும் வெளிப்படுத்திய வீரத்தின் விளைவாக 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் பலர் தங்கள் இளமைக்காலத்தை தொலைத்து, சிறைத்தண்டனை அனுபவித்து என்று பல விதங்களில் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.

சிலர் தங்கள் உயிரையே தியாகம் செய்து சுதந்திரத்திற்காக போராடினர். ஆங்கிலேயர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கும், தூக்குக் கயிறுகளுக்கும் தங்களின் உயிரை கொடுத்த எண்ணற்ற தியாகிகளை இந்த சுதந்திர தினத்தில் நாம் நினைவு கூற வேண்டும். அந்த வகையில் 18 வயதிலேயே சுதந்திரத்திற்காகப் போராடியதற்காக ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார் குதிராம் போஸ் என்ற மாபெரும் சுதந்திர போராட்ட வீரர். அவரைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குதிராம் போஸ் எங்கு வளர்ந்தார்?

குதிராம் போஸ் எங்கு வளர்ந்தார்?

குதிராம் போஸ் டிசம்பர் 3, 1889 இல், குதிராம் மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் ட்ரைலோக்யநாத் போஸ் மற்றும் லட்சுமிப்ரியா தேவிக்கு மகனாகப் பிறந்தார். குதிராம் மூன்று சகோதரிகளுக்கு ஒரே சகோதரன். அவர் குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர் இருவரும் இறந்துவிட்டனர். குதிராம் அவரது மூத்த சகோதரி அபரூபா ராயால் வளர்க்கப்பட்டார்.

புரட்சிகர போராளி

புரட்சிகர போராளி

இளைஞராக இருந்த போதே, அவர் புரட்சி குழுக்களில் ஆர்வத்துடன் பங்கேற்று அவர்களின் போராட்டங்களில் பங்கு கொண்டார். ஸ்ரீ அரவிந்தரும் சகோதரி நிவேதிதாவும் மிட்னாபூருக்குச் சென்றபோது, அங்கு இருக்கும் புரட்சிக் குழுக்களுடன் பல விவாதங்களை நடத்தினர், மேலும் குதிராம் போஸ் ஒரு ஆர்வமிக்க உறுப்பினராக இருந்தார்.

எப்போது கைது செய்யப்பட்டார்?

எப்போது கைது செய்யப்பட்டார்?

15 வயதில், அவர் அனுஷிலன் சமிதியின் தன்னார்வத் தொண்டரானார் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்ததற்காக கைது செய்யப்பட்டார். பரிந்திர குமார் கோஷ் போன்ற பிற புரட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அதன்பின் 1905 ஆம் ஆண்டு வங்காளம் பிரிக்கப்பட்ட போது ஆங்கிலேயருக்கு எதிரான பல போராட்டங்களில் கலந்து கொண்டார். 15 வயதில், வெடிகுண்டுகளை தயாரிக்க அவர் கற்றுக்கொண்டார்.

MOST READ: பல லட்சம் கோடிக்கு அதிபதியான உலகின் ஒரே அரசர் இவர்தான்... இவரின் சொத்து மதிப்பு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்...

டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட் யார்?

டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட் யார்?

டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட் ஒரு பிரிட்டிஷ் நீதித்துறை அதிகாரி மற்றும் கல்கத்தாவின் தலைமை பிரசிடென்சி மாஜிஸ்திரேட் ஆவார். கொல்கத்தாவில் உள்ள அவரது நீதிமன்றத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கு எதிரான ஏராளமான வழக்குகளை அவர் கையாண்டார். இந்திய தேசியவாதிகள் மீதான அவரது தீர்ப்புகள் தகுதி அடிப்படையிலானவை அல்ல மாறாக வெறுப்பு மற்றும் பாரபட்சம் சார்ந்ததாக இருந்தது. அவர் பூபேந்திரநாத் தத்தா மற்றும் ஜுகாந்தரின் பிற ஆசிரியர்களின் விசாரணைகளை மேற்பார்வையிட்டார், அவர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை விதித்தார். இருப்பினும், கிங்ஸ்ஃபோர்டை கொல்ல முதல் முயற்சி புத்தக வெடிகுண்டு வடிவில் இருந்தது, ஹேம்சந்திர கனுங்கோ (ஐரோப்பாவில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொண்ட ஒரு புரட்சியாளர்) அதை செய்தார். அது தோல்வியில் முடிந்ததால் குதிராம் போஸ் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்டை கொல்ல முடிவெடுத்தார்.

தவறான தாக்குதல்

தவறான தாக்குதல்

பிரஃபுலா சாகியுடன் சேர்ந்து, பிரிட்டிஷ் பாரிஸ்டர் பிரிங்கிள் கென்னடியின் குடும்பத்துடன் பிரிட்ஜ் விளையாட்டிற்குப் பிறகு டக்ளஸ் வீட்டிற்குச் செல்லும் போது அவரைத் தாக்க குதிராம் முடிவு செய்தார். புரட்சியாளர்கள் டக்லஸுக்குப் பதிலாக கென்னடி குடும்பத்தின் வண்டியைத் தவறாகத் தாக்கினர் மற்றும் பிரிங்கிளின் மகள் மற்றும் மனைவியைக் காயப்படுத்தினர். பலத்த காயங்கள் ஏற்பட்ட அந்த இரண்டு பெண்களும் இறந்தன. குதிராம் மற்றும் பிரஃபுல்லா இருவரும் தப்பித்து இரண்டு வழிகளில் சென்றாலும், இருவரும் இறுதியில் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.

தூக்குத்தண்டனை

தூக்குத்தண்டனை

பிரபுல்லா பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்வதற்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட நிலையில், முசாபர்பூர் சதி வழக்கில் இரண்டு பெண்களைக் கொன்றதற்காக குதிராம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆகஸ்ட் 11, 1908 அன்று அவருக்கு 18 வயதாக இருந்தபோது தூக்கிலிடப்பட்டார். குதிராம் புன்னகையுடன் மரணத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது.

MOST READ: இந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிவது அவர்களுக்கு ஆபத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்துமாம்... ஜாக்கிரதை!

நினைவுச்சின்னங்கள்

நினைவுச்சின்னங்கள்

குதிராம் போஸ் நினைவாக, அவர் தூக்கிலிடப்பட்ட முசாபர்பூர் சிறைக்கு குதிராம் போஸ் நினைவு மத்திய சிறை என்று பெயரிடப்பட்டது. அவர் பிடிபட்ட ரயில் நிலையத்திற்கு வைனி நிலையத்திலிருந்து குதிராம் போஸ் பூசா ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அரங்கத்திற்கு அருகில் குதிராம் அனுஷிலன் கேந்திரா அமைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown Facts About Freedom Fighter Khudiram Bose in Tamil

Check out the unknown facts about Bengal's young freedom fighter Khudiram Bose.
Story first published: Friday, August 12, 2022, 11:58 [IST]
Desktop Bottom Promotion