Just In
- 24 min ago
இந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியுமா?
- 1 hr ago
சனிபகவான் அருள் வேண்டுமா? அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்க...
- 1 hr ago
உடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தவரா? அப்ப இந்த 5 வழியை ட்ரை பண்ணுங்க...
- 1 hr ago
2019ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 செக்ஸியான ஆண்கள் யார் என்று தெரியுமா?
Don't Miss
- News
கல்யாணம் ஆகி நாலே 4 நாள்தான்.. 2 மாத கர்ப்பம்.. ஆடிப்போன மாப்பிள்ளை..விசாரிச்சு பார்த்தா அடேங்கப்பா!
- Automobiles
லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக விபரம்
- Movies
இந்தப் பக்கம் இளையராஜா... அந்தப்பக்கம் நான்... எல்லாம் தன்னால அமைஞ்சது... உருகும் விஜய் ஆண்டனி
- Sports
பிளாஷ்பேக் 2019 : ட்விட்டரை மிரள வைத்த விராட் கோலியின் பதிவு.. காரணம் தல தோனி!
- Technology
அடடே., வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கா: சேமிப்புக்கான சிறந்த வழி
- Finance
2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறதா.. மத்திய அமைச்சர் விளக்கம்..!
- Education
Pariksha Pe Charcha 2020: பிரதமர் மோடியுடன் கலந்துரையாட ஓர் வாய்ப்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
70,000 பேரை பாலியல் அடிமையாக வைத்திருந்த அரசனுக்கு நேர்ந்த கொடூர முடிவு என்ன தெரியுமா?
நமது இந்திய வரலாற்றின் முக்கியமான காலகட்டம் என்றால் அது அந்நிய படையெடுப்புகள் நிகழ்ந்த காலம்தான். இந்தியாவின் வளத்தின் மீது ஆசை கொண்ட பல அந்நிய மன்னர்கள் அதன் மீது படையெடுத்தனர். நமக்கு தெரிந்த வரலாற்றை விட அந்நிய படையெடுப்பு என்பது இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வருங்கால சந்ததியினரின் இதயங்களில் சக்கரவர்த்திகள் மற்றும் ராணிகளின் சக்திவாய்ந்த உருவத்தை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே வரலாற்று நினைவுக் குறிப்புகள் நிறைய எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் நமக்கு தெரியாமல் மறைக்கப்பட்ட நமது வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள் என்பது மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். அப்படி நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் ஒரு மறைக்கப்பட்ட வரலாற்றைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இந்தியாவில் பாலியல்
இன்றுவரைக் கூட இந்தியாவில் பாலியல் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு சுதந்திரம் இல்லாத சூழ்நிலைதான் இருக்கிறது. ஆனால் பண்டைய கால இந்தியாவிற்கும், பாலியலுக்கும் மிகப்பெரிய தொடர்புள்ளது. அது மறைக்கப்படலாமே தவிர அது இல்லை என்று மறுக்க முடியாது.

அலாவுதீன் கில்ஜி குறித்த சர்ச்சைகள்
இது ராணி பத்மாவதியை பற்றியது அல்ல, சித்தூர் கோட்டையை ஆக்கிரமிக்க முயன்ற அலாவுதீன் கில்ஜி என்ற இரக்கமற்ற அரசனின் தனிப்பட்ட வாழ்க்கையும், அவரின் பாலியல் வேட்கையையும் பற்றியதாகும். இந்தியாவின் வரலாற்றில் அலாவுதீன் கில்ஜிக்கு ஒரு தனியிடம் உள்ளது ஆனால் அது நேர்மறையானதாக இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது.

அலாவுதீன் கில்ஜி - ராணி பத்மாவதி
அலாவுதீன் கில்ஜி தனது தீய கண்களையும் நோக்கத்தையும் எப்படி சித்தோரின் நிலம் மற்றும் ராணி பத்மாவதி மீது வைத்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கில்ஜி வம்சத்துக்கும் ராஜபுத்திரர்களுக்கும் இடையில் நட்புறவை விரிவுபடுத்தும் நோக்கில் அவர் சித்தூர் மன்னர் மற்றும் பத்மாவதியின் கணவர் ராவல் ரத்தன் சிங்குடன் பொய்யாக நட்பு கொண்டிருந்தார்.
MOST READ: முஸ்லீம் ஆண்கள் தங்கம் போடாமல் இருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

அலாவுதீன் கில்ஜியின் பாலியல் வாழ்க்கை
அலாவுதீன் கில்ஜியின் பாலியல் வாழ்க்கை என்பது இன்றுவரை விவாதத்திற்கு உரிய ஒன்றாக இருக்கிறது. அலாவுதீன் கில்ஜி இருபால் உறவிலும் நாட்டத்துடன் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தனது ஆட்சியின் போது, அலாவுதீன் தன்னை தீர்க்கதரிசி என்று அறிவித்தார். அவர் கட்டாய காசிஸின் அளவிற்குச் சென்றார், மத ஒப்புதல்களை தனது விருப்பங்களுக்கும் காரணங்களுக்கும் ஏற்றவாறு மாற்றியமைத்தார்.

அடிமைகளின் சந்தை
சமீப காலம் வரை நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு உண்மை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெனரல் மாலிக் கபூருக்கு அலாவுதீன் கில்ஜியின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த ஈடுபாடு பற்றியது. தேவதூத் பட்நாய்க்கின் கூற்றுப்படி, ஒருமுறை குஜராத்தில் உள்ள பிரபல அடிமைச் சந்தையான ‘பச்சா பாஸி'க்கு சென்ற செய்தபோது, அவரது அழகைக் கண்டு மயங்கி, அலாவுதீன் கில்ஜி மாலிக்கை வாங்கினார்.

அலாவுதீன் கில்ஜியின் விருப்பங்கள்
ஒவ்வொரு வரலாற்று ஆசிரியருக்கும் இதன் மீது வெவ்வேறு கருத்துக்கள் உள்ளது. ஆனால் அவர்கள் இந்தியாவில் பச்சா பாசியின் தோற்றம் மற்றும் இருப்பை மறுக்கவில்லை.பத்மாவதி மகாராணியின் அழகையும், சித்தூர் போர்வீரரின் வீரத்தையும் புகழ்ந்து பாடும் ஜெயசியின் நாட்டுப்புறக் கதைகள், அலாவுதீன் கில்ஜியின் பாலின ஆளுமையையும் குறிப்பிடுகின்றன.
MOST READ: இலட்சுமணனின் மரணத்திற்கு இராமரே எப்படி காரணமாக மாறினார் தெரியுமா?

பாலியல் அடிமைகள்
ஜெயசியின் கவிதையின்படி, அலாவுதீன் தனது பாலியல் வாழ்க்கைக்காக ஒரு அரண்மனையை வைத்திருந்தார். அதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கிட்டதட்ட 70,000 பேர் இருந்தனர். அதில் 30,000 பெண்கள் அலாவுதீன் கில்ஜியால் கொல்லப்பட்டவர்களின் மனைவிகள் ஆவர்.

மாலிக் கபூர்
அலாவுதீன் கில்ஜி மாலிக் கபூரை தனது பாலியல் பாதுகாவலராகவும் தலைமை ஆலோசகராகவும் வைத்திருந்தார். சித்தூரைத் தாக்கி, ராணி பத்மாவதி உட்பட 7000 பெண்களைக் கைப்பற்றுவது அலாவுதீனின் திட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பத்மாவதியை தனது அரச மனைவியாக மாற்ற எண்ணினார்.

ராணி பத்மாவதியின் முடிவு
ராணி பத்மாவதியும், மகாராணியும் கில்ஜியின் அடிமையாகவோ அவரின் அந்தப்புரத்தில் இருப்பதை விட மரணிப்பது மேல் என்று முடிவு செய்தனர். எனவே அனைவரும் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். அவர்களின் மரணத்தின் போது எழுந்த ஓலங்கள் பல வருடங்கள் கில்ஜியை வேட்டையாடியதாக கூறப்படுகிறது.
MOST READ: இந்த தகுதிகள் இருந்தால் மட்டும்தான் உங்களின் காதல் பர்பெக்ட்டான காதலாம் தெரியுமா?

அலாவுதீனின் பரிதாப நிலை
அந்த மரண ஓலங்கள் அலாவுதீன் கில்ஜியை மனரீதியாகவும், ஆரோக்கியரீதியாகவும் பாதித்தது. எனவே அவரது காதலன் மாலிக் கபூர், கில்ஜியின் சார்பாக, தனது ஆட்சியையும், ஒழுங்கு கொள்கைகளையும், தீர்ப்புகளையும் கையகப்படுத்த தனது முழு பலத்தோடு முயன்றார். அதற்குப்பின் தலைமை ஆட்சியாளர்களும், ஆலோசகர்களும் தலையிட்டு கில்ஜிக்கு பிறகு அவரின் மகன்கள்தான் ஆட்சியை தொடர வேண்டும் என்று கூறினார்.

அலாவுதீன் கில்ஜியின் மரணம்
கில்ஜியின் 3 வயது மகனான ஷிஹாப்-உத்-தின் உமரை அரியணையில் அமர்த்தி அரியணையின் பின்புறமிருந்து அமைதியாக பணியாற்றினார். அடுத்து அவர் அலாவுதீனை கொல்ல முடிவு செய்தார், தீங்கு விளைவிக்கும் விஷத்தை அலாவுதீனின் நரம்புகளில் செலுத்தி, அவரை எடிமாவால் இறக்கச் செய்தார்.
MOST READ: தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா?

மாலிக் கபூரின் மரணம்
அதன்பின் அவரின் மகன்களான கிஸ்ர் கான் மற்றும் ஷாடி கான் ஆகியோரின் கண்களை பறித்தார். அதற்குப்பின் இளவரசர் முபாரக்கின் கண்களையும் பறிக்கும்படி தனது படைக்கு உத்தரவிட்டார். அவர்களிடம் இருந்து தப்பித்து அலாவுதீன் கில்ஜிக்கு விசுவாசமாக இருந்த படையிடம் சென்றடைந்த இளவரசர் அவர்களிடம் நடந்ததைக் கூறினார். இதனால் மாலிக் கபூரின் தலை துண்டிக்கப்பட்டது.