Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மேஷத்தில் உள்ள ராகுவால் உருவான திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும்..
ராகு மேஷ ராசிக்கு சென்றதால் 3 ராசிகளில் திரிகோண ராஜயோகம் உருவானது. இந்த யோகம் ஒரு சுபயோகம். ஆகவே இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் வெற்றியைக் காண்பார்கள்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். கிரகங்கள் ராசியை மாற்றுவதால், சில ராசிக்காரர்கள் நற்பலன்களையும், சில ராசிக்காரர்கள் கெடு பலன்களையும் பெறலாம். அதில் கிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார்.

ராகு மேஷ ராசிக்கு சென்றதால் 3 ராசிகளில் திரிகோண ராஜயோகம் உருவானது. இந்த யோகம் ஒரு சுபயோகம். ஆகவே இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் வெற்றியைக் காண்பார்கள். மேலும் நல்ல பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியில் திரிகோண ராஜயோகம் உருவாவதால் மிதுன ராசிக்காரர்கள், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் வெற்றியைக் காண்பார்கள். ராகு மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் உள்ளார். இந்த வீடு வருமானம் மற்றும் லாப வீடாகும். ஆகவே இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். புதிய வருமானத்தினால் நிதி நிலை வலுவடையும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பணம் சம்பாதிப்பாற்கான வாய்ப்புக்கள் அமையும். மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதன் வணிகத்தின் கிரகமாக கருதப்படுகிறார். எனவே இக்காலத்தில் வணிகத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இது சிறந்த காலம்.

கடகம்
ராகு பெயர்ச்சியால் உருவான திரிகோண ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடக ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு உள்ளார். இந்த வீடு வேலை மற்றும் தொழில் வீடாகும். இந்த ராகு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்துடன் வெற்றி பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இது ஏற்ற காலம். இக்காலத்தில் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்
மீன ராசியில் திரிகோண ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். ராகு பெயர்ச்சியால் மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இது பேச்சு மற்றும் பணத்தின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். உங்கள் எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். அரசியலில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காணலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தினால் வருமானம் அதிகரிக்கும். மொத்தத்தில் மீன ராசிக்காரர்களுக்கு இக்காலம் பொற்காலமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications