Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
கன்னியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
திரிகிரக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறவுள்ளார். அதுவும் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த யோகத்தால் பிரகாசிக்கப் போகிறது.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போதோ அல்லது வேறு கிரகங்களுடன் இணையும் போதோ, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 2022 செப்டம்பர் மாதத்தில் 3 கிரகங்கள் ஒரே ராசியில் இணைகின்றன. அதுவும் கன்னி ராசியில் ஒன்றாக பயணிக்கவுள்ளன. அதில் ஏற்கனவே புதன் மற்றும் சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார்கள். செப்டம்பர் 24 ஆம் தேதி செல்வத்தை அள்ளித் தரும் சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்கிறார். இதனால் இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் கன்னி ராசியில் திரிகிரக யோகம் உருவாகிறது.

இந்த திரிகிரக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறவுள்ளார். அதுவும் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த யோகத்தால் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் எம்மாதிரியான பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

சிம்மம்
திரிகிரக யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். ஏனெனில் இரண்டாவது வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. இது பணம் மற்றும் பேச்சின் வீடாகும். ஆகவே இக்காலத்தில் நல்ல பண ஆதாயங்கள் கிடைக்கும். இக்கால கட்டத்தில் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் தேடி வரும். ஊடகம், திரைப்படம், மார்க்கெட்டிங் மற்றும் ஆசிரியர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்களின் வருமானம் இக்காலத்தில் உயரும். புதிய ஆதாரங்களில் இருந்து நல்ல பணத்தை சம்பாதிக்க முடியும். சூரியன் மற்றும் புதனின் தாக்கத்தால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். உங்களின் அதிர்ஷ்டத்தை மேலும் அதிகரிக்க ரத்தினத்தை அணியலாம்.

தனுசு
திரிகிரக யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். ஏனெனில் இந்த ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த வீடு வேலை, வணிகம் ஆகியவற்றின் வீடாகும். ஆகவே இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் எந்த வியாபாரத்திலும் நல்ல பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications