Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்
விருச்சிக ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் போது, அந்த ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த யோகத்தால் பிரகாசிக்கப் போகிறது.
ஜோதிடத்தில் கிரகங்கள் ஒருவரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவ்வப்போது மாறுவது மட்டுமின்றி, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்தும் பயணிக்கின்றன. அப்படி கிரகங்கள் இணையும் போது அது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் 2022 நவம்பர் மாதத்தில் விருச்சிக ராசியில் 3 கிரகங்கள் இணைகின்றன. அதனால் விருச்சிக ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

பஞ்சாங்கத்தின் படி, 2022 நவம்பர் 11 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சென்றார். அதன் பின் 2022 நவம்பர் 13 ஆம் தேதி புதன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சென்றார். பின்னர் கிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன் 2022 நவம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசியில் நுழையவுள்ளார். சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் போது, அந்த ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த யோகத்தால் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகம் நல்ல பலனைத் தரும். ஏனெனில் இந்த யோகம் மகர ராசியின் 11 ஆவது வீட்டில் உருவாகிறது. இந்த வீடு வருமான வீடாக கருதப்படுகிறது. எனவே இக்காலத்தில் புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். இக்காலத்தில் புதிய தொழில் தொடங்க வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த வீடு வேலை மற்றும் வியாபாரத்தின் வீடாக கருதப்படுகிறது. ஆகவே பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும். இது தவிர பொருளாதார நிதி வலுவாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த வீடு அதிர்ஷ்ட வீடாக கருதப்படுகிறது. எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் முன்னேற்றமடைவார்கள். இந்த கால கட்டத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். சுக்கிரனின் அருளால் வாகனம், சொத்து வாங்கும் யோகம் உள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications