Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
தனுசு ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றியும், லாபமும் கிடைக்கப் போகுது..
2022 டிசம்பர் மாதத்தில் திரிகிரக யோகமானது குரு பகவான் ஆளும் தனுசு ராசியில் உருவாகப் போகிறது. இதனால் 3 ராசிக்காரர்கள் தொழிலில் பெரிய வெற்றியை காண்பதோடு, லாபத்தைப் பெறப் போகிறார்கள்.
Trigrahi Yoga In Sagittarius: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டிருக்கும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில சமயங்களில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் நிறைய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அப்படி மாற்றும் போது சுப யோகமான திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதுவும் திரிகிரக யோகமானது குரு பகவான் ஆளும் தனுசு ராசியில் உருவாகப் போகிறது. இதனால் 3 ராசிக்காரர்கள் தொழிலில் பெரிய வெற்றியை காண்பதோடு, லாபத்தைப் பெறப் போகிறார்கள். இப்போது 2022 டிசம்பர் மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகத்தால் எந்த 3 ராசிக்காரர்கள் தொழில் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

2022 டிசம்பரில் திரிகிரக யோகம் எப்போது உருவாகிறது?
வேத ஜோதிடத்தின் படி, 2022 டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் இளவரசனான புதன் 03 ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்கிறார். அதன் பின் அழகு, காதல், ஆடம்பரத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் டிசம்பர் 05 ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்கிறார். பின்பு நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்கிறார். இப்படி அடுத்தடுத்து கிரகங்கள் தனுசு ராசிக்கு செல்வதால், டிசம்பர் 16 ஆம் தேதியில் இருந்து திரிகிரக யோகம் உருவாகிறது.

திரிகிரக யோகத்தால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள்!
கும்பம்
கும்ப ராசியில் திரிகிரக யோகமானது 11 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இந்த யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். மறுபுறம் புதிய வருமானம் மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். பங்குச் சந்தை, பந்தயம், லாட்டரியில் முதலீடு செய்தால், இக்காலத்தில் அதிர்ஷ்ட உங்கள் பக்கம் இருப்பதால் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் தொடங்க நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இக்காலம் சிறந்ததாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இது சந்ததி மற்றும் காதல் உறவுகளின் வீடாகும். எனவே இக்காலத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி பெறுவீர்கள். அதோடு காதல் உறவுகள் இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும். மாணவராக இருந்தால், இந்த காலம் சாதகமாக இருக்கும் மற்றும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பீர்கள். சுக்கிரனின் அருளால் வியாபாரத்தில் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். தொழிலில் பதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதே வேளையில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். மாணவர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications