Just In
- 12 min ago
கடுமையான கரோனரி நோய்க்குறி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
- 29 min ago
இந்த பழங்களை ஒன்றாக சாப்பிடுவது விஷத்திற்கு சமமாம்... இது உங்க உயிருக்கே ஆபத்தாகும்... ஜாக்கிரதை!
- 6 hrs ago
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்படலாம்...
- 14 hrs ago
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Finance
ரிலையன்ஸ் ரீடைல் சேர்மன் பதிவியை கைப்ற்றினார் ஈஷா அம்பானி.. விரைவில் அறிவிப்பு..!
- Sports
"பொறுமைக்கும் எல்லை உண்டு..." இந்திய வீரர்கள் மீது பிசிசிஐ ஆத்திரம்.. அப்படி என்ன செய்தனர்?
- Technology
ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் இவ்வளவு நாள் வேலிடிட்டி கிடைக்குதா? Bsnl, Airtel இன் சூப்பர் பிளான்கள்.!
- News
டெல்லி மாஸ்டர்கள்.. கொள்ளைப் பணத்தில் அதிமுக குத்தகை.. வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்!
- Automobiles
போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!
- Movies
சூர்யா, காஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மீன ராசியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம், சேர்க்கை போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களில் எந்த ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் ஒன்று சேர்ந்திருக்கும் போது திரிகிரஹி யோகம் உருவாகும். திரிகிரஹி யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சிலருக்கு மோசமான பலன்களும் கிடைக்கலாம். தற்போது மீன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது.

திரிகிரஹி யோகம்
குரு பகவானுக்கு சொந்தமான மீன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. இந்து நாட்காட்டியின் படி, 2022 மே 17 ஆம் தேதி செவ்வாய் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு சென்றார். இந்த மீன ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். அதோடு சுக்கிரனும் மீன ராசியில் தான் பயணித்து வருகிறார். தற்போது இந்த மீன ராசியில் குரு, சுக்கிரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்திருப்பதால், திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசியில் சுக்கிரன் நன்மை தரும் இடத்தில் உள்ளார். தற்போது திரிகிரஹி யோகம் மீன ராசியில் உருவாகியிருப்பதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாகும். இக்காலத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். எந்த ஒரு காரியத்தை தொடங்க நினைத்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவடையும் மற்றும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். காதல் விஷயங்களில் அலட்சியமாக இருப்பீர்கள்.

மிதுனம்
மீனத்தில் உருவாகியுள்ள திரிகிரஹி யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் வணிகம் செழித்திருக்கும். மூதாதையர் சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கம். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வருமானம் பெருகும். நீண்ட நாட்களாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் உருவாகியுள்ள திரிகிரஹி யோகத்தால் லாபகரமான சூழ்நிலையாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். திடீர் பண வரவால் நிதி நிலை வலுவாகும். இக்காலத்தில் மகிழ்ச்சியும், ஆடம்பரமும் அதிகரிக்கும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட அனுமதித்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் உறவு பாதிக்கப்படும். முக்கியமாக எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள்.