Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மகரத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
2023 ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லவுள்ளார். எனவே ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசியில் சனி, சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகக் போகிறது.
Trigrahi Yog In Capricorn On January 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில கிரகங்களின் சேர்க்கையால் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2023 ஆம் தேதி ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. திரிகிரக யோகம் ஒரு சுப யோகம். இந்த யோகமானது 3 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும்.

ஏற்கனவே மகர ராசியில் சனி பகவான் பயணித்து வருகிறார். அதைத் தொடர்ந்து சுக்கரனும் மகர ராசியில் தான் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லவுள்ளார். எனவே ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசியில் சனி, சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகக் போகிறது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இது வேலை மற்றும் பணியிடத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். அதோடு வேலையை மாற்றுவதற்கான மனநிலை ஏற்படும். பணம் மற்றும் பதவி ஆகிய இரண்டுமே கிடைக்கும். வியாபாரிகள இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மேலும் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பையும் பெறுவார்கள். இக்காலத்தில் தந்தையுடனான உறவு வலுபெறும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இது வெளிநாட்டு மற்றும் அதிர்ஷ்டத்தின் வீடாகும். ஆகவே இந்த யோக காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். மேலும் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை இக்காலத்தில் பெறுவீர்கள். மறுபுறம் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இது தவிர வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களின் ஆசையும் நிறைவேறும். முக்கியமாக நிலம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மீனம்
திரிகிரக யோகத்தால் மீன ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறுவார்கள். ஏனெனில் இந்த யோகமானது மீன ராசியின் 11 ஆவது வீட்டில் உருவாகிறது. எனவே தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கியமாக இந்த யோகத்தால் வருமானம் அதிகரிக்கும். அதே வேளையில், வருமானத்திற்கான புதிய ஆதாரயங்களும் உருவாக்கப்படு. மேலும் நிதி விஷயத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஜனவரி முதல் ஏழரை சனி தொடங்குகிறது. ஆகவே ஆரோக்கியத்தில் சற்று பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications