For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 செக்ஸியான ஆண்கள் யார் என்று தெரியுமா?

|

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று, நடப்பாண்டுக்கான உலகில் சிறந்த செக்ஸியான ஆண் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் ஏராளமானோர் கலந்துகொண்டு வாக்களித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பல பிரபலங்களில் முதலிடத்தைப் பிடிக்கப்போவது யார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தியாவின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரித்திக் ரோஷன் ஆசியாவின் மிக செக்ஸியான முதல் ஆண் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரித்திக் ரோஷனுக்காகவே எத்தனை பெண்கள் அவரின் திரைப்படத்தை பார்க்கச் செல்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அனைத்து பெண்களும் இப்படியொரு ஆண்மகன் தனக்குக் கணவராக வர வேண்டும் என்று வரம் கேட்பார்கள். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் பத்து செக்ஸியான ஆசிய ஆண்கள் யார் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்து, பெருவாரியான ரசிகர் பட்டாளங்களைக் குவித்து வைத்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரித்திக் ரோஷன். இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள ரசிகர்களால் கவரப்படுகிறார். இவருக்கு பெண்கள் பட்டாள ரசிகர் கூட்டம் அதிகமாக உள்ளது. காரணம், நல்ல கட்டுமஸ்தான உடல்வாகு, அளவான உயரம், அனைவரையும் கவர்ந்திழுக்கும் நடிப்பு, அனைத்து பெண்களையும் தன் மீது காதல் கொள்ள வைக்கக்கூடிய அளவுக்கு ரொமண்டிக் ஆணாகவும், செக்ஸியான உடல் வாகையும் பெற்றுள்ளார்.

MOST READ: இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்...நீங்க எந்த ராசி?

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர்

2017ஆம் ஆண்டு முதலிடத்தைப் பெற்ற ஷாஹித் கபூர் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகரும், நடன கலைஞரும் ஆவார். ஹிந்தியில் இவர் நடித்த கபீர் சிங் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை அவருக்கு பெற்று தந்துள்ளது. மேலும், வசூல் ரீதியாகவும் படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருந்தது. பல காதல் திரைப்படங்களில் நடித்து, பெண்கள் மத்தியில் காதல் நாயகனாக வளம் வருகிறவர் ஷாஹித் கபூர்.

விவியன் டிசேனா

விவியன் டிசேனா

விவியன் டிசேனா தொலைக்காட்சி நடிகர். இவர் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் நடித்தே தனக்கான பல ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கிறார். தொலைக்காட்சி துறை அவருக்கு நல்ல வலிமையை பெற்றுத் தருகிறது. தமிழில் டப்பிங்க செய்யப்பட்ட மதுபாலா சீரியலால் தமிழில் மிகவும் பிரபலமடைந்தார். இவருக்கும் பெண் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

டைகர் ஷெராஃப்

டைகர் ஷெராஃப்

டைகர் ஷெராஃப் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் அறிமுகமாகிறார். இதற்கிடையில் அவரது காதலி திஷா பதானி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகரான டைகர் ஷெராஃப்பும், நடிகர் ரித்திக் ரோஷனும் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் வார். டைகர் தனது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்.

MOST READ: புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?

ஜெய்ன் மாலிக்

ஜெய்ன் மாலிக்

கடந்த ஆண்டு இரண்டாவது இடத்திலிருந்த பிரிட்டிஷ் பாடகர் ஜெய்ன் மாலிக் நடப்பாண்டில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் தனது பாடல் மூலம் தன்னுடைய கலைத்தன்மையை மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளார். இவருக்காகவும், இவருடைய பாடலுக்காகவும் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

ஹர்ஷத் சோப்தா

ஹர்ஷத் சோப்தா

பெப்பன்னா நடிகர் ஹர்ஷத் சோப்தா தொலைக்காட்சி நடிகராகத் தனது வாழ்க்கையில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். அழகாலும், பெண்களை கவர்ந்திழுக்கும் உடல் வாகுவாலும் இவர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

பிலால் அஷ்ரப்

பிலால் அஷ்ரப்

இந்த பட்டியலில் இடம்பெறும் ஒரே பாகிஸ்தான் நடிகர் பிலால் தான். நடிகை மஹிரா கானுக்கு ஜோடியாக சூப்பர் ஸ்டார் என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளார். இது இவருக்கு பெரும் புகழை தேடிதந்துள்ளது.

MOST READ: 2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!

மொஹ்சின் கான்

மொஹ்சின் கான்

தன் பொன்னிற மேனியாலும், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் பார்வையும் இந்த பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்துள்ளார் மொஹ்சின் கான். இவர் இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகர்.

விராட் கோலி

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் கோலி. இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர் இவர்தான்.

பிரபாஸ்

பிரபாஸ்

தெலுங்கு திரைப்பட நடிகர்களில் முன்னணி நடிகராவார் பிரபாஸ். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்களின் வெற்றி மூலம் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை எப்போதும் வைத்திருப்பார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடிதந்தது. நடிப்பாலும், தன்னுடைய கவர்ச்சியான தோற்றத்தாலும் தமிழ் திரையுலகில் ஒரு இடத்தை தனக்காகத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10 Sexiest Asian Man in the World for 2019

Here is the list of top ten Sexiest Asian Man in the World for 2019.
Story first published: Wednesday, December 11, 2019, 11:29 [IST]
Desktop Bottom Promotion