Just In
- 1 hr ago
மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்… நீங்களே ஆச்சிரியப்படுவீங்க…
- 2 hrs ago
எகிறும் வெங்காய விலையால் அதை வாங்கவே பயமா இருக்கா? அப்ப இனிமேல் இத வாங்குங்க...
- 3 hrs ago
இந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியுமா?
- 4 hrs ago
சனிபகவான் அருள் வேண்டுமா? அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்க...
Don't Miss
- Finance
கார் வாங்கப் போறீங்களா.. அப்படின்ன ஜனவரிக்குள் வாங்கிக்கோங்க.. ஹூண்டாய் விலையை அதிகரிக்க திட்டம்..!
- News
ஒரு தரம்.. ரெண்டு தரம்.. ஊராட்சிமன்றத் தலைவர் பதவி 25 லட்சத்துக்கு ஏலம்..!
- Movies
ரஜினி, அஜித் ஹீரோயின்களுக்கு மட்டும் ஓகேவாகுது.. ஆனா நமக்கு ஓரங்கட்டுதே.. கவலையில் சாயிஷா!
- Technology
அரைசதம் அடித்த இஸ்ரோ: வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்- வீடியோ
- Education
TNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட்! டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்!
- Automobiles
ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...
- Sports
பலம் குறைந்த ஒடிசா - ஹைதராபாத் மோதும் போட்டி.. வெற்றிக்கு போராட இரு அணிகளும் ரெடி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக அயோத்தி பிரச்சனை இருந்தது. இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தது தான் அயோத்தி. இந்த நகரம் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அயோத்தி என்றதுமே பலருக்கும் நினைவிற்கு வருவது ராமர் கோவிலும், பாபர் மசூதியும் தான். பல வருடங்களாக அயோத்தி வழக்கு நிலுவையில் இருந்தது. சமீபத்தில் தான் திடீரென்று இதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இத்தகைய அயோத்தி நகரத்தைப் பற்றி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இக்கட்டுரையில் அயோத்தி நகரத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதையும் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மை #1
விஷ்ணுவின் அவதாரமான ராமர் பிறந்த ஊர் தான் அயோத்தி. எனவே இந்தியாவில் அயோத்தி ஒரு புனிதமான நகரமாக கருதப்படுகிறது.

உண்மை #2
புத்த, சமண, சமஸ்கிருதம், கிரேக்கம் மற்றும் சீன ஆதாரங்களின்படி, அயோத்தி நகரத்தின் பழைய பெயர் "சாகேதா", இது அதன் அற்புதமான கட்டிடங்களுக்கு ஒத்திருக்கிறது.

உண்மை #3
பழங்கால இந்திய ராஜ்ஜியங்களில் ஒன்றான கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது அயோத்தி தான். இந்த பெருமை எப்போதுமே இதற்கு உண்டு.

உண்மை #4
அயோத்தியின் பெருமை அறிந்த பின், இந்தோனேசியாவில் உள்ள யோகயாகார்த்தா மற்றும் தாய்லாந்தில் உள்ள அயுதயா போன்ற நகரங்களுக்கு அயோத்தி என பெயரிடப்பட்டது என்பது தெரியுமா?

உண்மை #5
சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, ஒரு குப்தா ஆட்சியாளர் (அநேகமாக ஸ்கந்தகுப்தா) தான் தனது தலைநகரை சாகேதாவுக்கு மாற்றினார். மேலும் அவர் தான் சாகேதாவின் பெயரை 4 ஆம் நூற்றாண்டில் அயோத்தி என மாற்றினார் என்றும் கூறுகின்றனர்.

உண்மை #6
பயணிகள் அடிக்கடி வரும் நகரமாக அயோத்தி இருந்ததால், கவுதம புத்தர் மற்றும் மகாவீரர் போன்ற சாமியார்களுக்கு இது ஒரு முக்கியமான மையமாக மாறியது.

உண்மை #7
ராஜா ஹரிஷ்சந்திரா அல்லது மன்னர் ஹரிச்சத்திராவின் பிறப்பிடமாக அயோத்தி கருதப்படுகிறது. இவர் இந்தியாவில் சத்தியத்தின் சின்னமாக கருதப்படுபவர். இவர் தனது கனவில் ஒரு முனிவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, தனது ராஜ்ஜியத்தை விட்டுக் கொடுத்து, குடும்பத்தை விற்று, ஒரு அடிமையாக ஆனார்.

உண்மை #8
தென் கொரியாவிற்கும், அயோத்திக்கும் ஒரு மரபணு தொடர்பு உள்ளது தெரியுமா? ஆம், கொரியாவின் மிகப்பெரிய வம்சத்தின் இளவரசியான ஹியோ ஹ்வாங்-ஓகே அயோத்தியில் கடல் வழி பயணித்தவரின் மகளாகும். இவர் கொரியாவின் காரா வம்சத்தின் ராஜாவான கிம் சுரோவை மணந்தார்.

உண்மை #9
11 ஆம் நூற்றாண்டில் கஹாதவால வம்சத்தால் வைணவத்தை ஊக்குவித்ததன் மூலம், அதாவது வைணவத்திற்கு ராம வழிபாட்டு முறையைக் கொண்டு வந்ததன் மூலம், அயோத்தி இந்தியாவில் ஒரு முக்கியமான புனித யாத்திரை மையமாக உருவெடுத்தது.

உண்மை #10
அயோத்தி மற்றும் கிம்ஹே (தென் கொரியாவில்) நகரங்கள் மார்ச் 2001 இல் சகோதரி நகரங்களாக மாறியது; நவம்பர் 2014 இல் அயோத்தி மற்றும் ஜங்காபூர் (நேபாளத்தில்) நகரங்கள் சகோதரி நகரங்களாக மாறியது.