For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும்…

இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 31 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 31 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan -31 July 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நீங்கள் தேவையற்ற கவலைகளை விட்டுவிட்டு உங்கள் முக்கியமான வேலையில் கவனம் செலுத்தினால் நல்லது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இன்று வணிகர்களுக்கு சாதாரண நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் நன்கு திட்டமிட வேண்டும். யோசிக்காமல் அவசரப்பட்டு எந்த வேலையும் செய்யாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று வாழ்க்கைத் துணையின் மனநிலை ஓரளவு மாறும். அவர்களின் இயல்பில் கோபம் மற்றும் எரிச்சல் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 6:55 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

உத்தியோகஸ்தர்கள் அலுவலக விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முயற்சி செய்யுங்கள். உங்கள் எந்த வேலையும் முழுமையடையாமல் விட்டுவிடாதீர்கள். வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மீதான சுமை அதிகரிக்கும். கூட்டு வியாபாரம் செய்வோர் இன்று சில பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் கூட்டாளருடனான நல்லுறவு மோசமடையக்கூடும். இதன் காரணமாக முக்கியமான வணிக முடிவுகளை எடுப்பதில் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று உடன்பிறப்புடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று தொண்டை தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று வணிகர்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கக்கூடும். குறிப்பாக உங்கள் பணி ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்டதாக இருந்தால், இன்று நீங்கள் நல்ல நிதி நன்மைகளை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான பழக்கத்தை முறையாக பராமரிக்கவும். குறிப்பாக தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இன்று சிறிய விஷயமும் கடுகு போல் மலையாக வெடிக்கும். இது உங்கள் பெயரையும், வேலையையும் பாதிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று உங்களுக்கு தலைவலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். நீங்கள் ஓய்வெடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை

கடகம்

கடகம்

வணிகர்கள் இன்று நிதி விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் எந்தவொரு நிதி பரிவர்த்தனையையும் அவசரமாகச் செய்தால், இன்று பெரிய சிக்கலில் சிக்கலாம். அலுவலக சூழல் மிகவும் நன்றாக இருக்கும். இன்று அலுவலகத்தில் வித்தியாசமான மகிழ்ச்சியை உணர்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சமீபத்தில் பணியில் சேர்ந்திருந்தால் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். தந்தையிடமிருந்து சில முக்கியமான ஆலோசனைகளைப் பெறலாம். இன்று உங்கள் முடிக்கப்படாத எந்த வேலையும் அவர்களின் ஒத்துழைப்புடன் முடிக்க வலுவான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உடலில் ஏதேனும் வலி ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை

சிம்மம்

சிம்மம்

நீண்ட காலத்திற்குப் பிறகு, இன்று நீங்கள் ஒரு நல்ல மனநிலையில் இருப்பீர்கள். மனம் அமைதியாக இருக்கும். உங்கள் முக்கியமான வேலையில் கவனம் செலுத்த முடியும். உங்கள் வேலையைப் பற்றி பேசினால், இன்று அலுவலகத்தில் சில முக்கியமான தகவல்களைப் பெறலாம். இந்த செய்தி உங்கள் முன்னேற்றத்துடன் தொடர்புடையதாக இருக்கும். இன்று சிறு வணிகர்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. அரசு விதிகளின் முழு நன்மையும் உங்களுக்கு கிடைக்கும். இன்று குடும்பத்தில் சாதாரண நாளாக இருக்கும். வேலையுடன், உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். உடல் ரீதியாக மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உங்கள் திறமையைக் காட்ட சிறந்த வாய்ப்பைப் பெறலாம். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. விரைவில் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். பங்குச் சந்தையில் பணிபுரிவோர் அவசரப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று வீட்டின் உறுப்பினர்களுடன், நேரத்தை செலவிடுவீர்கள். இன்று மிகவும் வேடிக்கையான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். அவரின் நடத்தை உங்களுக்கு சிறப்பான உணர்வை ஏற்படுத்தும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், கடினமாக உழைக்க வேண்டும். கண்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், கவனக்குறைவாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

துலாம்

துலாம்

இன்று மனம் அமைதியற்ற நிலையில் இருக்கும். எந்த வேலையிலும் கவனமாக உணர மாட்டீர்கள். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி உங்கள் முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. முதலாளி உங்களுக்கு சில பொறுப்பான வேலைகளை ஒப்படைக்க முடியும். எனவே உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். வணிகர்கள் கலப்பு நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வீட்டின் சில உறுப்பினர்களுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். அதே நேரத்தில் உங்கள் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமடையலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்கள் திருமணமானவராக இருந்தால் இன்று மாமியாருடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நிலைமை மிகவும் பதற்றமாக மாறும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் புத்திசாலிதனமாக செயல்பட வேண்டும். உங்கள் வேலையைப் பொறுத்தவரை, அலுவலகத்தில் சக ஊழியர்களை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்களுடைய இந்தப் பழக்கம் சிக்கலை ஏற்படுத்தும். இன்று வர்த்தகர்களுக்கு ஒரு பரபரப்பான நாளாக இருக்கப்போகிறது. இன்று நீங்கள் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். ஒரு பெரிய செலவைச் செய்யத் திட்டமிட்டால், இன்று அதற்கு நல்ல நாள் அல்ல. உடல்நலம் பற்றி பேசினால், அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் 8:45 மணி வரை

தனுசு

தனுசு

நீங்கள் நீண்ட காலமாக சில பதற்றத்தை உணர்ந்தால், இன்று உங்களுக்கு நிம்மதியான நாளாக இருக்கும். இன்று உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம். பணிச்சுமை குறைவாக இருக்கும். வணிகர்கள் பெரிய வணிக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் வணிகத்தில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் உறுப்பினர்களுடன் இந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியுடன் செலவிடப்படும். குறிப்பாக குழந்தைகளுடன் மிகவும் வேடிக்கையாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

இன்று உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவும் வலுவாக இருக்கும். உடன்பிறப்பிடமிருந்து நிதி ஆதாயம் சாத்தியமாகும். வேலை பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் எல்லா வேலைகளையும் விடாமுயற்சியுடன் செய்யுங்கள். பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வணிகர்களும் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் வணிகம் அதிகரிக்கும். பணத்தைப் பற்றிப் பேசினால், இன்று உங்களுக்கு சற்று விலையுயர்ந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: மாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகிறது. உங்கள் பணிகள் அனைத்தும் எளிதாக முடிக்கப்படும். பொறுமையாக இருங்கள். தைரியத்துடன் முன்னேறுங்கள். உங்கள் வேலையைப் பற்றிப் பேசினால், உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இப்போது வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வியாபாரம் செய்வோருக்கு இன்று நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, உங்களுக்கு தோல் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் பிற்பகல் 2:20 மணி வரை

மீனம்

மீனம்

இன்று வியாபாரிகளுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். குறிப்பாக நீங்கள் ஆடை, பொம்மைகள், புத்தகங்கள் போன்றவற்றை வியாபாரம் செய்தால் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. உங்கள் பொறுப்புகளை நன்றாக நிறைவேற்றுவீர்கள். விரைவில் சரியான முடிவுகளைப் பெறலாம். நிதி நிலையில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான சலுகைகளைப் பெறலாம். நீங்கள் பணத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். அலட்சியம் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் மதியம் 1:25 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan -31 July 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 31 July 2021 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Desktop Bottom Promotion