Latest Updates
-
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
Today Rasi Palan 31 December 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்த்தால் நல்லது...
இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 31ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 31ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, இன்று உங்களின் அனைத்து வேலைகளும் திட்டப்படியே முடிவடையும். உங்களுக்கு அலுவலகத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால், விரைவில் நீங்கள் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். வணிகர்களின் பொருளாதார நிலை வலுவடைவதற்கான அறிகுறிகள் உள்ளன. இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இன்று நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்படும். விரைவில் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். இன்று நீங்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். பெற்றோர் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்து இன்று பெரிய ஒப்பந்தம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், முடிவை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் சில திட்டத்தில் சிக்கிக் கொள்ளலாம். ஆரோக்கியம் மேம்படும். இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் நிதிப் பக்கம் வலுவாக இருக்கும். இன்று நீங்கள் பழைய கடனையும் தீர்க்க முடியும். இன்று மனதளவில் மிகவும் நன்றாக இருப்பீர்கள். வேலையைப் பற்றி பேசும்போது, உங்களுக்கு நீண்ட காலமாக அலுவலகத்தில் ஏதேனும் வேலை நிலுவையில் இருந்தால், அதை இன்றே முடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், முதலாளியின் மனநிலை கெட்டுவிடும். நீங்கள் தவறான விளைவை அனுபவிக்க வேண்டியிருக்கும். தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் நீங்கள் சரியான முடிவுகளைப் பெறலாம். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் துணையின் வித்தியாசமான ரூபத்தைக் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று பலவீனமாக இருக்கும். இன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். இதெல்லாம் உங்கள் கவனக்குறைவின் விளைவு. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். சேமிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும். வேலையில், இன்று நல்ல நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்கள் அனைத்து வேலைகளும் தடையின்றி முடிவடையும். தொழிலதிபர்கள் எந்த ஒரு சிக்கலையும் இன்று முடிக்க முடியும். விரைவில் அதன் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நடத்தையை வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். சிறிய விஷயங்களுக்கு கோபப்படும் உங்கள் பழக்கம் உங்கள் உறவை பலவீனப்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 41
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5:45 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று நீங்கள் வீணாக அலைய வேண்டியிருக்கும், நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணருவீர்கள். அலுவலகத்தில் வேலை செய்வதில் உங்கள் மனம் குறைவாகவே இருக்கும். உயர் அதிகாரிகளின் அணுகுமுறையும் உங்களிடம் சரியாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். கடின உழைப்புடன் விவேகமான முடிவுகளை எடுத்தால், நல்ல பலன்களைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை வழங்குவீர்கள். உங்களுக்கு ஒரு புதிய தொடக்கம் தேவை. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று பணம் தொடர்பான எந்த முக்கிய வேலையையும் தவிர்க்கவும். ஆரோக்கியமாக இருக்க, மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். மேலும், உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 45
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2:15 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று வணிகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறலாம். நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் இன்று நேரத்தை அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகமாக இருக்கும். உங்கள் சிறிய வேலையையும் கவனமாக செய்து, தவறுகளையும் தவிர்க்கவும். நீங்கள் புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். இருப்பினும், எந்த ஒரு நிதி முடிவையும் யோசிக்காமல் எடுக்க வேண்டாம். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியமாக இருக்க, கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் மாலை 6:45 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று அரசியல்யுடன் தொடர்புடையவர்ளகளுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். ஃபேஷன் மற்றும் மீடியாவுடன் தொடர்புடையவர்களும் இன்று நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் ஒவ்வொரு விருப்பமும் நிறைவேறும். உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். நிதி விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான எந்த வேலையையும் சிந்திக்காமல் செய்யாதீர்கள். இல்லையெனில், பெரும் நஷ்டம் ஏற்படலாம். இன்று உங்களுக்கு நாளின் இரண்டாம் பகுதியில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் தவறான அணுகுமுறை உங்களை வருத்தப்படுத்தலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, வானிலை மாற்றத்தால் இன்று திடீரென உடல் நலம் குன்றலாம். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வரலாம். உடல்நலக்குறைவால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிக்கலாம். அலுவலகத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். குறிப்பாக, உங்கள் வேலை எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்டதாக இருந்தால் இன்று உங்களுக்கு நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். உங்கள் அன்பானவருடன் உங்கள் மனதைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் காலை 10:25 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று தொழிலதிபர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் எதிரிகள் இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எனவே, உங்களின் முக்கியமான சில வேலைகளில் இடையூறுகள் ஏற்படும். சிறிய தவறினால் கடும் நஷ்டம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை கேலி செய்வதைத் தவிர்க்கவும். இன்று தவறான புரிதல்களினால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்கள் வேலையையும் பாதிக்கும். தந்தையுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும்
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் இரவு 8:10 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று நீங்கள் ஆரோக்கிய விஷயத்தில் அதிக அலட்சியமாக இருப்பது சரியல்ல. உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளாவிட்டால், வரும் நாட்களில் உங்கள் கஷ்டங்கள் அதிகரிக்கலாம். இன்று நீங்கள் வேலையில் அதிக ஆர்வத்தை உணர மாட்டீர்கள். மனதில் பலவிதமான கவலைகள் இருக்கும். தேவையில்லாமல் சிந்தித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்த முயற்சிப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அமைதியாக இருப்பது தவறான புரிதலை அதிகரிக்கும். உங்கள் நிலையை புரிய வைப்பது நல்லது. இன்றைய நாள் பணத்தின் அடிப்படையில் சராசரி நாளாக இருக்கும். மற்றவர்களை கவர அதிக செலவு செய்யாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகச் சிறந்த நாளாக இருக்கும். இன்று உங்களின் அனைத்து வேலைகளையும் முழு ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் கடின உழைப்பிற்காக நிறைய பாராட்டுகளைப் பெறலாம். வணிகர்கள் தங்கள் சரியான முடிவுகளின் இனிமையான முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் நிதி முயற்சிகள் நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்தால், விரைவில் நல்ல வெற்றியைப் பெறலாம். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக இன்று நீங்கள் உங்கள் பெற்றோருடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் மனஅழுத்தம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் உறவில் மனகசப்பு ஏற்படலாம். உங்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. உங்கள் ஒரு தவறான முடிவு உங்கள் முழு குடும்பத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. நிதி இழப்புக்கான அறிகுறிகள் உள்ளன. வேலையைப் பற்றி பேசுகையில், இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் பலனால் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களின் பதவி உயர்வு பற்றியும் அலுவலகத்தில் பேசப்படலாம். உங்கள் வேலையில் முதலாளி மிகவும் ஈர்க்கப்படுவார். விரைவில் சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் மனக் கவலை அதிகரிக்கும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை



Click it and Unblock the Notifications











