For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 30 September 2022: சுக்கிரனால் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிலும் வெற்றி!

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 30ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் நல்ல அறிகுறியைக் கொடுக்கும். நீங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். அத்துடன் உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், பெரிய லாபத்திற்காக பாடுபட்டு வெற்றியைப் பெறலாம். உங்கள் பணி புதிய திசையில் நகரும். இன்றைய நாள் பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். பெரிய பிரச்சனை இருக்காது என்றாலும் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். அன்புக்குரியவர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8:20 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்றைய நாளின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாக உணருவீர்கள். மேலும் உங்கள் திட்டப்படி எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதால், நீங்கள் ஒரு பெரிய நிவாரணத்தைப் பெறலாம். முதலில் வேலையைப் பற்றிப் பேசினால், அலுவலகச் சூழல் மிகவும் சாதகமாக இருக்கும். மேலதிகாரியின் ஆதரவைப் பெறலாம். இன்று நீங்கள் உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் பணக் கவலையிலிருந்து விடுபடலாம். உங்களின் வேலையில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் சிறிது செலவு செய்யலாம். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று வணிகர்களுக்கு சவாலான நாளாக இருக்கும். உங்களின் எந்தப் பணியிலும் அரசு இடையூறுகள் ஏற்பட்டால், அதிகாரிகளிடம் பேசும் போது உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. உங்கள் கட்டுப்பாடற்ற பேச்சு உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடனான நடத்தையை நன்றாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் இன்று கலங்க வாய்ப்புள்ளது. உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களிடம் ஒரு பெரிய கோரிக்கையை முன்வைக்கலாம். ஆரோக்கியம் திடீரென குறையலாம். இன்று நீங்கள் மிகவும் கனமாக உணருவீபீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கடகம்

கடகம்

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிலை வலுப்பெறலாம். இன்று நீங்கள் உங்கள் பதவி உயர்வு கடிதத்தையும் பெறலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கவும் வலுவான வாய்ப்புள்ளது. இப்படி தொடர்ந்து கடினமாக உழைத்துக் கொண்டே இருந்தால், விரைவில் நீங்கள் வெற்றியின் உச்சத்தை அடைவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். உங்கள் வியாபாரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் காதல் நிறைந்த நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துணைக்காக நீங்கள் ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பினால், இன்று அதற்கு சரியான நாள். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இந்த பண்டிகை காலத்தில், இன்று நீங்கள் சில முக்கியமான செலவுகளை செய்யலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாகலாம். உங்கள் கடுமையான இயல்பு உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளைப் புண்படுத்தலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இன்று வேலையில் பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் சுமை அதிகரிப்பதால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று உங்கள் முதலாளியும் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்வார். வியாபாரிகள் வீணாக அலைய வேண்டி வரும். இன்று உங்களது சில வேலைகள் முழுமையடையாமல் போகலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால், உங்கள் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். திறந்த மனதுடன் பணத்தை செலவிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:50 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உங்களுக்கு வேலையில் சிறந்த நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று பணிச்சுமை குறைய வாய்ப்புள்ளது. நீங்கள் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளலாம். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். உங்கள் வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல நீங்கள் நினைத்தால், உங்கள் திட்டத்தில் முன்னேறி செல்ல இன்று நல்ல நாள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பெரிய கவலைகள் தீரலாம். இன்று நீங்கள் உங்கள் துணைக்கு கூடுதல் நேரம் செலவிட முடியும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் நேரத்திற்கு தூங்கி, அதிகாலையில் எழுந்திருக்க முயற்சிக்க வேண்டும். இது உங்களை மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

துலாம்

துலாம்

சில நாட்களாக உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், இன்று உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் சரிவைக் காணலாம். எந்த வகையிலும் கவனக்குறைவாக இருக்காதீர்கள். உங்கள் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் மருத்துவரையும் தவறாமல் அணுகவும். வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். இன்று உங்கள் முதலாளியிடமிருந்து வேலை தொடர்பான சில நல்ல ஆலோசனைகளையும் பெறலாம். வியாபாரிகள் லாபம் ஈட்டுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் பங்குச் சந்தை தொடர்பான வேலைகளைச் செய்தால், இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையுடன் காரசாரமான சண்டைகளை செய்யலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:45 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

வேலையுடன், உங்கள் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்க முயற்சிக்கவும். குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் நீங்கள் தேவை என்பதை உணர வேண்டும். முடிந்தால், இன்றே அவர்களுடன் வெளியே செல்லுங்கள் அல்லது வீட்டில் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நிதி முடிவுகளை நீங்கள் புத்திசாலித்தனமாக எடுத்து, செலவுகளைக் கட்டுப்படுத்தினால், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் முடிவடையும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்யும் தவறை மட்டும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். வர்த்தகர்கள் முதலீடு செய்வதற்கு முன்பு கவனமாக சிந்திக்க வேண்டும். நீங்கள் சில புத்திசாலித்தனமான திட்டத்தில் சிக்கிக் கொள்ளலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

தனுசு

தனுசு

பண விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்களுக்கு திடீர் பண வரவு ஏற்படக்கூடும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த ஒரு வலுவான வாய்ப்புள்ளது. வேலையைப் பற்றி பேசும்போது, உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகம் சிரிப்பதையோ அல்லது பேசுவதையோ தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களின் இந்த தவறு இன்று உங்களுக்கு அதிக விலையை ஏற்படத்தலாம். வணிகர்கள் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய வேலையைச் செய்தால், இன்று நீங்கள் சில சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பெற்றோருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உணர்ச்சி ரீதியான இணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்க, தினமும் யோகா மற்றும் தியானத்துடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:10 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மகரம்

மகரம்

நீங்கள் கடவுள் வழிபாட்டில் மிகவும் ஆர்வத்தை உணருவீர்கள். மேலும் நீங்கள் எந்த வழிபாட்டு தலத்திற்கும் செல்லலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் முக்கியமான கூட்டத்திற்கு திடீர் அழைப்பு வரலாம். உங்கள் ஆலோசனைகளுக்கு மேலதிகாரியும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். வணிகர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். குறிப்பாக உங்களின் வேலை, உணவு தொடர்பானதாக இருந்தால், உங்களின் வேலை அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று உங்களின் எந்த பிரச்சனையும் மூத்த உடன்பிறப்பின் உதவியால் தீர்க்கப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு கண்கள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கும்பம்

கும்பம்

வணிகர்கள் எந்த ஒரு ஆவணத்திலும் அவசரத்தில் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். நீங்கள் ஏமாற்றப்படலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் எந்தவொரு வதந்திகளிலும் ஒரு பகுதியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு நீங்களே சிக்கலை உருவாக்கி கொள்வீர்கள். மேலும் இது உங்கள் வேலை மற்றும் பெயர் மீது மோசமான விளைவை ஏற்படுத்தும். இவை அனைத்தும் மாறுபட்ட கிரக நிலையின் விளைவாகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரிவினையைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். சிறிய விஷயங்களுக்காக உங்கள் அன்புக்குரியவர் மீது கோபப்படுவதைத் தவிர்க்கவும். அவர்களை மரியாதையுடன் நடத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். பண விஷயத்தில் இன்று கலக்கமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், சிகரெட் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:2

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மீனம்

மீனம்

நீண்ட நாட்களாக நண்பருடன் கருத்து வேறுபாடு இருந்தால், மனக்கசப்பை எல்லாம் மறந்து மீண்டும் அவருடன் நட்புக் கரம் நீட்டுவீர்கள். உங்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். உடன்பிறப்பிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். கல்வித் துறையில் சில பெரிய வெற்றிகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் வங்கியில் கடன் வாங்கியிருந்தால், தவணைகளை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும். அலட்சியம் விலை உயர்ந்ததாக இருக்கலாம். உங்கள் வருமானத்தை அதிகரிக்க உங்கள் முயற்சிகளைத் துரிதப்படுத்த வேண்டும். உங்களின் வேலையைப் பற்றிப் பேசும்போது, ​உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்தைச் சந்திக்க நேரிடலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். உங்கள் வழக்கத்தை ஒழுங்கமைக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் உடல்நலம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Today Rasi Palan - 30 September 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 30 September 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Desktop Bottom Promotion