For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 30 November 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது...

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 30ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 30 November 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 30ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்க போகிறது. வேலை அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும், இன்று சில பெரிய மாற்றங்கள் சாத்தியமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை உயரும். இன்று உங்கள் முன்னேற்றம் குறித்து மேலதிகாரி முக்கிய முடிவெடுப்பார். உங்கள் பணி தற்காலிகமானது என்றால் அது இன்று நிரந்தரமாக வாய்ப்புள்ளது. வியாபாரிகளின் பொருளாதார நிலை வலுப்பெறும். திடீரென்று உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 6 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, பழைய கடனை விரைவில் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும். இல்லையெனில் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளையும் யோசித்து செய்தால் நல்லது. அலுவலகத்தில் சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். உயர் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் பெரிய ஒப்பந்தங்களைச் செய்யும்போது சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறிய தவறும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிய விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். இல்லையெனில் சில கடுமையான நோய்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, உங்கள் நீண்ட நாள் கவலை இன்று நீங்க போகிறது. புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனமாக செயல்பட்டால் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகமாக புறம் பேசுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில், இன்று நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். இன்று முதலாளியின் பார்வை உங்கள் மேல் இருக்கும். தொழிலதிபர்கள் இன்று நீண்ட தூர பயணத்தைத் தவிர்க்கவும். வீட்டின் சூழ்நிலையை நன்றாக வைத்திருக்க, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் கோபமே உங்கள் அன்புக்குரியவர்களை உங்களிடமிருந்து விலக்கிடும். உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் இன்று ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்:23

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்க போகிறது. மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி, நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்கவும். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்ய விரும்பினால், முழு முயற்சி செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் சிறு கவனக்குறைவு கூட உங்கள் ஆசையை கெடுத்து விடும். வியாபாரிகளுக்கு இன்று வழக்கத்தை விட சிறப்பான நாளாக இருக்கும். தடைப்பட்ட ஒப்பந்தத்தை முடிக்க முயற்சி செய்யலாம். விரைவில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் தரப்பை நிதானமாக முன்வைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். உணவில் சிறப்பு கவனம் செலுத்தினால் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9:05 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று வேலை விஷயத்தில் உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் முதலாளி உங்கள் செயல்திறனால் மிகவும் திருப்தி அடைவார். வேலை தொடர்பான நல்ல ஆலோசனைகளையும் நீங்கள் பெறலாம். வியாபாரிகள் பழைய சட்ட விஷயங்களில் இருந்து இன்று விடுபடலாம். இருப்பினும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளைத் தவிர்த்திடுங்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வீட்டின் உறுப்பினர்களுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். இன்று நெருங்கியவர் ஒருவரால் உங்களுக்கு நிதி ஆதாயம் சாத்தியமாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் இன்று பதற்றமான சூழல் நிலவலாம். திருமண வாழ்க்கையில் நிலைமைகள் எதிர்மறையாகவும், துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகமாகவும் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் வேலையை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் முக்கியமான சில வேலைகள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அலட்சியமாக இருக்காதீர்கள். வியாபாரிகளுக்கு இன்று கலவையான லாபம் கிடைக்கும். இன்று ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். பணத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், மன அழுத்தம் அதிகரிக்கும். அதிகமாக கவலைப்படுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, வேலை தொடர்பான பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும். வேலை அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று நீங்கள் மனஅமைதியைப் பெறலாம். வணிகர்கள் முதலீடு தொடர்பான முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் எதிர்மறையாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சீராக இருக்காது. இந்த நேரத்தில் அவர்களுக்கு உங்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை. அலுவலக பிரச்சனைகளை வீட்டிற்கு கொண்டு வருவதை நிறுத்துங்கள். வீட்டின் அமைதியை காக்க உங்கள் இயல்பில் மாற்றங்கள் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, திருமணமாகாவர்களுக்கு இன்று நல்ல வரன் தேடி வரக்கூடும். விரும்பிய வாழ்க்கைத் துணையை நீங்கள் பெறலாம். திருமணமானவர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் மனகசப்பு ஏற்படலாம். தேவையற்ற விஷயங்களில் உங்கள் துணையைச் சந்தேகப்படுவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று வணிகர்கள் பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படலாம். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று உங்கள் உடற்சோர்வு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் இரவு 10 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் உங்களுக்கு சில முக்கியமான வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தால், இன்று மிகவும் கவனமாக அதை செய்து முடிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் சிறிய கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்படலாம். உங்கள் வேலைக்கே கூட ஆபத்து வரலாம். படிப்பை முடித்துவிட்டு வேலையைத் தேடுபவர்களுக்கு, இன்று சிறந்த வாய்ப்பு தேடி வரும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சற்று கடினமான நாளாகவே இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை உயரக்கூடும். உயர் அதிகாரிகளும் கடுமையாக நடந்து கொள்ளலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். வணிகர்கள் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், உங்கள் பாதையில் சில தடைகள் உருவாகலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வேலையுடன், உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் சிறிது நேரத்தை ஒதுக்கினால் நன்றாக வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், நீரிழிவு மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7:30 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள். மாணவர்களின் தன்னம்பிக்கையில் இன்று சரிவு ஏற்படலாம். கவலைப்படுவதை விட்டுவிட்டு, தொடர்ந்து முன்னேறி செல்வதற்கான பாதையை கண்டுபிடியுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய திருப்பம் ஏற்படும். இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களின் பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு இன்று கிடைக்கும். தடைப்பட்ட பணம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், மாறிவரும் பருவ நிலையால் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். இன்று உங்களுக்கு சில கூடுதல் பணிகளும் ஒதுக்கப்படலாம். உங்கள் வேலை திறமையால் முதலாளி மிகவும் மகிழ்ச்சி அடைவார். அரசு ஊழியர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலனைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இருந்து மனகசப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரவில் நீண்ட நேரம் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:15 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 30 November 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 30 November 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Wednesday, November 30, 2022, 5:20 [IST]
Desktop Bottom Promotion