For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கண்கள் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம்...

இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 30 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

|

Today Rasi Palan -30 November 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 30 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று பழைய சொத்து தொடர்பான விவகாரம் உங்களை தொந்தரவு செய்யலாம். இன்று சில நிதி இழப்பை சந்திக்க நேரிடும். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தால், நீங்கள் அதிக மன அழுத்தத்தை எடுக்கத் தேவையில்லை. பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படவும். கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது. இன்று வணிகர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று உங்களின் சில முக்கியமான வேலைகளில் தடைகள் ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறிய விஷயங்களுக்கு வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் கட்டுப்பாடற்ற கோபம் உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளை காயப்படுத்தலாம். ஆரோக்கியத்தில் அதிக அலட்சியம் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

பணத்தைப் பற்றிய உங்கள் கவலைகள் அதிகரிக்கலாம். பணப்பற்றாக்குறையால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். நீங்கள் இன்று கடன் வாங்க வேண்டியிருக்கும். வேலையைப் பற்றி பேசும்போது, ​​​​அலுவலகத்தில் முதலாளி திடீரென்று ஒரு முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கலாம். நீங்கள் முழு நம்பிக்கையுடன் உங்கள் நிலைப்பாட்டில் நிற்கவும். வியாபாரிகள் இன்று நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக அமையும். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். குடும்ப ஒற்றுமை குலைந்து போகலாம். இன்று, உடல்நிலை நன்றாக இருக்காது. இருமல், சளி போன்ற பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

வேலை முன்னணியில் இன்று கலவையான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை மரியாதையுடன் நடத்தவும். தேவையற்ற கோபத்தால் நஷ்டம் உங்களுக்கு தான். வியாபாரிகள் திடீரென்று சில பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்று நீங்கள் ஒவ்வொரு அடியையும் மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இன்று நீங்கள் பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்பைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். இன்று உங்களுக்கு விருப்பமான உணவுகளை உண்ணும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று பெரிய பிரச்சனை இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்:29

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

கடகம்

கடகம்

நாளின் தொடக்கம் இன்று அவ்வளவு சிறப்பாக இருக்காது. குடும்ப சச்சரவுகளால் மனம் கலங்கும். உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு மனதை அமைதியாக வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும் எந்த ஒரு செயலையும் கோபத்தில் செய்யாதீர்கள். நிதித்துறையில் இன்று உங்களுக்கு ஏமாற்றம் தரும் நாளாக இருக்கும். இன்று பணத்தை இழக்கக்கூடும் அல்லது திருடுபோகலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை சோர்வு மற்றும் அழுத்தம் இன்று உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:4

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். குறிப்பாக நீங்கள் தனிமையில் இருந்தால், இன்று உங்கள் வாழ்க்கைத் துணை சந்திக்கலாம். திருமணமானவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் இனிமையான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு நிதி ரீதியாக மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். திடீரென்று பெரிய செலவு ஏற்படலாம். வேலையைப் பற்றி பேசும்போது, ​​​​அலுவலகத்தில் உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிறு வேலை கூட முழுமையடையாமல் இருந்தால், முதலாளி உங்கள் மீது கோபப்படுவார். அது உங்கள் முன்னேற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வியாபாரிகள் பெரிய லாபத்திற்காக இன்று எந்தவித ஆபத்தான முடிவு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்:26

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை

கன்னி

கன்னி

இன்று நீங்கள் ஒவ்வொரு சவாலையும் மிகுந்த தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பீர்கள். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். இருப்பினும், அதிகப்படியான உற்சாகத்தில் அளவிற்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவில் முன்னேற்றம் சாத்தியமாகும். இன்று உங்கள் துணையின் வித்தியாசமான வடிவத்தைக் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பை மேலதிகாரிகளால் கவனிக்க முடியும். உங்களின் நல்ல செயல்திறனின் பலத்தால், உங்களுக்கென்று ஒரு வித்தியாசமான இடத்தை உருவாக்க முடியும். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். இருப்பினும், விரைவில் நீங்கள் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:25 மணி வரை

துலாம்

துலாம்

உங்கள் மனதில் அமைதியற்ற சூழல் நிலவும். மேலும் நீங்கள் தேவையற்ற கவலைகளால் சூழப்படுவீர்கள். முதலில் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். சரியான நேரம் வரும்போது, ​​உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். அதிகரிக்கும் செலவுகள் உங்கள் நிதி நிலைமை கெடுத்துவிடும். வேலையைப் பற்றி பேசும்போது, ​​​​அலுவலக வேலையில் அதிகம் கவனமாக உணர மாட்டீர்கள். உங்கள் சில வேலைகள் இன்று முழுமையடையாமல் இருக்கலாம். இப்படி கவனக்குறைவாக இருந்தால், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். இன்று வீட்டின் சில உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் சாத்தியமாகும். உடல் ஆரோக்கியமாக இருக்க, மனதளவிலும் வலுவாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 11:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் இன்று உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். இருப்பினும், இதுபோன்ற முடிவுகளை அவசரமாக எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். எந்த வேலையையும் யோசிக்காமல் செய்தால் நஷ்டம் உங்களுக்குத்தான். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். உங்களின் சில முக்கியமான கோப்புகள் விடுபட்டிருக்கலாம். பணத்தின் அடிப்படையில் இன்று சாதாரண நாளாக இருக்கும். இன்று தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். அன்றாட வேலைகள் சுமுகமாக முடிவடையும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் உடல்நலம் பெரும் சரிவை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 1 மணி வரை

தனுசு

தனுசு

உங்கள் நிதி நிலையில் பெரும் முன்னேற்றம் சாத்தியமாகும். இன்று உங்கள் நிதி முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். இன்று நீங்கள் பணம் தொடர்பான கவலைகளிலிருந்து விடுபடலாம். வேலையைப் பற்றி பேசும்போது, அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் அது கடினமாக இருக்கும். வர்த்தகர்கள் பெரிய வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். குடும்பம் சம்பந்தமாக ஏதேனும் முக்கியமான முடிவை எடுத்தால், கண்டிப்பாக உங்கள் அன்புக்குரியவரின் ஆலோசனையைப் பெறுங்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று அதிக அலைச்சல் இருக்கும். இது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:05 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று ஒரு சிறிய விஷயத்தால் உங்களுக்குள் மனக்கசப்பு அதிகரிக்கலாம். இந்த தினசரி சண்டைகள் உங்கள் வீட்டின் சூழ்நிலையை கெடுத்துவிடும். நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வது நல்லது. வேலையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். முதலாளியின் முன்பு சரியாக நடந்து கொள்ளுங்கள். குறிப்பாக பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். வியாபாரிகளுக்கு இன்று ஓரளவு நிம்மதி கிடைக்கும். உங்களின் பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பண விஷயத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இன்று திடீர் பண வரவைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு கண்கள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:50 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். இன்று உங்கள் முக்கியமான முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்கவும், இது உங்களுக்கு விரைவில் நல்ல பலனைத் தரும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளைப் பெறலாம். இன்று அவர்களும் உங்கள் வேலையில் திருப்தி அடைவார்கள். வியாபாரிகள் பெரிய ஒப்பந்தங்கள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். இன்று அன்புக்குரியவர்களுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று உங்கள் மீது கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை

மீனம்

மீனம்

இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். நீங்கள் வேலையில்லாமல் வேலை தேடிக்கொண்டிருந்தால், இன்று நீங்கள் ஏமாற்றத்தை உணரலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பணம் தொடர்பான எந்த பரிவர்த்தனையையும் செய்யலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குழந்தைகளிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று உடல்நிலை நன்றாக இருக்காது. வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தின் மீதும் சற்று கவனம் செலுத்தினால் தான் நன்கு உழைக்க முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan -30 November 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 30 November 2021 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Monday, November 29, 2021, 20:10 [IST]
Desktop Bottom Promotion