Today Rasi Palan 29 November 2022: இன்று இந்த ராசிக்காரர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க சிலர் முயற்சிக்கலாம்...

இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 29ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 29 November 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 29ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சுமாரான நாளாகவே இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் முக்கியமான சில வேலைகளை முடிக்காமல் இருக்கலாம். இதனால் முதலாளி உங்களுடன் மிகவும் கடுமையாக நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் இன்று லாபம் பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும். இன்று கைக்கு எட்டிய ஒரு பொன்னான வாய்ப்பும் எளிதில் கை தவறி போய்விடும். இதெல்லாம் உங்கள் கவனக்குறைவின் விளைவு. நிதி நிலை இன்று நன்றாக இருக்கும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், மன அழுத்தம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 11 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடாதீர்கள். எந்தவொரு முக்கியமான முடிவையும் யோசித்து பின்னர் எடுங்கள். இன்று சில நல்ல செய்திகளால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு விலை உயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யும் தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம். குறிப்பாக உங்கள் வேலை சொத்து தொடர்பானதாக இருந்தால், இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான ஒப்பந்தம் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 8:05 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, மற்றவர்களின் வேலையில் அதிகம் தலையிடுவதைத் தவிர்க்கவும். விருப்பமில்லாத யாருக்கும் அறிவுரை கூற வேண்டாம். வேலையில் இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளால், அழுத்தம் அதிகரிக்கும். அலட்சியத்தைத் தவிர்ப்பது நல்லது. சிறு வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இன்று முழுவதும் வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருக்கும். எதிர்பார்த்த பலனை நிச்சயம் பெறலாம். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் கோபமான தன்மை இருக்கும். பேச்சுவார்த்தை மூலம் உங்கள் துணையின் எண்ணங்களை அறிய முயற்சிப்பது நல்லது. பணத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு முழங்கால் பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு காதல் விஷயத்தில் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான எந்த ஒரு விஷயமும் நீண்ட நாட்களாக சிக்கலில் இருந்தால், இன்று அது தீர்க்கப்பட வாய்ப்பு அதிகம். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில், உங்கள் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களைப் பாராட்டலாம். இதனால் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். இன்று சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 11:20 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று பண விஷயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் பணம் நீண்ட காலமாக எங்காவது சிக்கியிருந்தால், அதை திரும்ப பெற நிறைய யோசித்து செயல்பட வேண்டியிருக்கும். வீண் விவாதத்தால் இழப்பு உங்களுக்குத்தான் ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் வார்த்தைகளை அலட்சியம் செய்யும் தவறை செய்யாதீர்கள். இப்படி செய்தால் வீண் பிரச்சனைகள் வரலாம். வணிர்கள் இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து முன்னேறி செல்ல அறிவுறுத்தப்படுகிறது. விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். உங்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனை இருந்தால், அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 7:30 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, குடும்பத்தாருடனான கருத்து வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வர இன்றே நல்ல நாள். எதிர்காலத்தில் உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. பிறர் மனதை புண்படுத்தும் எந்த ஒரு வேலையையும் செய்யாதீர்கள். இன்று நீங்கள் வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் இன்று வேலை நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். வணிகர்களுக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் சில முக்கிய வணிக முடிவுகளை எடுக்க நேரிடும். நிதி நிலை நன்றாக இருக்கும். உடல்நலம் தொடர்பான விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் காலை 10 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமற்றதாக இருக்கும். வீட்டில் வீண் விவாதங்கள் நடக்கலாம். வாழ்க்கைத்துணையின் கோபமான தன்மை உங்களை வருத்தமடையச் செய்யும். பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்றி விஷயங்களுக்கு நிறைய பணம் செலவழிக்கலாம். உத்தியோகஸ்தர்களின் பணிச்சுமை குறையும். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிவடையும். தொழிலதிபர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறலாம். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். மன உறுதியுடன் இருக்க, தினமும் தியானம் செய்யலாம். இது தவிர, எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்கவும் முயற்சிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 10:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலைக்கு தொடர்புடைய மரியாதைக்குரிய நபரை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இந்த சந்திப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். வியாபாரிகள் இன்று எந்த ஒரு ஆவணத்தில் கையெழுத்திடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பொருளாதார நிலையில் இன்று முன்னேற்றம் காணலாம். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், உடலின் சில பகுதிகளில் வலியால் நீங்கள் சிரமப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளைக் கவர, ஒரே நேரத்தில் பல பணிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களின் சிறு சிறு தவறுகளும் உங்கள் முன்னேற்றத்தைப் பாதிக்கலாம். இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்களின் முக்கியமான சில வேலைகளில் திடீரென்று தடை ஏற்படலாம். இன்று நீங்கள் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் உள்ள ஒருவருடன் உங்களுக்கு பிரிவு ஏற்படலாம். உங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் கோபமே உங்கள் வீட்டின் அமைதியை கெடுக்கும். பண பரிவர்த்தனைகள் செய்ய ஏற்ற நாள் இல்லை. உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க சிலர் முயற்சிக்கலாம். எனவே, மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அலுவலக அரசியலுக்கு பலியாகி விடாதீர்கள். சக ஊழியர்களுடனான பிரச்சனைகளை தவிர்க்க முயற்சிப்பது நல்லது. வியாபாரிகள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். இதெல்லாம் உங்கள் தவறான முடிவுகளின் விளைவு. வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில், உங்கள் அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். உங்கள் நிதி முடிவுகளை கவனமாக எடுத்தால் நல்லது. நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். மாணவர்கள் உயர்கல்வி சம்பந்தமாக ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டால், இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக அமையக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரியின் மனநிலை நன்றாக இருக்காது. சிறு தவறைச் கூட செய்யாமல் பார்த்து கொள்வது நல்லது. வியாபாரிகள் தங்கள் எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. அவர்கள் உங்கள் தற்போதைய வேலையைத் தடுக்க முயற்சிக்கலாம். உங்கள் தந்தையின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நல்ல கவனிப்பு தேவை. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் நெஞ்செரிச்சல், மனஅழுத்தம் போன்றவற்றை உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இன்று நிச்சயமாக வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். உங்களது இந்த பயணம் மறக்க முடியாததாக அமையும். இன்று உணவகங்களில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். நிச்சயமாக நல்ல பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களின் எந்தவொரு பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். இன்று உங்களின் அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இருப்பினும், அதிகப்படியான ஆர்வத்தில் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:45 மணி முதல் காலை 10:25 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, November 29, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion