For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் வாய்ப்பால் பெரும் பலனைப் பெறலாம்…

இன்று கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 29 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 29 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan -29 July 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

கொடும் இதய நோய்.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர மருத்துவ சிகிச்சைக்கு உதவி தேவை!வேலை முன்னணியில் இன்று நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். அலுவலக சூழல் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளும் உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவார்கள். போக்குவரத்து தொடர்பான உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கக்கூடும். நீங்கள் நல்ல நிதி லாபத்தை ஈட்ட முடியும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையுடன், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நேரம் ஒதுக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். எனினும், புத்திசாலித்தனமாக செலவிட வேண்டும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் எதிர்கொண்டால், இன்று எந்தவிதமான கவனக்குறைவையும் செய்யக்கூடாது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 41

அதிர்ஷ்ட நேரம்: மாலை 2 மணி முதல் 5:45 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

உத்தியோகஸ்தர்கள், இன்று தங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறலாம். அரசு வேலைக்கு முயற்சிப்போர் இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். வணிகர்கள் தங்கள் முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று சில மாற்றங்கள் சாத்தியமாகும். சில புதிய நண்பர்களை சந்திக்கலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்க விரும்பினால், வாழ்க்கைத் துணையின் நம்பிக்கையை வெல்ல முயற்சிக்க வேண்டும். உங்கள் நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். உடல்நலத்தைப் பற்றிப் பேசுகையில், இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, இன்னும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

சில முக்கியமான முடிவுகளை மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் எடுத்தால், எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும். தவறான தகவல்களைத் தந்து சிலர் உங்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கலாம். அலுவலகத்தில் தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகி, வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று உங்கள் எந்த வேலையும் முழுமையடையாமல் போகலாம். வணிகர்கள் இன்று தேவையற்ற முறையில் இயங்க வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக பெற்றோரின் உணர்ச்சிபூர்வமான ஆதரவு காரணமாக, உங்கள் மன அழுத்தம் குறையும். பணத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, அதிக மன அழுத்தத்தை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை

கடகம்

கடகம்

இன்று வேலை முன்னணியில் நல்ல முடிவுகளைப் பெறவில்லை என்றால், அவசரப்பட வேண்டாம். நேர்மறையான சிந்தனை மற்றும் கடின உழைப்பால், நிச்சயம் நல்ல வெற்றியைப் பெற முடியும். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள். குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள திட்டமிடலாம். இருப்பினும், இந்த உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில், உங்கள் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் உங்கள் அன்புக்குரியவர்கள் குறித்து அதிக அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்லிணக்கம் இருக்கும். உங்கள் துணைக்கு ஒரு சிறப்பு பரிசை வழங்க நினைத்தால், இன்று அதற்கு சாதகமான நாள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 3:15 மணி வரை

சிம்மம்

சிம்மம்

பணத்தின் அடிப்படையில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக கடன் வாங்கியிருந்தால், இன்று நிறைய அழுத்தங்களை சந்திக்க நேரிடும். உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். வணிகர்கள் அதிகப்படியான நம்பிக்கையில் தவறான முடிவு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இன்று ஒரு பெரிய இழப்பு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். இன்று பணிச்சுமை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்த வேலையையும் செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. குறிப்பாக நீங்கள் மடிக்கணினி அல்லது கணினியை நீண்ட நேரம் பயன்படுத்தினால், உங்கள் கண்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 6:20 மணி வரை

கன்னி

கன்னி

இன்று வணிகர்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகளின் இரு மடங்கு பலனைப் பெறலாம். கூட்டு வியாபாரம் செய்வோரின் வணிகத்தில் வளர்ச்சிக்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவு மனநிறைவைத் தரும். இன்று உங்கள் கடினமான பணிகளில் எந்த இடையூறும் இல்லாமல் முடிக்க முடியும். உங்கள் கடின உழைப்பால் உங்கள் முதலாளி பெரிதும் ஈர்க்கப்படுவார். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு, இன்று குடும்ப உறுப்பினர்களுடன் கூடுதல் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையை மரியாதையுடனும் நடத்த வேண்டும். உங்கள் உடல்நிலை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் 9:30 மணி வரை

துலாம்

துலாம்

வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. அலுவலகத்தில் சில முக்கியமான வேலைகள் முடிவடையாமல் இருப்பதால் முதலாளியின் கோபத்தை சந்திக்க நேரிடும். சிறு தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நிதி தொடர்பான பணிபுரிவோர் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடனான உறவில் சிறந்த நல்லிணக்கம் இருக்கும். இன்று, வாழ்க்கைத் துணையின் நடத்தை மென்மையாக இருக்கும். அவர்கள் உங்களை அன்போடு நடத்துவார்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, ஆரோக்கியத்தின் மீதான கவனக்குறைவு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வேலையைப் பற்றி பேசும்போது, அலுவலகத்தில் முதலாளியிடமிருந்து சில முக்கியமான ஆலோசனைகளைப் பெறலாம். சக ஊழியர்களுடனான உறவும் மேம்படும். எழுதுபொருள் தொடர்பான வணிகம் செய்வோர் நல்ல நிதி லாபத்தை ஈட்ட முடியும். பெரிய வணிகர்கள் விரைவான லாபம் ஈட்டுவதற்கு தவறான பாதைகளை தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும். இன்று பொருளாதார முன்னணியில் விலையுயர்ந்த நாளாக இருக்கக்கூடும். இன்று பணம் தொடர்பாக எந்த பிரச்சனையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

தனுசு

தனுசு

இன்று உங்களுக்கு மிகவும் வேடிக்கையான நாளாக இருக்கும். திடீரென்று ஒரு பழைய நண்பருடன் சந்திப்பது சாத்தியமாகும். இன்றும பழைய நல்ல நினைவுகள் சில மீண்டும் புதுப்பிக்கப்படும். வணிகர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் எந்தவொரு வேலையிலும் அரசு தடையாக இருந்தால், அவை அகற்றப்பட வலுவான வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில், மந்தமான தன்மை, சோம்பல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வேலையில் கவனம் செலுத்தவில்லை என்றால், அது உங்கள் முன்னேற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்க வாய்ப்புள்ளது. உடல்நலம் பற்றிப் பேசினால், உங்களுக்கு இதயம் தொடர்பான நோய் இருந்தால், கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:25 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

மகரம்

மகரம்

இன்று உங்களுக்கு ஒரு சவாலான நாளாக இருக்கக்கூடும். அலுவலகத்தில் ஒரு பெரிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். முதலாளியின் அணுகுமுறை சரியாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், சிறு அலட்சியமும் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். உங்கள் எல்லா வேலைகளையும் கவனமாக முடித்தால் நல்லது. அரசு ஊழியர்கள் நல்ல பலனைப் பெறலாம். அலுவலகத்தில் சில பெரிய மரியாதைகளைப் பெறலாம். வணிகர்கள் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறலாம். அதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற விவாதங்கள் மற்றும் மோதல்களைத் தவிர்க்கவும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 41

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை

கும்பம்

கும்பம்

உங்கள் தற்போதைய வேலையில் நீங்கள் திருப்தி அடையவில்லை மற்றும் உங்கள் வேலையை மாற்ற நினைத்தால், இது நல்ல நேரம். நீங்கள் விரும்பும் வேலையைப் பெறலாம். வணிகர்கள் இன்று பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் எண்ணெய் தொழில் தொடர்பான வணிகராக இருந்தால், உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வலுவான வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டின் பெரியவர்களுடன் உங்களுக்கு நல்லுறவு இருக்கும். உங்கள் துணையை தேவையில்லாமல் சந்தேகிப்பதைத் தவிர்க்கவும். உங்களுடைய இந்த பழக்கம் உங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றத்தை அதிகரிக்கும். உடல்நிலை இன்று நன்றாக இருக்கும். நீங்கள் இன்று மனதளவில் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:15 மணி வரை

மீனம்

மீனம்

அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் உரையாடும்போது, தவறான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இன்று உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு எதிராகச் செல்லக்கூடும். வியாபாரிகள் இன்று நல்ல நிதி லாபத்தை ஈட்ட முடியும். உங்களுக்கு பெரிய ஆர்டர் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று பணத்தின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகிறது. உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்ட வேலையை இன்று முடிக்க முடியும். வீட்டின் சூழல் இன்று நன்றாக இருக்காது. இன்று வீட்டின் உறுப்பினருடன் வாக்குவாதம் செய்யலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் மாலை 6:45 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan -29 July 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 29 July 2021 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Desktop Bottom Promotion