Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Today Rasi Palan 29 December 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட கூடாது..
இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 29ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 29ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் உங்கள் நல்ல செயல்பாட்டினால், பதவி உயர்வைப் பெறலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கவும் வலுவான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் பெரும் நிதி ஆதாயத்தைப் பெறலாம். இன்று எந்த வேலையைத் தொடங்கினாலும் அதில் வெற்றி நிச்சயம். பணத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உங்கள் வருமானம் நன்றாக இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக இன்று நீங்கள் உங்கள் தாயுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:15 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் நிதானமாகவும் உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்கவும். இன்று அலுவலகத்தில் உங்கள் ஆற்றலாலும், உற்சாகத்தாலும் முதலாளியை மிகவும் ஈர்க்கலாம். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு தீவிரமாக இருக்கும். உங்கள் துணைக்கு ஆச்சரியத்தைக் கொடுக்க திட்டமிட்டால், இன்று அதற்கு சரியான நாள். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் இரவு 8:10 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்காக போதுமான நேரம் கிடைக்கும். இதனால் இன்று நிம்மதியாக உணருவீர்கள். தொழிலதிபர்கள் இன்று ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அவசர அவசரமாக எந்த வேலையும் செய்யாதீர்கள். சிறு தவறுகளையும் தவிர்க்கவும். நாளின் இரண்டாம் பகுதியில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் எந்த கவலையிலிருந்தும் விடுபடலாம். பண விஷயத்தில் நல்ல அறிகுறிகளைக் காட்டும். உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பழைய உணவைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களுக்கு ஒரே நேரத்தில் அலுவலகத்தில் பல பொறுப்புகள் வழங்கப்படலாம். சக ஊழியர்களின் விடுப்பு காரணமாக நீங்கள் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் லாபம் ஈட்ட இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எளிதில் முடிக்கும் பணிகளிலும் தடைகள் ஏற்படலாம். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், நீங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்களைக் காணலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் காலை 10:25 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று பிறருடன் பேசும் போது பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, இன்று அதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இன்று வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். அலுவலகத்தில் எந்த கடினமான வேலையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். உயர் அதிகாரிகள் உங்களால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். ளவணிகர்கள் பெரிய லாபத்திற்காக சிறிய நன்மைகளைப் புறக்கணிக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தலைவலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, பண விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் ஏதேனும் பெரிய நிதி பரிவர்த்தனை செய்யப் போகிறீர்கள் என்றால், அவசரம் மற்றும் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தின் சூழல் மிகவும் சூடாக இருக்கும். இன்று முதலாளி உங்களை மிகவும் கண்டிப்புடன் நடத்தலாம். இன்று உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் ஹோட்டல் அல்லது உணவகம், சொத்து, மரம், இரும்பு போன்றவை தொடர்பான வேலை செய்தால் இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சற்று குறையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வலுவாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறலாம். நிதி நிலைமை வலுவடைவதற்கான அறிகுறிகள் தென்படும். புதிய வருமானத்தைப் பெறலாம். அலுவலகத்தில் அதிக பணிச்சுமையால், நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். இருப்பினும், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். வணிகர்கள் அவசரமாக எந்த ஒப்பந்தத்தையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் மென்மைதன்மையை காணலாம். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களிடம் கோபப்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைவார்கள். நீங்கள் செய்யும் வேலையில் பல குறைகளை கண்டறியலாம். தொடர்ந்து அலட்சியமாக இருப்பது, உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும். தொழிலதிபர்கள் இன்று நிறைய அலைய வேண்டியிருக்கும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். குடும்பத்தில் உள்ள ஒருவருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்கள் வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று வேலை நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்கள் நிதி முயற்சி வெற்றி பெறும். நாளின் இரண்டாம் பாகத்தில் திடீர் பண வரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு நரம்புகள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 10:30 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் குழந்தைகளால் இன்று மகிழ்ச்சி உண்டாகும். இன்று நீங்கள் அவர்களின் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். அவர்களால் நீங்கள் மிகவும் பெருமைப்படுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் நல்ல நாளாக இருக்கும். அலுவலகச் சூழல் மிகவும் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். வணிகர்களின் பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. தடைபட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் வேலை சம்பந்தமாக சிறு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், உங்களுக்கு கண்கள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்கள் நண்பருடனான சண்டை முடிவுக்கு வந்து, மீண்டும் நட்பு பாராட்டுவீர்கள். பண விஷயத்தில் இன்று மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். அதிகரித்து வரும் செலவுகளும் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் பேசும் போது கோபப்படுவதைத் தவிர்க்கவும். உங்கள் தவறான அணுகுமுறை உங்களை சிக்கலில் ஆழ்த்தும். வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, நீங்கள் வணிகராக இருந்தால், இன்று பண விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிதாக சந்திக்கும் நபர்களை எளிதில் நம்பாதீர்கள். நிதித்துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் கடினமான நாளாக இருக்கும். நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். நீங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால் இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். விரைவில் உங்கள் தொழில் ஒரு புதிய திசையில் நகரும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால் பிரச்சனையே இருக்காது. வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியமும் சம அளவு முக்கியமானது. இதில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை



Click it and Unblock the Notifications











