For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம்...

இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan -28 November 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கணக்கில்லாமல் பணத்தை செலவிட வேண்டாம். வேலையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் நம்பிக்கை நிலை அதிகமாக இருக்கும். இன்று நீங்கள் கடினமான பணிகளை எளிதாக முடிப்பீர்கள். உங்களின் கடின உழைப்பை உயர் அதிகாரிகள் கவனிக்கலாம். வணிகர்கள் பெரும் நிதி ஆதாயங்களைப் பெறலாம். நீங்கள் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று பற்கள் தொடர்பான பிரச்சனை இருக்கலாம். எனவே, தூய்மையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:45 மணி முதல் இரவு 8:15 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். அதிக வேலைப்பளு காரணமாக இன்று உங்களுக்ளு ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. வணிகர்களும் இன்று நல்ல பலன்களைப் பெற மாட்டார்கள். வியாபாரத்தில் ஏற்படும் மந்தநிலை உங்கள் நம்பிக்கையை குறைக்கும். விரக்தியடையாமல், சோர்வடையாமல், தொடர்ந்து கடினமாக உழைப்பது நல்லது. விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உடனடி கவனம் தேவைப்படும் சில தீவிரமான குடும்ப பிரச்சனைகள் உள்ளன. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முக்கிய முடிவையும் நீங்கள் எடுத்தால், அன்புக்குரியவர்களின் கருத்தை கண்டிப்பாக கேட்கவும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், மனதளவில் நீங்கள் நன்றாக உணர மாட்டீர்கள். அதே போல் உங்கள் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

அரசு ஊழியர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். இன்று ஒரு பெரிய மாற்றம் சாத்தியமாகும். நீங்கள் திடீரென்று இடமாற்றம் பெறலாம். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு சில பெரிய வெற்றிகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தாய் அல்லது தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், இந்த நேரத்தில் அவர்களுக்கு சரியான கவனிப்பு தேவை. இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். திடீரென்று பழைய கடனை திருப்பி செலுத்த வேண்டி வரும். உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால், மிகவும் அலட்சியமாக இருக்கக்கூடாது. உங்கள் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கடகம்

கடகம்

உங்கள் அன்புக்குரியவர்களுடன் மோதல்களைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் உறவில் இடைவெளி ஏற்படக்கூடும். உங்கள் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். வேலையில் நல்ல பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும், உங்கள் மீது பொறுப்புகள் சுமை அதிகரிக்கலாம். நீங்கள் கடினமாக உழைத்துக்கொண்டே இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைத்தால், சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் இன்று சாதாரண நாளாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஆனால் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று உங்களுக்கு வேலையில் மிகச் சிறந்த நாளாக இருக்கும். வணிகர்களுக்கு பெரிய நிதி ஆதாயங்கள் கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் நல்ல செயல்திறனின் வலிமையால் உங்கள் நிலையை வலுப்படுத்த முடியும். உங்களின் கடின உழைப்புக்கு விரைவில் பலன் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வீட்டின் எந்த உறுப்பினருடனும் கருத்தியல் வேறுபாடுகள் சாத்தியமாகும். ஒருவேளை அவர்களின் வார்த்தைகள் உங்கள் மனதை புண்படுத்தலாம். அத்தகைய தருணத்தில் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பணத்தைப் பற்றி பேசினால், வீட்டுச் செலவுகள் இன்று சற்று அதிகரிக்கக்கூடும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கன்னி

கன்னி

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். சவால்களுக்கு பயப்படுவதற்கு பதிலாக, அவற்றை எதிர்கொள்வது நல்லது. நீங்கள் வேலையில் வெற்றி பெறவில்லை என்றால், பொறுமையுடன் வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு நேரம் வரும்போது நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வணிகத் திட்டங்களை மறுபரிசீலனை செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைக்க வேண்டும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். இருப்பினும், அன்புக்குரியவரின் ஆரோக்கியத்தை ந்னகு கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் காரமான மற்றும் எண்ணெய் உணவைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை

துலாம்

துலாம்

அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளில் அதிகம் தலையிடாதீர்கள். அதே போல் நேரத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஊடகத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கப் போகிறது. நல்ல வெற்றியைப் பெறலாம். நீங்கள் கூட்டு வணிகம் செய்தால், இன்று உங்கள் வியாபாரத்தில் சில சாதகமான மாற்றங்கள் சாத்தியமாகும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இன்று நீங்கள் குறைந்த முயற்சியில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். இன்று உடல்நலம் தொடர்பான விஷயங்கள் சரியாகும். இருப்பினும், உங்களுக்கு போதுமான ஓய்வு தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று வணிகர்கள் பண விஷயத்தில் ஆபத்தான முடிவு எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பெரிய லாபத்திற்காக, சிறிய ஆதாயங்களைப் புறக்கணிக்காதீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் இன்று நல்ல நிதி ஆதாயத்தைப் பெறலாம். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் பெரிய வெற்றியைப் பெறலாம். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு அதிகம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்கள் இருக்கும். உங்கள் குடும்பத்தில் சிலருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வீட்டில் வசதிகள் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

தனுசு

தனுசு

இன்று நீங்கள் சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு நெருக்கமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையைப் பற்றி பேசும்போது, உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல நாள் இருக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். இத்துடன் உங்கள் பெற்றோரின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். வணிகர்கள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், நீங்கள் சட்ட விவகாரத்தில் சிக்கிக் கொள்ளலாம். வரி விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பணத்தைப் பொறுத்தவரையில் சிந்திக்காமல் செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று சில பலவீனங்கள் அதிகரிக்கலாம். சரியான நேரத்தில் உணவுடன் போதுமான ஓய்வு எடுக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

மகரம்

மகரம்

இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். நீங்கள் அலுவலகத்தில் கடினமாக உழைத்தாலும், உங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால், ஏமாற்றமடைய வேண்டியதில்லை. விரைவில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கப்படலாம். எனவே, உங்கள் நம்பிக்கையைக் குறைக்க வேண்டாம். இன்று வணிகர்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கலாம். குறிப்பாக நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான வேலைகளைச் செய்தால், நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், சிறிய விஷயங்களில் மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தால் உங்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

கும்பம்

கும்பம்

வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. இன்று உங்கள் வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் ஏதேனும் பெரிய மாற்றத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இன்று அதற்கு ஏற்ற நாள் அல்ல. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் முதலாளியின் மனநிலை இன்று நன்றாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு சிறிய தவறு உங்களுக்கு அதிக இழப்பை கொடுக்கலாம். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். இன்று குடும்ப பெரியவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மகிழ்ச்சியையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உணவில் கவனக்குறைவு காரணமாக, உங்கள் ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மாலை 6:00 மணி வரை

மீனம்

மீனம்

இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் வங்கியில் கடன் வாங்க நினைத்தால், இன்று விண்ணப்பிக்க சிறந்த நாள். பெரிய வாடிக்கையாளர்களிடமிருந்து லாபமும் இன்று சாத்தியமாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். சக ஊழியர்களுடன் தேவையற்ற பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் முன்னேற்றம் தடைபடும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம். கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் துணையின் மனம் புண்படலாம். இன்று உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:7

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:45 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan -28 November 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 28 November 2021 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Saturday, November 27, 2021, 23:12 [IST]
Desktop Bottom Promotion