For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணப்பற்றாக்குறையால் சில சிக்கல்கள் உண்டாகலாம்...

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 27 ஆம் தேதி திங்கட்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 27 June 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 27 ஆம் தேதி திங்கட்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

குடும்பத்தில் இன்று உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடையே அன்பும், ஒற்றுமையும் நிலவும். இன்று குழந்தை மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கிடையேயான பந்தம் ஆழமாகவும் வலுவாகவும் இருக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். வீட்டைப் பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு அதிக பணம் செலவழிக்க நேரிடும். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்களுக்கு வேலை அதிகமாக கொடுக்கலாம். இதனால், நீங்கள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால், உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நீங்கள் இரும்பு வியாபாரியாக இருந்தால், உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

சிறு வணிகர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கும். அதே போல் இன்று சில புதிய நபர்களுடன் இணையும் வாய்ப்பும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகம் கேலி செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு சிறிய விஷயம் பெரிதாக மாறக்கூடும். இதன் காரணமாக உங்கள் வேலையும் பாதிக்கப்படும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள ஒருவருடன் உங்களுக்கு தகராறு இருந்தால், நீங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும். அன்புக்குரியவர்கள் என்று வரும்போது, ​​நீங்கள் ஈகோவை விட்டுவிட வேண்டும். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று வணிகர்கள் பெரிய ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்களது ஒரு தவறான வார்த்தை உங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் திடீரென்று அலுவலகத்தில் ஒரு முக்கியமான கூட்டத்திற்கு அழைக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முழு நம்பிக்கையுடன் உங்கள் தரப்பை முன்வைக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். பரபரப்பான கால அட்டவணையின் காரணமாக, இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று திடீர் பண வரவும் கூடும். நீங்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரித்து வருவதாக தெரிகிறது. நீங்கள் உங்களை கவனித்துக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

கடகம்

கடகம்

அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். மேலும் உங்கள் ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இன்று முதலாளி உங்கள் நேர்மறை மற்றும் கடின உழைப்பால் மிகவும் ஈர்க்கப்படுவார். விரைவில் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். உங்கள் வணிகத் திட்டங்களில் நீங்கள் சமீபத்தில் சில மாற்றங்களைச் செய்திருந்தால், நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். மேலும் உங்களுக்கிடையேயான அன்பு மேலும் ஆழமடையும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களும் உங்களுக்காக விசேஷமான ஒன்றைச் செய்யலாம். பணம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். இன்று உங்களின் பொருளாதார பிரச்சனைகள் தீரும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு காது சம்பந்தமான பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். மன அமைதியை உணர்வீர்கள். நீண்ட நாட்களாக சொத்து வாங்க திட்டமிட்டு இருந்தால் இன்று வெற்றி கிடைக்கும். வணிகர்கள் அவசரத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் பணம் சிக்கிக்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று புதிய சவால் வரக்கூடும். சில பொறாமை கொண்ட சக ஊழியர்கள் உங்கள் பெயரைக் கெடுக்க முயற்சி செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். பெற்றோரின் உடல்நிலை குறித்த கவலை நீங்கும். குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இன்று நீங்கள் அவர்களுக்காக ஷாப்பிங் கூட செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கன்னி

கன்னி

மாணவர்கள் தங்கள் கல்வியில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், உங்கள் ஆசிரியர்கள் மற்றும் உங்களுக்கு நெருக்கமானவர்களின் உதவியால், இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும். இன்று நீங்கள் படிப்பிலும் எழுத்திலும் சரியாக கவனம் செலுத்துவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் தங்கள் செயல்திறனில் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரிகள் நிதி நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். பணப் பற்றாக்குறையால் உங்களின் சில வேலைகளும் நின்று போகலாம். இருப்பினும் நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. விரைவில் உங்கள் பிரச்சனை தீரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்கள் தவறான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவரின் உணர்வுகளைப் புண்படுத்தும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், சரியான நேரத்தில் உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:20

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

துலாம்

துலாம்

இன்றைய நாளின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. உங்கள் மனதில் பல வகையான கவலைகள் இருக்கும். மேலும் உங்கள் முக்கியமான பணிகளில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். இருப்பினும், தேவையில்லாமல் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். இது உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். மேலும் இது உங்கள் ஆரோக்கியத்தையும் பலவீனப்படுத்தலாம். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல் அதிகரித்து வருவதால், மேலதிகாரியின் கோபத்தைச் சந்திக்க நேரிடும். இப்படி கவனக்குறைவாகத் தொடர்ந்தால், உங்கள் முன்னேற்றக் கனவு முழுமையடையாமல் போய்விடும். சில்லறை வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். இன்று நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். வீட்டின் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் ஒரு வழிபாட்டு தலத்திற்கும் செல்லலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று அதிகரித்து வரும் மன அழுத்தத்தால் நீங்கள் நன்றாக உணர முடியாது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:15 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் திட்டம் தொடரலாம். இது தவிர, புதிய பங்குகளுக்கும் நேரம் பொருத்தமானது. அரசு வேலையில் இருப்பவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம் அல்லது பதவி உயர்வையும் பெறலாம். இன்றைய நாள் உங்களுக்கு பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு அதிகம். நாளின் இரண்டாம் பாதியில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்களுக்குப் பிடித்தமான இடத்தில் நடைப்பயிற்சியும் செய்யலாம். இன்று மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:20 மணி வரை

தனுசு

தனுசு

நீங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லையெனில் நீங்கள் ஏமாந்து போகலாம். இது தவிர, உங்கள் தொடர்புடைய ரகசிய விஷயங்களும் பகிர்வதைத் தவிர்த்திடவும். குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல்நிலை சரியில்லை என்றால், அவர்களுக்கு நல்ல கவனிப்பு தேவை. அதே போல் அவ்வப்போது மருத்துவரை அணுகவும். நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் இன்று பெரியதொரு மருத்துவ கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். வேலையின் அடிப்படையில், இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் நேரத்தைக் கண்காணித்து செயல்பட வேண்டும். உங்கள் காலதாமதம் முதலாளியின் மனநிலையை கெடுத்துவிடும். வியாபாரிகள் தாங்களாகவே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். மற்றவர்களை அதிகம் சார்ந்து இருக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

மகரம்

மகரம்

இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகளின் சுமை மட்டுமே அதிகரிக்கும். இருப்பினும், சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். எனவே நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. வர்த்தகர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப முடிவுகளைப் பெறலாம். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உங்கள் உறவைப் பலவீனப்படுத்தும். பண விஷயத்தில் இன்று சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகள் காரணமாக உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். ஆரோக்கியமாக இருக்க, உங்கள் நேரத்தை சில நேர்மறையான செயல்களுக்கு செலவிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 6 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்கள் நாளுக்கான திட்டங்களில் சில தடைகள் இருக்கலாம். நீங்கள் திட்டப்படி உங்கள் வேலைகள் முடிவடையாததால் நீங்கள் மிகவும் எரிச்சலடைவீர்கள். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் வேலை தொடர்பான எந்த பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். இன்று நீங்கள் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்துவீர்கள். வணிகர்கள் ஒரு பெரிய முதலீட்டைச் செய்யப் போகிறீர்கள் என்றால், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் நன்றாகப் பெறுங்கள். இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் பெரியவர்களுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். குழந்தை மூலம் அவதிப்பட வாய்ப்பு உண்டு. இன்று அவர்களின் உடல்நலம் அல்லது கல்வி பற்றிய உங்கள் அக்கறை மிகவும் அதிகரிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:19

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:45 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

மீனம்

மீனம்

தொழிலதிபர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர விரும்பினால், இன்று உங்களுக்கு நல்ல அறிகுறி தென்படும். உங்கள் திட்டம் மேலும் தொடரலாம் மற்றும் உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் பதவியைப் பெறலாம். அதே போல் உங்களுக்கு சில புதிய உரிமைகளும் கிடைக்கும். எதிர்காலத்தில் இதுபோல் கடினமாக உழைக்க வேண்டும். நிதி நிலைமை மேம்படும். நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். துன்பங்களில் உங்கள் அன்புக்குரியவரின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று தாய் வழியில் நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:11

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் காலை 11 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 27 June 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 27 June 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Saturday, June 25, 2022, 19:40 [IST]
Desktop Bottom Promotion