Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
Today Rasi Palan 27 December 2022: இன்று இந்த ராசிக்காரங்க ஆபீஸ்-ல ரொம்ப கவனமா இருக்கணும்...
இன்றைய தினம் கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். மூன்றாவது நபரால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படலாம். தனிப்பட்ட விஷயங்களில் மற்றவர்கள் தலையிட விடாமல் இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணிபுரிபவர்கள் இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியால் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபர்களின் பொருளாதார பிரச்சனை தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிற்றில் எரிச்சல், மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் நீங்கள் நிலுவையில் வைத்துள்ள பணியால் முதலாளி உங்கள் மீது மிகவும் கோபப்படலாம். வியாபாரிகளுக்கு, குறிப்பாக கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு இன்று லாபம் கிடைக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். பண விஷயத்தில் இந்த நாள் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக சிறுநீரகம் தொடர்பான நோய் இருந்தால், அலட்சியமாக இருக்கக்கூடாது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 முதல் மதியம் 2:30 வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. பண நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், திறந்த மனதுடன் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது உங்கள் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துங்கள். தொழிலதிபர்களுக்கு முதலீட்டு வாய்ப்பு கிடைத்தால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். நன்றாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 முதல் மாலை 6 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே! பணியிடத்தில் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். உயர் பதவியில் பணிபுரிபவராக இருந்தால், இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையுடனான உறவு வலுவாகும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுவாக வைத்திருக்க உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். இன்று வீட்டில் உள்ள ஒருவரிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அணுகுமுறை உங்களைத் தொந்தரவு செய்யும். சிறு தவறுகளுக்கு கூட அவர்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடலாம். உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். நாளின் இரண்டாம் பாதியில் நீங்கள் ஒரு சிறு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:05 முதல் மதியம் 12 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று எந்த ஒரு ஒப்பந்தத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் அவசரம் இன்று தீங்கு விளைவிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியின் முன் ஒழுங்காக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பழைய நோய் ஒன்று மீண்டும் தோன்றலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 முதல் மதியம் 2:30 வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று வேலையில் பிஸியாக இருப்பதால், குடும்பத்தில் சரியான கவனம் செலுத்த முடியாமல் போகும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும். வேலையில் மிகவும் தீவிரமாக இருப்பீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய கடினமாக உழைப்பீர்கள். சமீபத்தில் நீங்கள் புதிய வேலையில் சேர்ந்திருந்தால், இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றியடைந்தால், விரைவில் நீங்கள் ஒரு பெரிய முன்னேற்றம் அடைவீர்கள். தொழிலதிபர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவில் கவனக்குறைவால் உங்கள் ஆரோக்கியம் குறையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:45 முதல் இரவு 9:30 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்கள் திருமண வாழ்க்கை அமைதியாக இருக்கும். துணையுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுங்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று உங்கள் திருமணம் பற்றிய பேச்சு எடுக்கப்படும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் எந்த பழைய நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 முதல் மதியம் 1 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அதிகரிக்கும் செலவுகள் உங்கள் தலைவலியை அதிகரிக்கும். அலுவலகத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க இன்று கடினமாக உழைக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் அழுத்தம் உங்கள் மீது அதிகமாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு இன்று முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் கூட்டாக வணிகம் செய்தால், இன்று உங்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். வேலையுடன், உங்கள் திருமண வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று புதிய வருமானத்தைப் பெறுவீர்கள். உங்களின் அனைத்து நிதி பிரச்சனைகளும் விரைவில் தீரும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். வீட்டில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்களுடன் நல்ல உறவை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஆணவம் மற்றும் மோதலைத் தவிர்க்கவும். வணிகர்கள் அவசரமாக கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்பு ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7:20 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் இருக்கக்கூடும். பணியில் இருப்பவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் முரட்டுத்தனம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு இடையே பிளவு ஏற்படலாம். நிதி முயற்சி வெற்றியடைவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. விரைவில் நீங்கள் அனைத்து கடன்களிலிருந்தும் விடுதலை பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் நிம்மதியுடனும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வானம் நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு இன்னும் வலுவாக இருக்கும். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. யோசிக்காமல் தேவைக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். நீங்கள் முன்னேற்றம் பெற விரும்பினால், நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். அது வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்திலும் முழு அக்கறை காட்ட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை



Click it and Unblock the Notifications