Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்...

இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 27 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 27 April 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 27 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் இடமாற்றம் பெறலாம். உங்கள் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். சட்ட விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும். இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பயணம் மறக்க முடியாததாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நீங்கள் எலும்பு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:45 மணி முதல் இரவு 9:30 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று நீங்கள் பிறருடன் பேசும் போது, வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்துங்கள். உங்கள் பேச்சில் கடுமை தன்மை இருக்கும். உங்கள் கட்டுப்பாடற்ற பேச்சே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். வேலையின் அடிப்படையில், இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தற்போதைய வேலையில் விரும்பம் இருக்காதுள. இது தவிர, உங்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வணிகர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணப்பற்றாக்குறை காரணமாக, உங்கள் எந்த வேலையும் இன்று முழுமையடையாமல் இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உடல்நலம் பலவீனமாக இருக்கும். நீங்கள் மிகவும் சுமையாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதை உங்களுக்காக திறக்கும். உங்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு இன்று முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே உங்கள் முடிவை முன்னெடுத்துச் செல்வது நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். உங்கள் உடன்பிறந்தோரால் நிதி ஆதாயம் கூடும். வீட்டுப் பொறுப்புகள் அதிகரித்து வருவதாகத் தோன்றினாலும், உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை

கடகம்

கடகம்

இன்று வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம். வேலை விஷயமாக இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் பணம் சம்பந்தமாக சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்பட வாய்ப்புள்ளது. நாளின் இரண்டாம் பகுதியில் பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். நெருங்கிய நண்பரிடமிருந்து நல்ல ஆலோசனையையும் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 8:55 மணி வரை

சிம்மம்

சிம்மம்

உத்தியோகஸ்தர்கள் இன்று சரியான பலன்களைப் பெறுவார்கள். நீங்கள் நீண்ட நாட்களாக பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால், இன்று அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்களின் பதவி உயர்வு கடிதத்தை உங்களிடம் ஒப்படைக்கலாம். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட எந்தவொரு சரியான முடிவுக்கும் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வியாபாரத்தில் சாதகமான மாற்றம் ஏற்படலாம். அத்துடன் நீங்கள் செல்வத்தையும் பெறலாம். உங்கள் வணிகத்தை மேம்படுத்த வங்கியில் கடன் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்கள் திட்டத்தை தொடர இன்று சாதகமான நாள். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். உங்கள் வீட்டின் பெரியவர்களுடன் நீங்கள் ஒரு முக்கியமான கலந்துரையாடலையும் செய்யலாம். உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், ஓய்வில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. அலட்சியம் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:05 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

கன்னி

கன்னி

மாணவர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். கல்வித்துறையில் சில பெரிய சாதனைகளை அடையலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாயின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பைக் கொண்டு வரும். உங்கள் வருமானம் உயரும் அறிகுறிகள் தென்படும். விரைவில் நீங்கள் பணம் தொடர்பான அனைத்து கவலைகளிலிருந்தும் விடுபடலாம். இன்று உங்களுக்கு வேலையில் ஒரு கலவையான நாளாக இருக்கும். இன்று உங்கள் மீதான பொறுப்புகளின் சுமை சற்று அதிகமாக இருக்கும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

துலாம்

துலாம்

வேலையின் அடிப்படிடயில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. குறிப்பாக நீங்கள் வியாபாரம் செய்தால் இன்று சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். கைக்கு வரும் எந்த பொன்னான வாய்ப்பும் தவறவிடலாம். இருப்பினும், இதுபோன்ற விஷயங்களால் நீங்கள் சோர்வடைய தேவையில்லை. சரியான நேரம் வரும்போது, ​​விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதுடன் உங்கள் நடத்தையையும் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று சிறு செலவுகள் ஏற்படலாம். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி தொடர்பான கவலைகள் உங்களுக்கு தொந்தரவு தரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் நன்றாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் வியாபாரம் இன்று பெருகும். இன்று நீங்கள் விரும்பிய லாபத்தைப் பெறுவீர்கள். உடைகள், பொம்மைகள், அழகுசாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மரச்சாமான்கள் போன்றவை தொடர்பான வேலை செய்பவர்கள் இன்று பெரிய லாபத்தைப் பெறுவார்கள். மருந்து வியாபாரிகள் புதிதாக திட்டமிட்டால், இன்று அதற்கு சரியான நாள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், நீங்கள் சில பெரிய அரசியலுக்கு பலியாகலாம். சிலர் உங்கள் பெயரைக் கெடுக்க முயற்சி செய்யலாம். சிறு விஷயங்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்களின் இந்த பழக்கம் உங்கள் துணையிடம் இருந்து உங்களை விலக்கி வைக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். மன உறுதியுடன் இருக்க, தினமும் தியானத்தின் உதவியை நாடவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு

தனுசு

அன்புக்குரியவர்களின் ஆதரவும் அன்பும் துன்பங்களில் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இன்று உங்களின் சில பெரிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்கள் குடும்பத்தினருடன், நண்பர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் ஏதேனும் ஒரு மாற்றத்தைத் திட்டமிட்டால், இன்று நிச்சயம் வெற்றி பெறலாம். உத்தியோகஸ்தர்கள் இன்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலைகளில் நிறைய குறைகளை உங்கள் மேலதிகாரி கண்டு பிடிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நம்பிக்கை குறையக்கூடும். இருப்பினும், உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும் மற்றும் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உணவில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் வயிறு தொடர்பான சில நாள்பட்ட நோய் வெளிப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மகரம்

மகரம்

இன்று நீங்கள் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் நீங்கள் சில சட்ட சிக்கல்களில் சிக்கலாம். இன்று வணிகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் தடைப்பட்ட எந்த வேலையும் இன்று முடிவடையும். அதே போல் நீங்கள் பெரிய நிதி நன்மைகளையும் பெற வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இன்று மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் மனதை ஒருவருக்கொருடன் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணைக்கு பரிசு கொடுக்க திட்டமிட்டால், இன்று அதற்கு நல்ல நாள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பொறுப்புகளின் சுமை அதிகரிப்பதால் இன்று நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று வாகனத்தைப் பயன்படுத்தும் போது, ​​போக்குவரத்து விதிகளை மீறுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று அவர்களும் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்களுக்கு பிடித்த உணவுகளை அனுபவித்து உண்ண வாய்ப்பும் கிடைக்கும். பண விஷயத்தில் இன்று சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தால் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம். உங்கள் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களின் இந்தப் பயணம் உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மீனம்

மீனம்

நீங்கள் கூட்டு வணிகம் செய்தால், இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வேலை தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் சுமை அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்காகவும் சிறிது நேரம் கிடைக்காது. அலுவலக பிரச்சனைகளை வீட்டிற்கு கொண்டு வராமல் இருந்தால் நல்லது. உங்கள் அன்புக்குரியவர்களுடன் கண்ணியமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் நிதி நிலையில் சரிவுக்கான அறிகுறிகள் உள்ளன. இன்று நிதி இழப்பு ஏற்படலாம். பணம் சம்பந்தமான வேலைகளை யோசிக்காமல் செய்தால், வரும் நாட்களில் பெரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். காதல் விஷயத்தில் இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, April 27, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion