Just In
- 1 hr ago
இந்த 4 ராசிக்காரங்க காதலில் எப்போதும் விட்டுக்கொடுப்பவராக இருப்பார்களாம்... இவங்கள காதலிச்சா பிரச்சினையே இல்ல!
- 5 hrs ago
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- 12 hrs ago
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- 12 hrs ago
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
Don't Miss
- News
"சென்னை பஸ் செயலி" இனி பேருந்துகளை டிராக் செய்யலாம்.. செம்ம அப்டேட் கொடுத்த போக்குவரத்து கழகம்!
- Movies
ஆசைக்காட்டி மோசம் செய்த டாப் நடிகர்.. மன வேதனையில் இயக்குநர்.. மனைவி செய்த அதிரடி செயல்?
- Sports
அடப்பாவமே.. ரோகித் சர்மாவுக்கு 35 வயதிலா இந்த இக்கட்டான நிலைமை??.. ஆஸி, தொடரில் நிரூபித்தே தீரணும்!
- Automobiles
இதுதான் ஸியோமி எலெக்ட்ரிக் கார்... இணையத்தில் வெளியாகிய படங்கள்! வேற லெவல்ல இருக்கு.. ஆனா எங்கேயோ உதைக்குது!
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Today Rasi Palan 26 November 2022: இன்று ராசிக்காரர்கள் திருமண விஷயத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்கணும்...
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் ரிஷப ராசியின் ரோஹிணி மற்றும் மிருகசீருஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 26ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் மிகவும் பாராட்டப்படும். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். இன்று மேலதிகாரி உங்களுக்கு நல்ல செய்திகளை வழங்குவார். இன்று, உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் முன்னோர் சொத்தை விற்க நினைத்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று உங்கள் திருமணம் பற்றி வீட்டில் பேசலாம். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் நிதித் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று முதலாளி உங்களுக்கு அலுவலகத்தில் சில பெரிய பொறுப்புகளை வழங்கலாம். நீங்கள் அதை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிப்பது நல்லது. வணிகர்கள் இன்று நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். குறிப்பாக, நீங்கள் கூட்டு வணிகம் செய்தால், பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் ஒருவரோடு ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான முடிவுகளைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பின் அழுத்தம் அதிகரிப்பதால் இன்று நீங்கள் மிகவும் சுமையாக உணரலாம். நேர்மறையாக இருந்து, கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் அலுவலகத்தில் அவசரத்தில் எந்த வேலையையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களின் சிறு தவறும் எதிர்காலத்தில் தவறான விளைவை ஏற்படுத்தக்கூடும். வணிகர்கள் சட்ட விஷயங்களில் அலட்சியத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களின் பணிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அதை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று வேலையின் அடிப்படையில் மிகச் சிறந்த நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று பெரும் நிம்மதி கிடைக்கும். நீங்கள் கடன் அழுத்தத்தில் இருந்து இன்று விடுபடலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். ஆனால், இந்த நேரத்தில் ஓய்விலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்களுக்கு திடீர் நிதி பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நேரத்திற்கு சாப்பிடுவதைப் பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2:55 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்கள் நடத்தை அன்புக்குரியவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும். உங்கள் உறவுகளுக்கிடையே பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். அவசர அவசரமாக பணம் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம். இன்றைய நாள் வேலையில் மிகவும் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், உங்களின் கடின உழைப்பின் பலனாக பதவி உயர்வை விரைவில் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் லாபத்திற்காக மிகவும் போராடி நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். எனவே, கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 7:20 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, முன்பின் தெரியாத நபர்களை நம்புவதைத் தவிர்த்திடுங்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். இன்று நீங்கள் ஆன்மீகத்தில் அதிக ஆர்வத்தை உணருவீர்கள். தொழிலதிபர்களின் வேலையில் நீண்ட காலமாக ஏதேனும் அரசு சார்ந்த பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை தீரும். உங்கள் வேலையை சுமுகமாக முடிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக உயர் அதிகாரிகளிடம் பேசும் போது வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டாம். பணத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கவும். உடல்நலம் தொடர்பான விஷயத்தில் எந்த வித அலட்சியமும் காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:20 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்பத்தில் பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். இன்று உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். உங்கள் கடின உழைப்பால் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். பழைய கடனிலிருந்து விரைவில் விடுபடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். வணிகர்கள் இன்று சில முக்கியமான வணிக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நன்றாக யோசித்த பிறகே எந்த முக்கிய முடிவையும் எடுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. உங்கள் உடல்நிலையை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்த பலன் நிச்சயம் கிடைக்கும். உங்கள் நிதி முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம். இருப்பினும், உங்கள் நிதி முடிவுகளை கவனமாக எடுத்தால் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தடைப்பட்ட முன்னேற்றத்தைப் பெற தொடர்ந்து முயற்சிக்கவும். தற்போதைய வேலை பிடிக்கவில்லை என்றால், புதிய வேலை தேடுவதற்கு இதுவே சரியான நேரம். தொழிலதிபர்கள் இன்று சிறிய பயணத்தை மேற்கொள்ள வேண்டியிளருக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, வீட்டின் பெரியோர்களின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தும் தவறை செய்யாதீர்கள். இதனால் இழப்பு உங்களுக்கு மட்டுமே. திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் மனகசப்பு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகப்படியான நம்பிக்கையை தவிர்த்திடவும். சக ஊழியர்களிடம் குறை காண்பதை தவிர்க்கவும். இன்று தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். மாறிவரும் பருவநிலை காரணமாக ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்து கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று வணிகர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் மிகப்பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். நீங்கள் சமீபத்தில் ஏதேனும் ஆபத்தான முடிவை எடுத்திருந்தால், நல்ல முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றத்திற்கு நேரமிது. உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். விரைவில் பதவி உயர்வு பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மனஅழுத்தம் ஏற்படலாம். இன்று குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமடைவதால் மிகவும் கவலைப்படுவீர்கள். நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று திடீரென்று பெரிய செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியமாக இருக்க, எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இன்று திருமண விஷயத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று, உங்கள் துணையின் புரிதலுடன், பெரிய பிரச்சனைகள் சில தீர்க்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். வணிகர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் தடைப்பட்ட வேலைகளை முடிக்க பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்களுக்கு கைகள் அல்லது கால்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, வேலை பரபரப்பில் குடும்த்தினர் மீது கவனம் செலுத்த முடியவில்லை என்றால், இன்று அதற்கான நேரத்தை நீங்கள் பெறலாம். அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் தந்தையிடமிருந்து சில முக்கியமான ஆலோசனைகளையும் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களின் நல்ல நடத்தை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அலுவலகத்தில் உங்கள் நிலையை வலுப்படுத்த முடியும். வணிகர்கள் நிதி ரீதியாக பயனடைவார்கள். குறிப்பாக, ஆடை வியாபாரிகள் பெரிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை