For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...

இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 26 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 26 May 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 26 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று உணர்ச்சிரீதியாக நீங்கள் மிகவும் வலுவாக இருப்பீர்கள். வேலையில் அடிப்படையில், இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். இது தவிர, உங்கள் வருமானமும் அதிகரிக்கலாம். வியாபாரிகளின் நிலையும் வலுவடையும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று நன்றாக இருக்கும். கூடுதல் பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்கள் வாழ்க்கையில் சில சாதகமான மாற்றங்களைக் காண வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். வணிகத்துடன் தொடர்புடைய மக்களின் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு புதிய மற்றும் அழகான திருப்பத்தைக் காணலாம். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, சரியான நேரத்தில் தூங்கி அதிகாலையில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களை மிகவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:40 முதல் மாலை 6:10 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! நீண்ட நாட்களாக வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இந்நாள் ஏற்றது. இன்று வணிகர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தால் வீட்டில் உள்ளவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் நிலவும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நன்றாக இருக்கும். சிந்திக்காமல் செலவு செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 முதல் இரவு 7:40 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் இன்டர்வியூ சென்று நம்பிக்கையுடன் அதில் பங்கேற்றால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். தொழிலதிபர்கள் சில பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு வழக்கத்தை விட சிறந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் 11:30 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று வணிகர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். நீங்கள் உங்கள் முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். வீட்டில் சூழ்நிலை சரியில்லை என்றால், சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கவும். அமைதியாக இருப்பதன் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கவும். அதுமட்டுமல்லாமல், பெரியவர்களின் அறிவுரைகளை பின்பற்றுவது நல்லது. பணத்தைப் பொறுத்தவரை, அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கல்லீரல் தொடர்பான நோய் ஏதேனும் இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் 11:30 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று நீங்கள் கஷ்டங்களை சந்திக்க நேரிடலாம். இது தவிர, நீங்கள் வேலையில் நன்றாக உணர மாட்டீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சனைகள் உங்கள் வேலையில் ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்கவும். நீங்கள் ஒரு தொழிலதிபர் மற்றும் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டால், நீங்கள் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நிதி பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரலாம். உங்கள் வாழ்க்கை துணை சற்று வருத்தப்படுவார்கள். பணத்தின் அடிப்படையில் நாள் சராசரியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 3:20 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்றைய நாள் உங்களுக்கு நன்றாக இருக்காது. தேவையில்லாமல் மனம் தளர்ந்து, எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருப்பீர்கள். லேசான உடற்பயிற்சியுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். மன உறுதியுடன் இருக்க, எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். வணிகர்கள் இன்று எந்த முக்கியமான ஒப்பந்தத்தையும் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது, இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படலாம். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பணத்தின் அடிப்படையில் நாள் சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 முதல் இரவு 10 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். வேலை செய்பவர்களின் நாள் சாதாரணமாக இருக்கும். நிலுவையில் உள்ள பல பணிகள் இன்று குறையும். வணிகர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருக்கும். குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சோர்வு மற்றும் பலவீனம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்த்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். தொழிலதிபர்கள் மற்றவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 முதல் மாலை 6 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சிறு தவறுக்காக மேலதிகாரியின் கோபத்தை சந்திக்க நேரிடலாம். இது தவிர, நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், உங்கள் வழியில் பல தடைகள் வரலாம். உங்கள் நம்பிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் தொடர்புடையவர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். பெற்றோரின் ஆதரவு இருக்கும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 முதல் மாலை 6:50 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் திடீர் பணிச்சுமை கூடும். இதனால் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். இருப்பினும், உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று வணிகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்காது. குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடனான உறவு மோசமடையக்கூடும். இன்றைய நாள் பண விஷயத்தில் சிறந்த நாளாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 முதல் இரவு 7:20 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் இனிமையான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். பண நிலை வலுவாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிலை வலுவாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் முதலாளி உங்களைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். வணிகர்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுத்தால் நல்ல பலனைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனை இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 முதல் மதியம் 2:30 வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 26 May 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 26 May 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Wednesday, May 25, 2022, 23:00 [IST]
Desktop Bottom Promotion