For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் தொடர்பாக ஒருவருடன் தகராறு ஏற்படலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 26 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று பல விஷயங்களில் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் நீங்கள் நன்றாக உணருவீர்கள். உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் உங்கள் எல்லா வேலைகளையும் காலக்கெடுவிற்கு முன்பே முடிக்க முடியும். இது தவிர, நிலுவையில் உள்ள எந்த வேலையையும் இன்று செய்து முடிப்பீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளருடன் நல்ல உறவைப் பேணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், உங்களுக்கிடையேயான விரிசல் வணிகத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் படிப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆன்லைன் வகுப்புகளைத் தவறவிடுவது உங்களுக்கு நல்லதல்ல. வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:39

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று மனதில் ஏதோ இனம் புரியாத பயம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நெருங்கியவர்களுடன் மனம் திறந்து பேச வேண்டும். இந்த நேரத்தில் வேலை சம்பந்தமாக ஏதேனும் மாற்றம் பற்றி நீங்கள் யோசித்தால், உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பெற்றோரின் உடல்நிலை நன்றாக இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் எந்த நிதி பரிவர்த்தனையையும் செய்யலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 12:45 மணி வரை

மிதுனம்

மிதுனம்

தொழிலதிபர்களுக்கு இன்று வேலையைப் பற்றிப் பேசும்போது ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் ஏமாற்றம் அடைவதற்குப் பதிலாக, முழு நேர்மறையுடன் உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் நீங்கும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்கள் சோம்பலைக் கைவிட்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சிக்க வேண்டும். சக ஊழியர்களிடம் வீண் பேச்சுவார்த்தைகளைத் தவிர்க்கவும். சுயநலவாதிகளிடமிருந்து சற்று விலகி இருங்கள். இல்லையெனில் இன்று யாராவது உங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பண விஷயத்தில் இன்று சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் வெளி உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்:32

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

கடகம்

கடகம்

இன்று வேலையில் உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால் அதைத் தவறவிடாதீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வணிகம் புதிய திசையில் செல்லலாம். இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் படிப்பை விடாமுயற்சியுடன் தொடருங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் விஷயங்கள் இயல்பாக இருக்கும். குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் நடத்தையிலும் மென்மை இருக்கும். இன்று உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நல்லது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, நீங்கள் என்றால் இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மாலை 6:30 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று நீங்கள் கவலைகளால் சூழப்பட்டிருப்பீர்கள். தேவையில்லாத விஷயங்களை நினைத்து மன அமைதியை குலைக்காதீர்கள். நேர்மறையாக இருந்து, உங்கள் ஆற்றலை சரியாக பயன்படுத்துங்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் இன்று உங்கள் பணியில் சற்று அதிருப்தி அடைவார்கள். நீங்கள் செய்த வேலையில் அவர்கள் பல தவறுகளைக் கண்டறியலாம். அவர்களின் வார்த்தைகளைப் புறக்கணிக்கும் தவறைச் செய்யக்கூடாது. நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். உங்கள் வீட்டில் அமைதியைப் பேண உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று பண விஷயத்தில் கலவையான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்காது. திடீர் உடல்நலக் குறைவு சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

கன்னி

கன்னி

இன்று நீங்கள் உங்கள் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் எடுத்து வைக்க வேண்டும். மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இல்லையெனில் இன்று அது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். யாரோ ஒருவரால் இன்று உங்கள் மனம் புண்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள், தங்கள் கடின உழைப்பைப் பார்த்து, உங்கள் முதலாளி ஒரு பெரிய முடிவை எடுக்க முடியும். ஒருவேளை நீங்கள் விரைவில் பதவி உயர்வு பெறுவீர்கள். இன்று வியாபாரிகளுக்கு லாபகரமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் ரியல் எஸ்டேட் சம்பந்தமான வேலைகளைச் செய்தால் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். உங்கள் நிதி முயற்சி வெற்றியடையும் மற்றும் உங்களுக்கு எதிர்பாரத்த பணம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் சுபாவத்தில் கடுமையான தன்மை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அமைதியாக இருக்கவில்லை என்றால், அது கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசும்போது, இன்று நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்று உடல்நிலை குறித்து மிகவும் கவலையாக இருப்பீர்கள். பலவீனமான உடல்நலம் காரணமாக, உங்கள் நாளுக்கான திட்டங்களில் தடைகள் இருக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணம் தொடர்பாக ஒருவருடன் உங்களுக்கு தகராறு ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் உங்கள் நிதானத்தை இழக்காமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இன்று வேலையில் கலவையான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். இன்று ஒரு முக்கியமான பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அதை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:40 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் நிதி நிலை மேம்படும். சமீபத்தில் நீங்கள் எடுத்த சரியான நிதி முடிவுகளின் நல்ல பலன்களைப் பெறலாம். நிதி நெருக்கடிகள் நீங்கிய பிறகு சில புதிய வேலைகளைச் செய்யவும் திட்டமிடலாம். நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், கடினமாக உழைத்தாலும், ஏமாற்றமடைவீர்கள். இன்று வேலையை மாற்றுவது குறித்தும் யோசிக்கலாம். வணிகர்கள் இன்று எதிர்பார்த்த லாபம் பெறலாம். உங்கள் தடைப்பட்ட வேலையை மீண்டும் தொடங்குவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்களால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமான நாளாக இருக்கும். பெரிய பிரச்சனை எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

தனுசு

தனுசு

நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சரியான நேரம் வரும்போது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். திடீரென்று பயணம் செய்ய நேரிடலாம். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று உங்களுக்கு நல்ல வரன் உங்களைத் தேடி வரலாம். இருப்பினும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதிக அவசரம் நல்லதல்ல. எனவே கவனமாக சிந்தித்து உங்கள் இறுதி முடிவை எடுங்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் சோர்வாகவும் சுமையாகவும் இருப்பீர்கள். உங்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்:32

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மகரம்

மகரம்

குடும்பத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. இன்று சிறு சிறு விஷயங்களுக்காக சண்டையிடும் உங்கள் பழக்கத்தால் உங்கள் வீட்டின் அமைதி குலைந்து போகலாம். உங்கள் தவறான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். உங்களை நீங்களே கட்டுப்படுத்துவது நல்லது. உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், இன்று அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரியின் முக்கியமான ஆலோசனைகளைப் பெறலாம். இருப்பினும், இன்று நீங்கள் சில சக ஊழியர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தால், அவசரப்பட வேண்டாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் உணவை சீரானதாக வைத்திருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:14

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இன்று குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறலாம். உங்கள் நிதி நிலையில் ஒரு பெரிய முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. பணப்பற்றாக்குறையால் தடைப்பட்ட உங்களின் முக்கியமான சில வேலைகளும் இன்று முடியும். இது தவிர, இன்று நிதி ரீதியாக உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு உதவுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைப் பெறலாம். தொழிலதிபர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு அதிகம். சில நாட்களாக குடும்பத்தில் ஏற்படும் பதற்றம் உங்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருந்திருந்தால், இன்று அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம். வீட்டின் சூழலில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மீனம்

மீனம்

கடவுள் வழிபாட்டுடன் இன்றைய நாளைத் தொடங்குங்கள். நல்ல பலன்களைப் பெறுவீர்கள். முதலில், உங்கள் வேலையைப் பற்றி பேசினால், உங்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் முதலாளியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செயல்திறனில் முன்னேற்றத்தையும் காண்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மனதை உங்கள் துணையுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். உங்கள் நிதி முடிவுகளை அவசரமாக எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மிகவும் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்:21

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8:45 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Today Rasi Palan - 26 January 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 26 January 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Wednesday, January 26, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion