For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 25 September 2022: சூரிய பகவானின் அருளால் இன்று இந்த 5 ராசிகளுக்கு லாபகரமானதாக இருக்கும்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களையும் இன்று சிறப்பாக கையாளுவீர்கள். உங்கள் வேலை தொடர்புடைய விஷயங்களில் நீங்கள் சீரான மிகவும் நடந்து கொள்ள வேண்டும். அடுத்த வாரத்திற்கான பணிகளைத் திட்டமிடுவதற்கும் இந்த நாள் சாதகமானது. பண விஷயங்களில் உங்கள் அணுகுமுறை இன்று மிகவும் நடைமுறைக்குரியதாக இருக்கும். உங்கள் தொழில் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். எனவே, உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு போதுமான நேரத்தைக் கொடுக்க வேண்டும். இது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான பிணைப்பைப் பலப்படுத்தும். புதிய திட்டத்தில் வேலை செய்வதற்குப் பதிலாக, வரும் சிக்கல்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். பொதுவாக, இன்று அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று உங்கள் அணுகுமுறை சாதகமாக இருக்கும். நீங்கள் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். உங்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏதும் ஏற்படாவிட்டாலும், உங்கள் உடல்நிலை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

மிதுனம்

மிதுனம்

காதல் விவகாரங்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் துணையுடன் சிறப்பாக நேரத்தைச் செலவிட விரும்பலாம். ஒருவேளை நீங்கள் தனிமையில் இருந்தால், நிச்சயதார்த்தம் செய்து கொள்ள அல்லது திருமணம் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பம் ஏற்படலாம். மற்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது உங்கள் திறன் இன்று குறைவாக இருக்கலாம். எனவே, முக்கியமான கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்திடுவது நல்லது. இன்று நீங்கள் பழைய சொத்துக்களால் அதிக லாபம் அடைவீர்கள். முதலீட்டைப் பொறுத்தவரை இன்று நல்ல நாள். உங்கள் ஒவ்வொரு முடிவும் உங்களுக்கு நல்ல பலனையே தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்

கடகம்

திருமண வாழ்க்கையில் இருந்துவரும் மனகசப்பைப் போக்க விரும்பினால், பேச்சுவார்த்தை மூலம் இன்று அதை தீர்க்க முடியும். இல்லையெனில், உங்கள் உறவு மோசமடைலாம். அலுவலகத்தில் மற்றவர்களை விமர்சிக்கும் மனநிலையில் இன்று நீங்கள் இருக்கலாம். இது மோதலுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் நடத்தையில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முயற்சிப்பது முக்கியம். ஆரோக்கியத்தின் அடிப்படையில், இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் மனம் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு, முழு ஆற்றலுடன் செயல்பட முடியும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க விரும்பினால், மனதில் பலவிதமான யோசனைகள் வரக்கூடும். எனவே, அதைச் சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:11

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

சிம்மம்

சிம்மம்

நீங்கள் தனிமையில் இருந்தால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட இந்த நாள் மிகவும் ஏற்ற நாள். தொழில் ரீதியாகவும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் வெளிப்படையாகவும் மிகவும் கட்டுப்பாடுடனும் இருக்கலாம். அலுவலகப் பணியை சிறப்பாகச் சமாளிப்பீர்கள். ஆனால், நீங்கள் சில விஷயங்களைப் பற்றி வருத்தப்படலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உணர்ச்சி ரீதியாக பலவீனமடைவதைத் தடுக்க வேண்டும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இன்றைய நாள் பண விஷயத்தில் உங்களுக்கு நன்றாக இருக்கும். அதே நேரத்தில், நீங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை

கன்னி

கன்னி

இன்று நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் துணையின் ஆதரவை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். புதிய திட்டத்தைத் தீட்டுவதற்கோ அல்லது தொடங்குவதற்கோ இன்று மிகவும் சாதகமான நாள். இது உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வர போகிறது. இன்று உங்கள் மனக் கண்ணோட்டம் மிகவும் நன்றாக இருக்கும். உங்ளகால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் கையாள முடியும். திருமண வாழ்க்கையில் நிலவி வரும் பிரச்சனைகளைத் தீர்க்க உங்களுக்கு வலுவான வாய்ப்பு கிடைக்கும். இதன் விளைவாக, உங்கள் நிதி நிலையை வலுப்படுத்துவதிலும் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை

துலாம்

துலாம்

உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று ஏதாவது பெரிய சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கோபமடைந்து எந்த முக்கிய நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது முக்கியம். இன்று நீங்கள் உங்கள் பகுத்தறியும் திறனை தவறான திசையில் பயன்படுத்தக்கூடும். அதன்விளைவாக, அலுவலகத்தில் சில சாதகமற்ற சூழ்நிலைகளை சந்திக்கக்கூடும். இன்றைய கிரக நிலை அமைப்பின் மூலம் பார்த்தால், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஆரோக்கியம் தொடர்புடைய விஷயங்களுக்கு செலவிடலாம். அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியத்தின் நலனுக்காக, சிறிது ஓய்வு மற்றும் சத்தான உணவு மூலம் உங்கள் ஆற்றல் மட்டத்தை சீராக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைய நாள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சிறப்பான நாளாக இருக்கும். ஆனால் உங்கள் துணையுடன் நல்லிணக்கத்தைப் பராமரிக்க, உங்கள் வரம்புக்கு அப்பாற்பட்ட எதை பற்றியும் நீங்கள் விவாதிக்கக்கூடாது. இன்று, உங்களின் நடத்தை மற்றும் வேலை செய்யும் முறையால் அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெற முடியும். இன்று நீங்கள் உங்கள் அன்றாட பணிகளை மிக வேகமாக செய்து முடிப்பீர்கள். பண விஷயத்தில் இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பதோடு, எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 7:20 மணி வரை

தனுசு

தனுசு

இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். இன்று நீங்கள் தொழில் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். வியாபாரத்தில் உருவாகும் புதிய கூட்டு உங்களுக்கு இன்று சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் எதிர்பார்த்து கிடைக்காத பணம் திடீரென்று கிடைப்பதால் உங்கள் நிதி நிலை வலுப்பெறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்றைய நாள் எந்த பிரச்சனையும் இல்லாமல் கடந்து செல்லும். உங்களுக்கென நேரம் ஒதுக்கி மனஅமைதியைப் பெற்றிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2:55 மணி வரை

மகரம்

மகரம்

இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் துணையிடம் உண்மையான அன்பையும் வலுவான பற்றுதலையும் உணர முடியும். ஆனால், இன்று உங்களுக்கு வேலை செய்ய அவ்வளவாக விருப்பம் இருக்காது. மாறாக, இன்று நீங்கள் உங்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்து உடல் ஓய்விற்கு நேரத்தை செலவிட விரும்புவீர்கள். இன்று நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களையும் காது கொடுத்து கேட்கும் மனநிலையில் இருக்கலாம். இன்று நிதி சார்ந்த விஷயங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். ஆனால், ஆரோக்கியத்தின் அடிப்படையில், இன்று உடற்சோர்வு காரணமாக நீங்கள் மந்தமாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்றைய நாள் உங்களுக்கு சோர்வான நாளாக இருக்கும். வேலைச் சுமை காரணமாக உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக நேரம் ஒதுக்க முடியாது. இருப்பினும், நிறைய வேலை செய்த பிறகும், உங்கள் மன நிலை சீராக இருக்கும். மேலும், உற்சாகம் நிறைந்திருப்பதால், நிலுவையில் உள்ள உங்கள் பிரச்சனைக்கு சிறப்பான தீர்வு கிடைக்கும். கிரக நிலை சாதகமற்றதாக இருப்பதால், பண விஷயங்களில் இன்று மந்தமான நாளாகத் தெரிகிறது. இன்று நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியாது. பந்தயம் அல்லது சூதாட்டத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சித்தாலும், நீங்கள் தோல்வியடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்:4

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மீனம்

மீனம்

இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், விமர்சனங்களைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். இல்லையெனில், நீங்கள் சிக்கல்களில் சிக்கி கொள்ளலாம். அலுவலகத்தில் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நீங்கள் பணிபுரியும் விதத்தை சந்தேகிக்கக்கூடும். வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, இன்று நீங்கள் மற்றவர்களின் எண்ணங்களாலோ அல்லது கருத்துக்களாலோ பாதிக்கப்படுவீர்கள். எல்லோரும் உங்களை எதிர்ப்பது போல் அல்லது உங்களுக்கு எதிராக முயற்சிப்பது போல் நீங்கள் உணரலாம். இவை அனைத்திற்கும் கிரக நிலைகளே காரணம். இருப்பினும், நீங்கள் எல்லாவற்றையும் சரியான முறையில் கையாண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. இன்று நீங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்காக நிறைய பணத்தைச் செலவிடுவீர்கள். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Today Rasi Palan - 25 September 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 25 September 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Saturday, September 24, 2022, 21:28 [IST]
Desktop Bottom Promotion