For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 25 November 2022: இன்று இந்த ராசிக்காரங்க வாயை அடக்கணும்.. இல்லன்னா கஷ்டப்பட வேண்டியிருக்கும்

இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 25ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 25 November 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 25ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. ஆரோக்கியத்தை புறக்கணிப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பத்தை தவிர்த்து, ஓய்வில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வேலையைப் பொறுத்தவரை, சுமாரான நாளாகவே இருக்கும். உங்களின் வேலைப்பளு அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:35 முதல் மதியம் 1 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் விபத்து ஏற்படக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம் அல்லது நீங்கள் அவர்களை புண்படுத்துவீர்கள். எனவே இன்று உங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். சம்பள பிரச்சனையை எதிர்கொண்டால், இன்று அதற்கு தீர்வு கிடைக்கும். வணிகர்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கக் நேரிடும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! நீங்கள் மாணவராக இருந்தால், படிப்பைத் தவிர, தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள். இன்று உங்களின் வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துங்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். பெற்றோர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வேலையைப் பொறுத்தவரை, பிஸியான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் நிறைய ஓட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்த, நீங்கள் ஓய்வில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 முதல் இரவு 9 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று உங்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே உறவுகள் வலுவாகும். நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நாளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைச் செய்யும் போது அவசரத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவலையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 முதல் மாலை 4 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தடைபட்ட வேலைகள் முடிக்கப்படும். விரும்பிய இடமாற்றத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தால், இன்று நீங்கள் நல்ல செய்தியைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். வசதிகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காரமான உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 முதல் மாலை 3:00 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். பணம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தவிர, பழைய கடனில் இருந்தும் விடுதலை பெறுவீர்கள். பணிபுரிபவர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மோதலை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. கட்டுப்பாடற்ற கோபம் இன்று உங்களுக்கு புதிய பிரச்சனையை உண்டாக்கும். உங்கள் வேலை ஆபத்தில் இருக்க வாய்ப்புள்ளது. வணிகர்கள் இன்று பெரிய நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தாக இருக்கும். பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களின் நடத்தை உங்களிடம் நன்றாக இருக்காது. இன்று உங்களின் கோபமும் ஆணவமும் விஷயங்களை மோசமாக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று ஒரு முக்கியமான நிதி முடிவை எடுப்பீர்கள். வேலையில் அலட்சியமாக இருக்காதீர்கள், குறிப்பாக வணிகர்கள் எந்தவொரு புதிய வேலையைத் தொடங்கும் முன் கவனமாக சிந்திக்க வேண்டும். ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ப்ரௌன்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் சோம்பலை தவிர்த்து, முக்கிய பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்கள் வேலை எதையும் நிலுவையில் வைக்காதீர்கள். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு வெற்றி கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். வீட்டின் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருப்பினும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். நேர்மறையாக இருங்கள் மற்றும் கடினமாக உழையுங்கள். வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். வர்த்தகர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். நாளின் இரண்டாம் பாதியில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8:50 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று காதலிப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். திருமணமானவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படும். இன்று நீங்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றத்தால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 முதல் மதியம் 12 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள். மாணவர்கள் படிப்பில் பிரச்சனைகளை சந்தித்தால், ஆசிரியர்களின் உதவியைப் பெறுங்கள். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் முயற்சிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இன்று முழு கவனமும் உங்கள் பணியில் இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறுநீரக பிரச்சனை இருந்தால், இன்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:10 மணி முதல் இரவு 9:50 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று உங்கள் குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். இதனால் குடும்ப பிரச்சனைகள் தீரும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலை சம்பந்தமாக இன்று நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் பதவி உயர்வு பெறலாம் அல்லது உங்கள் வருமானம் உயரலாம். ஒரு புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி, காய்ச்சல், தலைவலி, சோர்வு போன்ற பிரச்சினைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 முதல் இரவு 8 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 25 November 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 25 November 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Friday, November 25, 2022, 5:02 [IST]
Desktop Bottom Promotion