For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 25 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முதலீடும் செய்வதைத் தவிர்க்கவும்...

இன்றைய நாள் கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 25ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 25 January 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 25ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகள் கவனமாக இருப்பது நல்லது. உங்களின் சில முக்கியமான வேலையை எதிரிகள் தடுக்க முயற்சிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உங்களின் முழுமையடையாத வேலையால், உங்கள் முன்னேற்றம் தடைப்படலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். திடீர் பண வரவைப் பெறலாம். இன்று உங்கள் அன்பானவர்களும் உங்களுக்கு சில நல்ல செய்திகளை கூறலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, உங்களது நீண்ட கால பயண திட்டத்தை செயல்படுத்த, இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த இடத்திற்கு சுற்றுலா செல்லலாம். இருப்பினும், சிந்திக்காமல் செலவு செய்யாதீர்கள். வேலையில், இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ப நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை வீட்டில் ஏற்பாடு செய்யலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 39

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2:25 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, உங்கள் குடும்பத்தில் நிலவிய நீண்ட கால பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்யவும். இல்லையெனில் பிரச்சனை பெரிதாகலாம். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். இன்று எந்த பெரிய செலவும் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக முழுமையடையாத வேலைகளை முடிக்க இன்றே முயற்சிக்கவும். இல்லையெனில், உங்கள் பொறுப்புகள் திரும்பப் பெறப்படலாம். வணிகர்கள் தங்கள் வணிகத் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்கவும். இன்று உங்கள் உடல்நிலை குறித்து கவலைப்பட நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 11 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பண விஷயத்தில் கலவையான பலன்களைத் தரும். அலுவலக சூழல் மிகவும் பரபரப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இன்று நீண்ட தூர பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்களின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக அமையும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். இருப்பினும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காககவும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். ஆரோக்கியத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மாலை 4:20 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். பணம் மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுவீர்கள். இன்று பண இழப்புக்கான அறிகுறிகள் தென்படலாம். இதெல்லாம் உங்கள் தவறான முடிவுகளின் விளைவு. தொழிலதிபர்கள் இன்று முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்றுவது நல்லது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் உடல்நிலையில் திடீர் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். இன்று செலவுகளின் பட்டியல் சற்று அதிகரிக்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் முக்கியமான விவாதம் நடத்தலாம். இன்று அவர்களிடமிருந்து வேலை தொடர்பான சில நல்ல ஆலோசனைகளையும் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் நீண்ட நேரம் சாப்பிடாமல் பட்டினி கிடப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மாலை 3 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் பண விஷயத்தில் இன்று மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக, நீங்கள் பெரிய தொகையை கடனாக வாங்குவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், எதிர்காலத்தில் உங்கள் கஷ்டங்கள் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதன் பலனாக உயர் பதவியை அடைவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், செலவுகளை குறைப்பது நல்லது. இன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம். உங்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். திடீரென்று பயணம் செய்ய நேரிடலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் உங்கள் வேலையை இழக்க நேரிடலாம். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நிதி விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும். உங்கள் உடல்நிலை சரியில்லை என்றால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் துணை சில பெரிய சாதனைகளை புரியலாம். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். நீங்கள் வேலையில்லாமல் இருந்தால் இன்று உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இன்று மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தவும். உங்கள் ஆரோக்கியம் இன்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, குடும்ப வாழ்க்கையில் மனஅழுத்தம் ஏற்படக்கூடும். இன்று உங்கள் முக்கிய முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பொருளாதார நிலையில் இன்று முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண வரவு கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் உங்களின் சிறிய தவறுக்கு முதலாளியின் கோபம் அதிகரிக்கக்கூடும். எல்லா வேலைகளையும் கவனமாகச் செய்வது நல்லது. வணிகர்கள் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது அவசரப்பட வேண்டாம். இன்று வானிலை மாற்றத்தால் உங்கள் உடல்நிலை குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் சோம்பலை விட்டு விட்டு அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவும் உங்கள் கடின உழைப்பை அழித்துவிடும். கூட்டு வியாபாரிகள், இன்று பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், நீங்கள் தொடர்ந்து முன்னேறி வெற்றியை அடைவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். இன்று நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, நீங்கள் சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தால், ஓய்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அலட்சியம் பெரும் விளைவை ஏற்படுத்தலாம். அரசு ஊழியர்களுக்கு இன்று சில நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல்நிலை குறைவதால், இன்று உங்கள் கவலை சற்று அதிகரிக்கலாம். நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 25 January 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 25 January 2023 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Wednesday, January 25, 2023, 5:25 [IST]
Desktop Bottom Promotion