Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரங்க அவசர முடிவு எடுத்தா அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்...

இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 25 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 25 August 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 25 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் பிஸியான நாளாக இருக்கும். பொறுப்புக்களின் சுமை அதிகமாக இருக்கும். இதனால் உங்களுக்கு நேரம் போதுமானதாக இருக்காது. சற்று மன அழுத்தத்தை உணர்வீர்கள். அலுவலகத்தில் சோம்பேறித்தனத்தைக் கைவிட்டு முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் வேலையை இன்று முடிக்க முடியாமல் போனால், மோசமான விளைவை சந்திக்க நேரிடும். வணிகர்கள், சட்ட விஷயங்களில் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மீது சில விஷயங்களால் கோபப்படலாம். உங்களின் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:15

அதிர்ஷ்ட நேரங்கள்: பிற்பகல் 2:30 முதல் மாலை 5 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! நீண்ட நாட்களாக சொத்து பிரச்சனைகள் இருந்தால், இன்று அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். அந்த தீர்வும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் கடின உழைப்பும், நேர்மறை எண்ணமும் உயர் அதிகாரிகளை கவரலாம். பொழுதுபோக்கிற்காக அதிக பணத்தை செலவிடுவது உங்களுக்கு நல்லதல்ல. வீட்டுச் சூழல் அமைதியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்:36

அதிர்ஷ்ட நேரங்கள்: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று எதற்கும் அவசரப்படாதீர்கள். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நெருங்கியவர்களிடம் கலந்தாலோசித்த பின்னர் எடுங்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மிகுந்த மரியாதையைப் பெறுவார்கள். அரசாங்க வேலை செய்பவர்கள், கடின உழைப்புக்கான சரியான பலனைப் பெறுவார்கள். நிதி நிலை மேம்படும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:16

அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 5 மணி முதல் இரவு 8:20 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று பண விஷயத்தில் கலவையான நாளாக இருக்கும். திடீரென்று பணத்தைப் பெறுவீர்கள். ஆனால் கடன் ஏதேனும் வாங்கியிருந்தால், இன்று அதை திருப்பி செலுத்த வேண்டுமென்ற அழுத்தம் அதிகரிக்கும். பழைய சொத்தை விற்க திட்டமிட்டால், சில தடைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பைக் கண்டு மேலதிகாரிகள் பதவி உயர்வை வழங்கலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:36

அதிர்ஷ்ட நேரங்கள்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இல்லாவிட்டால் ஏமாற்றப்படுவீர்கள். வணிகர்கள் தங்கள் வணிக முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. முதலீடு செய்ய நினைத்தால், அவசரப்படுவதைத் தவிர்த்திடுங்கள். வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை மரியாதையுடன் நடத்துவது நல்லது. தேவையற்ற ஆணவம் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்:16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் 10 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று வேலையைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். பார்ட்-டைம் வேலை செய்ய நினைப்பவர்களுக்கு, இன்று சிறந்த வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு பெரிய நிதி பரிவர்த்தனைகளை செய்ய வாய்ப்பு கிடைக்கும். வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். இன்று நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்:22

அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று மிகவும் பிஸியான நாளாக இருக்கும். பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு, நிலுவையில் இருந்த வேலைகள் இன்று வெற்றிகரமாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடையும். அதற்கு காரணம் உங்களின் கோபமாக இருக்கும். எனவே உங்களை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பண வரவு சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்:8

அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால், உங்களின் இமேஜ் பாழாகும். வர்த்தகர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய இழப்பு ஏற்படும். பணத்தைப் பொறுத்தவரை, சிறந்த நாளாக இருக்கும். செலவுகள் குறையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்:3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 9:15 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று காதலிப்பவர்களுக்கு மிகவும் சர்ச்சைக்குரிய நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் விரிசல் ஏற்படலாம். திருமணமானவர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை, இன்று சாதாரண நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இடுப்பு அல்லது முதுகில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்:14

அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று நிலுவையில் உள்ள வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள். இன்று உயர் அதிகாரிகளும் உங்கள் செயல்பாடுகளில் திருப்தி அடைவார்கள். வணிகர்கள் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பைப் பெறலாம். வியாபாரிகள் பெரிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். சில நாட்களாக வீட்டின் சூழல் சரியில்லை என்றால், இன்று ஓரளவு முன்னேற்றம் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பருவகால மாற்றத்தால் சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 முதல் இரவு 9:15 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று குழந்தைகளால் துன்பம் வர வாய்ப்புள்ளது. சற்று பிஸியான நாளாக இருக்கும். பொறுப்புக்களின் சுமை அதிகரிக்கும். வணிகர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். இந்நாளின் இரண்டாம் பாதியில் திடீர் பிரச்சனை வரலாம். இருப்பினும், அன்பானவர்களின் உதவியால் பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்காது. தினமும் யோகா மற்றும் தியானத்தை சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:18

அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 3 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சண்டைகளில் இருந்து விலகி இருங்கள். நீங்கள் தினமும் அலுவலகத்திற்கு தாமதமாக சென்றால், இன்று இப்பழக்கம் உங்களை சிக்கலில் மாட்டிவிடும். வியாபாரம் செய்பவர்களின் பொருளாதார பிரச்சனைகள் தீரும். பணப்பற்றாக்குறையால் உங்களின் வேலை நின்று போனால், இன்று நெருக்கமான ஒருவர் பண உதவி செய்யலாம். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரங்கள்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, August 25, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion