For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறரை மகிழ்விக்க எதையும் செய்வதைத் தவிர்க்கவும்...

இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 24 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

|

Today Rasi Palan - 24 January 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 24 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். வேலையுடன், உங்கள் குடும்பத்திற்கும் போதுமான கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் உறவுகள் பாதிக்கப்படலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்கள் கவனக்குறைவாக இருந்தால், அவர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு விலை உயர்ந்த நாளாக இருக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். அதனால் நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பீர்கள். வேலையைப் பற்றி பேசும்போது, அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். தேவையில்லாத மோதல்கள் உங்கள் வேலையைப் பாதிக்கலாம். வணிகர்கள் இன்று பெரிய ஒப்பந்தங்களைச் செய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். உங்கள் வியாபாரம் செழிக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், அதிக ஓட்டம் காரணமாக இன்று நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்:20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 3:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தால், இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். ஊழியர்களுடனான ஒருங்கிணைப்பு மோசமடையக்கூடும். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. அதே நேரத்தில், கூடுதல் பணிச்சுமையும் தொந்தரவு செய்யும். உயர் அதிகாரிகளின் அழுத்தம் உங்கள் மீது அதிகமாக இருக்கும். இன்று நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பீர்கள். இன்று பணத்தின் அடிப்படையில் சராசரி நாளாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் சாத்தியமாகும். குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் தரப்பை நிதானமாக முன்வைக்க முயற்சித்தால் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

அலுவலகத்தில் சோம்பேறித்தனத்தைக் கைவிட்டு வேலையில் முழு கவனத்தையும் செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், உங்கள் முக்கியமான பல பணிகள் முழுமையடையாமல் இருக்கும். இன்று தொழிலதிபர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத்ள தவிர்க்கவும். உங்கள் வணிக முடிவுகளை நீங்களே எடுத்தால் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமாக இருக்கலாம். உங்களுக்கிடையில் பிரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டு உங்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுப்பது நல்லது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் ஒருவருக்கு நிதி உதவி செய்யலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், அதிகம் கவலைப்படுவதைத் தவிர்த்து, உங்கள் உணவில் அதிக கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9:05 மணி வரை

கடகம்

கடகம்

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். அதனால் ஏமாற்றம் மற்றும் விரக்தியால் எதையும் சாதிக்க முடியாது. நீங்கள் நேர்மறையாக இருந்து முன்னேறுங்கள். விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உங்கள் அலுவலகத்தில் சூழல் நன்றாக இருக்கும். இன்று உங்கள் வேலைகள் மிக வேகமாக முடிவடையும். தேவைப்படும் போது சக ஊழியர்களுக்கும் உதவலாம். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். உங்கள் வருமானமும் உயரும். போக்குவரத்து தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு சிறிய கவனக்குறைவும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஒருவருக்கொருவர் நம்பிக்கை வலுவடையும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க, நீங்கள் மனதளவிலும் வலுவாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:50 மணி வரை

சிம்மம்

சிம்மம்

நீங்கள் சமீபத்தில் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து உங்களுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். இப்படி யோசித்து முடிவெடுத்து வந்தால், விரைவில் உங்களின் பொருளாதாரப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இன்று நிதி ஆதாயத்தைப் பெறலாம். வியாபாரத்தை பெருக்க நினைத்தால் வெற்றி கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பான நாளாக இருக்கும். அதிக வேலைப்பளு காரணமாக இன்று உங்களுக்காக நேரம் கிடைக்காது. இருப்பினும், உங்கள் வேலையை அவசரமாக செய்ய வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று முதுகு அல்லது இடுப்பு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:15 மணி வரை

கன்னி

கன்னி

நீங்கள் சோர்வாகவும் சுமையாகவும் உணர்ந்தால், இன்று உங்களின் பபரப்பான வழக்கத்திலிருந்து சிறிது நேரம் உங்களுக்காக ஒதுக்குங்கள். நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். இது உங்களை மனதளவில் நன்றாக உணர வைக்கும். அதே நேரத்தில், நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். தொழிலதிபர்கள் இன்று தேவையில்லாமல் பயணம் செய்ய நேரிடும். இன்று உங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். பண விஷயத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். தடைப்பட்ட பணத்தை இன்று மீட்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். பெற்றோருடன் உறவில் இணக்கம் ஏற்படும். உங்கள் தாயாரின் உடல்நிலை சில காலமாக சரியில்லாமல் இருந்தால், இன்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம். இருப்பினும், இந்த நேரத்தில் அவர்கள் ஓய்வில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:21

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்காது. குறிப்பாக நீங்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்தால், கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். இன்று வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் நிறைய ஓட வேண்டியிருக்கும். விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலை செய்பவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள் இன்று புதிய வேலைகள் எதையும் தொடங்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டின் உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மோதல் அல்லது ஆணவத்தைத் தவிர்க்கவும். நீங்கள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

அலுவலகத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சில வேலைகள் இன்று முடிவடையும். இது உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். உங்கள் செயல்திறனில் முதலாளி மிகவும் திருப்தி அடைவார். இதனுடன், உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மருந்து நிறுவனங்கள் தொடர்பான வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். அதே நேரத்தில், தானியங்கள் தொடர்பான வேலை செய்பவர்களும் இன்று நிதி நன்மைகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழ்நிலை இன்று சற்று பதற்றமாக இருக்கும். தந்தையின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்படலாம். இன்று பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், எந்த வகையிலும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:28

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை

தனுசு

தனுசு

நீங்கள் தனிமையில் இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையை தேடும் பணி முடிவடையும். விரைவில் உங்கள் திருமணம் நடக்கலாம். நீங்கள் ஏற்கனவே திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்கள் அன்புக்குரியவர்கள் புறக்கணிக்கப்படலாம். இளைய உடன்பிறப்புடனான உறவு சிறப்பாக இருக்கும். இன்று அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பும் கிடைக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலை அழுத்தத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் மேலதிகாரிகளை மகிழ்விக்க நீங்கள் இதைச் செய்தால், அது உங்கள் செயல்திறன் மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். இன்று உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 9:20 மணி வரை

மகரம்

மகரம்

எதிர்மறை எண்ணங்களைக் கொண்டவர்களிடமிருந்து சற்று விலகியே இருங்கள். இல்லையெனில் உங்கள் வாழ்க்கையும் பாதிக்கப்படலாம். வேலையைப் பற்றி பேசினால், உங்கள் மேலதிகாரி மற்றும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். அனைத்து வேலைகளையும் விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரியுடன் நீங்கள் ஒரு முக்கியமான கலந்துரையாடலையும் செய்யலாம். அதே நேரத்தில், வணிகர்கள் விரைவான லாபம் ஈட்டுவதற்கு அவசரமாக எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டின் பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க, நீங்கள் ஒரு சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்:22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மாலை 3:40 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு வேடிக்கையான நாளாக இருக்கும். நண்பர்களுடன், இன்று நீங்கள் வீட்டில் ஒரு சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தகைய நேரத்தைச் செலவழித்த பிறகு நீங்கள் மிகவும் நன்றாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். வேலை தேடுபவர்கள் தங்கள் முயற்சிகளை அதிகரிக்கவும். நீங்கள் ஏற்கனவே ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தால், அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நீங்கள் நல்ல உறவைப் பெறுவீர்கள். மேலும், அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இது வியாபாரிகளுக்கு லாபகரமான சூழ்நிலையாக மாறும். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய வணிகத் தொடர்பை ஏற்படுத்தியிருந்தால், இன்று நீங்கள் அதிலிருந்து நல்ல பலனைப் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவில் அன்பும் சொந்தமும் நிலைத்திருக்கும். இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்:28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மீனம்

மீனம்

இன்று வணிகர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் வரும் நாட்களில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் ஆற்றலை நல்ல வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும். பிறர் வேலையில் அதிகம் தலையிடாமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், தேவையில்லாமல் உங்கள் துணையை சந்தேகிக்க வேண்டாம். உங்களின் இந்த பழக்கம் உங்கள் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை அழித்துவிடும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை வைத்திருந்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், யோகா மற்றும் தியானத்தை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்:22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மாலை 3:40 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 24 January 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 24 January 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Sunday, January 23, 2022, 21:58 [IST]
Desktop Bottom Promotion