For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 23 September 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்...

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 23ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 23 September 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 23ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்காது. இன்று உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்தால் நல்லது. இது தவிர, கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும். பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். வர்த்தகர்கள் இன்று நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:8

அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 5 மணி முதல் இரவு 8:25 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் கடினமாக உழைத்தாலும் நல்ல முடிவுகளைப் பெறவில்லை என்றால், நீங்கள் சரியான திசையில் முயற்சி செய்யவில்லை என்று அர்த்தம். உங்களுக்கு நெருக்கமானவர்களிடமும், அனுபவமுள்ளவர்களிடமும் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கலாம். இன்று வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்களை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். தேவையில்லாமல் அதிக பணம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 முதல் 8:55 வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று அதிக நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஒவ்வொரு சவாலையும் மிகுந்த தைரியத்துடனும் விவேகத்துடனும் எதிர்கொள்வீர்கள். நிலுவையில் உள்ள வேலை இன்று வெற்றிகரமாக முடிக்கப்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் முதலாளியை மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும். வியாபாரிகளுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் உங்கள் பட்ஜெட்டை சமநிலையில் வைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அற்புதமான நேரத்தை செலவிடுவீர்கள். ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்தால், இன்று அப்பிரச்சனை அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணம் மறக்க முடியாததாக இருக்கும். நிதி நிலை மேம்படும். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நிதி பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். அலுவலகத்தில் கடினமான பணிகளை மேலதிகாரிகள் உங்களுக்கு ஒதுக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும் அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வணிகர்களை சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இன்று உங்கள் அன்புக்குரியவரின் ஆரோக்கியத்தில் திடீர் சரிவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று திடீரென்று விருந்தினர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். இதனால் உங்களின் சில திட்டங்கள் பாழாகும். உங்களின் சில முக்கியமான வேலைகள் முழுமையடையாமல் இருக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவைப் பேண முயற்சி செய்யுங்கள். தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். வரவை விட அதிக செலவு செய்யாதீர்கள். மற்றவர்களின் உத்தரவின் பேரில் எந்த நிதி முடிவுகளையும் எடுக்காதீர்கள். இன்று நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரங்கள்: காலை 4 மணி முதல் 9:30 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்கள் வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரியின் மனநிலை நன்றாக இருக்கும். நீங்கள் விரும்பும் திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பும் உங்களுக்கு வழங்கப்படலாம். கடினமாக உழைத்தால் விரைவில் பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். வணிகர்கள் வரி தொடர்பான எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். நிதி நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரங்கள்: மதியம் 12:40 முதல் மாலை 4 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகம் அல்லது வியாபாரம் எதுவாக இருந்தாலும் உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வீட்டின் சூழ்நிலை சாதகமாக இருக்கும், பெற்றோரின் அன்பு மற்றும் ஆசீர்வாதத்தால் நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிதியைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும். செலவுகள் குறையும். திடீரென்று பயணம் மேற்கொள்ள நேரிடும். வேலையுடன் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 7 மணி முதல் இரவு 9:05 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! சிறு சிறு விஷயங்களுக்காக கவலை கொள்வதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் இன்றைய தினம் பாழாகிவிடும். அலுவலகத்தில் உங்களின் பணிகளை முழுமையாக முடிக்க முடியவிட்டால், உயர் அதிகாரிகள் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கலாம். இன்று அவசரம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். பணத்தின் அடிப்படையில் நாள் சராசரியாக இருக்கும். நீங்கள் கடன் வாங்கவோ அல்லது கடன் கொடுக்கவோ நினைத்தால், இன்று அதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இன்று காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்:25

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் 9:20 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இருப்பினும் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இன்று யாரையும் நம்ப வேண்டாம். உங்களின் அனைத்து வேலைகளும் உங்கள் திட்டத்தின்படி விரைவில் முடிக்கப்படலாம். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடன் சுமை இருந்தால் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரங்கள்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இன்று வேலையைப் பொறுத்தவரை சவாலானதாக இருக்கும். பல முயற்சிகள் செய்தும் வெற்றி கிடைக்காமல் போகலாம். வேலைகளில் தடை அல்லது தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அவசரப்பட்டு எதையும் செய்யாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலைகள் இருக்கும். பணவரவு சாதாரணமாக இருக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரங்கள்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் நன்றாக யோசித்தால் நல்லது. திருமணமானவர்கள் இன்று பாதகமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்படலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். சிக்கிய பணம் வராததால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரங்கள்: காலை 6 முதல் 9:55 வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! அரசு வேலை செய்பவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். அதே நேரத்தில், தனியார் வேலை செய்பவர்களும் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வணிகர்கள் இன்று நல்ல நிதி பலன்களைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று உங்களுக்காக நிறைய ஷாப்பிங் செய்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:27

அதிர்ஷ்ட நேரங்கள்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 23 September 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 23 September 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Thursday, September 22, 2022, 20:58 [IST]
Desktop Bottom Promotion