For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்..

இன்று விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 23 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan -23 November 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 23 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஆணவம் மற்றும் மோதலைத் தவிர்க்கவும். இல்லையெனில் இழப்பு உங்களுக்குத்தான். உங்கள் வேலையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் பொன்னான நேரத்தை தேவையில்லாமல் வீணடித்தால், உங்கள் முக்கியமான பல பணிகள் இன்று முழுமையடையாமல் போகலாம். இது தவிர, இது உங்கள் பெயரையும் பாதிக்கும். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் நிலவும். கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டு வசதிகளுக்காக அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். உடல்நலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று திருமண வாழ்க்கையில் பதற்றமான சூழல் ஏற்படும். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து, ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. அன்பு மற்றும் நம்பிக்கையால் உங்கள் உறவு வலுவடையும். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் கடினமாக உழைத்தால் சிறப்பான பலனைப் பெறலாம். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சாதகமாக இருக்கும். இன்று குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறலாம். நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், வயிறு தொடர்பான சில நாள்பட்ட நோய்கள் ஏற்படும். எனவே, உங்கள் உணவில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:55 மணி முதல் இரவு 10 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று அலுவலகத்தில் மேலதிகாரியின் நல்ல ஆலோசனையைப் பெறலாம். இன்று நீங்கள் செய்யும் எந்த வேலையிலும் அவர்கள் அதிருப்தி அடையலாம். நீங்கள் அவருடைய ஆலோசனையைப் பின்பற்றுங்கள். இன்று வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். குறிப்பாக மர வியாபாரிகள், மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சில உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு மோசமடைய வாய்ப்புள்ளது. கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் உறவில் கசப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயத்தை பற்றியும் விவாதிப்பதைத் தவிர்க்கவும். இன்று அவசரமாக எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்தால் நல்லது. இல்லையெனில் பாதிப்பு உங்களுக்கு தான்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:30

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்

கடகம்

இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்காது. கை, கால்களில் வலி ஏற்படலாம். உங்களுக்கு ஏற்கனவே சிக்கல் இருந்தால், கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்று வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் திடீரென்று வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும் உங்களின் இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வணிகர்கள் இன்று பெரிய ஒப்பந்தங்களைச் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். விரைவில் உங்கள் வணிகம் புதிய திசையில் நகரும். நிதி நிலைமையில் முன்னேற்றம் சாத்தியமாகும். தடைப்பட்ட பணம் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுக்கிடையேயான காதல் இன்னும் ஆழமடையும். நீங்கள் திருமணமாகாதவர் மற்றும் காதல் திருமணம் செய்ய விரும்பினால், இன்று நீங்கள் அவசரப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:21

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:40 மணி முதல் மாலை 6 மணி வரை

சிம்மம்

சிம்மம்

உத்தியோகஸ்தர்கள் இன்று தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறலாம். அலுவலகத்தில் உங்கள் மீதான மரியாதை கூடும். பாதகமான சூழ்நிலைகளிலும் எளிதாக வேலை செய்யக்கூடிய உங்கள் திறன் சக ஊழியர்களை விட உங்களை முன்னிலைப்படுத்தும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல், புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பது நல்லது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு வழக்கத்தை விட சிறந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் குழந்தைகளுக்காக சில முக்கியமான பொருட்களை வாங்கலாம். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கூடுதல் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உங்கள் மனதைக் அன்புக்குரியவருடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி

கன்னி

அதிகப்படியான நம்பிக்கை வணிகர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இன்று எந்த முடிவையும் யோசிக்காமல் எடுத்தால், எதிர்காலத்தில் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். இன்று நிதி சம்பந்தமாக உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியாது. நீங்கள் நீண்ட காலமாக ஒரு வேலையைச் செய்தால், இத்தனை நாட்களாக இருந்துவந்த ஊதிய பிரச்சனை இன்று தீர்க்கப்படும். உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து அன்புக்குரியவர்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதனால் உறவில் அன்பு அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் கொஞ்சம் சோர்வாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:38

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்

துலாம்

உத்தியோகஸ்தர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி நினைத்தால், உங்கள் முடிவை புத்திசாலித்தனமாக எடுங்கள். உங்களின் ஒரு தவறான நடவடிக்கை பெரும் சிக்கலில் மாட்டிவிடும். இன்று இரும்பு வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். நீங்கள் லாபம் ஈட்ட சில சிறந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் சிலருடனான உறவில் குழப்பம் ஏற்படலாம். உங்கள் முடிவுகளை மற்றவர்கள் மீது திணிப்பதை தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். உங்களுக்கிடையில் ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், பேச்சுவார்த்தை மூலம் அதை நீக்க முயற்சிக்கவும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஒவ்வாமை அல்லது தொற்று ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:29

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:35 மணி முதல் மதியம் 1 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

அலுவலகத்தில் உங்களுக்கு முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தால், உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். மேலும், சக ஊழியர்களுடன் அதிகம் பேசுவதைத் தவிர்க்கவும். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாவிட்டால், உங்கள் முன்னேற்றம் தடைப்படலாம். வியாபாரிகள் திடீரென்று நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் பயணம் மிகவும் சோர்வாக இருக்கும். இன்று, நீங்கள் எந்த ஒரு பெரிய நிதி பரிவர்த்தனையையும் அவசரமாக செய்யாமல் இருந்தால் நல்லது. குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். உங்கள் வார்த்தைகள் குழந்தைகளை தொந்தரவு செய்யலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையும் உங்களுக்கு நன்றாக இருக்காது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவு மற்றும் உங்கள் வழக்கத்தை ஒழுங்கமைக்க முயற்சிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்:15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு

தனுசு

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மிகச் சிறந்த நாளைக் கழிப்பீர்கள். ஒருவேளை இன்று நீங்கள் ஒரு சிறிய பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பைக் கூட பெறுவீர்கள். பெற்றோர் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்று நீங்கள் வேலையில் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். நீங்கள் வெளிநாடு செல்ல விரும்பினால், உங்கள் கனவு விரைவில் நனவாகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். மேலும் உங்கள் அன்புக்குரியவர் மீதான நம்பிக்கையும் பலப்படும். பணம் தொடர்பான சில பெரிய வேலைகளைச் செய்ய நீங்கள் திட்டமிட்டால், இன்று அதற்கு நல்ல நாள். நீங்கள் வெற்றியைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்கள் உடல்நிலை அதிகப்படியான அலைச்சல் காரணமாக பலவீனமாக இருக்கும். எனவே, ஓய்விலும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

வியாபாரத்தில் ஏற்பட்ட பின்னடைவால் உங்கள் கவலைகள் அதிகரிக்கலாம். இருப்பினும் நீங்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை. இத்தகைய ஏற்ற தாழ்வுகள் வியாபாரத்தில் சாதாரணம் தான். சரியான நேரத்தில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகிறது. இவை அனைத்தும் உங்கள் கவனக்குறைவின் விளைவு. எனவே அமைதியான மனதுடன் உங்கள் வேலையில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வரவுசெலவுத் திட்டத்தை மீறி செலவு செய்ய வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, பெற்றோரின் உணர்வுகளை மதித்து, மரியாதையுடன் நடத்தவும். உங்கள் தவறான அணுகுமுறை அவர்களை வருத்தமடையச் செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சாதாரணமாக நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை

கும்பம்

கும்பம்

நீங்கள் சமீபத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணலை வழங்கியிருந்தால், இன்று உங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். கடினமாக உழைத்து முன்னேறுங்கள். விரைவில் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இன்று வணிகர்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கலாம். குறிப்பாக நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இன்று அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்கும். மேலும் அவர்கள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளையும் பெறலாம். உங்கள் உடல்நலம் மேம்படும். இன்று நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் மாலை 3 மணி வரை

மீனம்

மீனம்

இன்று நீங்கள் மிகவும் சோம்பலாக உணரலாம். இதன் காரணமாக உங்கள் முக்கியமான பணிகளில் சரியான கவனம் செலுத்த முடியாது. அலுவலகத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். வியாபாரிகளுக்கு இன்று கலவையான நாள். இருப்பினும், இன்று நீங்கள் உங்கள் பங்கில் கடினமாக உழைப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். வாழ்க்கைத் துணையின் தவறான நடத்தை உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும். உங்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் குறைகள் அனைத்தையும் சரியான நேரத்தில் அகற்ற முயற்சிப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்:5

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan -23 November 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 23 November 2021 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Monday, November 22, 2021, 19:16 [IST]
Desktop Bottom Promotion