For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 21 November 2022: இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்...

இன்று மீன ராசியின் உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 21ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 21 November 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மீன ராசியின் உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 21ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சிறப்பாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களின் அனைத்து வேலைகளும் திட்டப்படியே முடிக்கப்படும். இது தவிர, உங்கள் கடின உழைப்பின் சரியான பலன்களையும் நீங்கள் பெறலாம். வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டுமேன்ற கனவு காண்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலனைத் தருகிறது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். இன்று நீங்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். இன்று உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். கோபத்தை விடுத்து நிதானமாக வேலை செய்தால் நல்லது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் உடல் வலியால் சிரமப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 2:55 வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இன்று பேசும் போது உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்தவும். இன்று உங்கள் கசப்பான வார்த்தைகள் உங்கள் அன்புக்குரியவர்களை உங்களிடமிருந்து விலக்கி வைத்து விடும். எனவே, ​இந்த விஷயத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்களின் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் பலத்தால் இன்று நல்ல வெற்றியை அடைய முடியும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். குறிப்பாக, நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால் இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நீண்ட நேரம் பசியுடன் இருப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்களுக்கு வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 மணி முதல் இரவு 7:45 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். நீண்ட காலமாக தொந்தரவு செய்து கொண்டிருந்த சட்ட விவகாரங்கள் பற்றி வழக்கறிஞரை அணுகுவதற்கு இன்று சிறந்த நாள். உங்கள் பிரச்சனைகள் விரைவில் நீங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்று பண விஷயத்தில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். எனவே, வீண் செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். இல்லையெனில், இதனால் மனஅழுத்தம் அதிகரிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று உங்கள் திருமணம் பற்றி வீட்டில் பேச தொடங்கலாம். வேலை தேடுபவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரசு வேலைக்கு முயற்சிப்பவராக இருந்தால் இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். இன்று உடல்நலம் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்க போகிறது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்தால், இன்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். வீட்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை சமூகமாக பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். தேவையில்லாத கோபம், ஆணவம் பிரச்சனையை பெரிதாக்கிவிடும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் பலவீனமாக இருக்கலாம். இன்று உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். இன்று உங்கள் மீதான பொறுப்புகளின் சுமை குறைய வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்காக போதுமான நேரத்தையும் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் நன்றாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மாலை 3:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவான நாளாக இருக்கும். சொந்தமாக தொழில் தொடங்க நினைத்து திட்டமிட்டிருந்தால், இன்று உங்கள் திட்டம் நிச்சயம் முன்னேறி செல்லும். இந்த விஷயத்தில் நெருங்கிய நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் தடைப்பட்ட வேலையை இன்று மீண்டும் தொடங்கலாம். இன்று நீங்கள் பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். குறைந்த முயற்சியில் நல்ல லாபத்தைப் பெறலாம். இருப்பினும், உங்கள் பணத்தை சரியாகப் பயன்படுத்த முயற்சித்தால் நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக இன்று உங்கள் மனதை உங்கள் உடன்பிறந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:40 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் எல்லா வேலைகளையும் இரண்டு மடங்கு வேகமாக செய்து முடிக்க முடியும். இதனால் உங்கள் முதலாளி மிகவும் மகிழ்ச்சியடைவார். விரைவில் உங்கள் கடின உழைப்புக்கான சரியான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் வணிகம் விரைவில் வேகமெடுக்கும். தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுக்க இன்று நல்ல நாள். உங்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று, உங்கள் துணையின் அன்பான நடத்தை உங்களை சிறப்பாக உணர வைக்கும். இதனால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணருவீர்கள். இன்று ஆரோக்கியத்தில் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் அலுவலக வேலையில் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். நீங்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். தேவையற்ற விஷயங்களில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்பதைத் தவிர்த்து, உங்கள் முக்கியமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகள் இன்று கவனமாக இருக்க வேண்டும். உங்களின் முக்கிய வணிக முடிவுகளை மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் எடுப்பதைத் தவிர்க்கவும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சில முக்கியமான பொருட்களையும் வாங்கலாம். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களுடனான உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். முடிந்தால், உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இன்று உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். இது உங்களுக்கிடையேயான மனகசப்புகள், கருத்து வேறுபாடுகளைக் குறைக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வணிகர்கள் இன்று விவாதத்தில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், நீங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் குறைகளைக் கண்டறிவதைத் தவிர்க்கவும். அவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில், இன்று நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும். உங்கள் முதலாளி உங்களுக்கு எதிராக சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம். பண விஷயத்தில் இன்று அவசரம் வேண்டாம். உங்கள் நிதிப் பக்கத்தை வலுப்படுத்த விரும்பினால், உங்கள் செலவுகளைக் குறைக்கவும். இது தவிர, பண பரிவர்த்தனைகளிலும் முழு எச்சரிக்கையுடன் இருங்கள். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. உங்கள் துணைக்காக நீங்கள் ஏதாவது சிறப்பு செய்ய விரும்பினால், இன்று அதற்கு ஏற்ற நாள். உங்கள் ஆரோக்கியம் இன்று சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான நாளாக அமையக்கூடும். வியாபாரிகளின் நீண்ட கடின உழைப்பின் பலனை இன்று பெற்றிடலாம். இதனால், எதிர்பாராத லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய கடனை திருப்பி செலுத்தவும் முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையானமாக இருக்கும். வீட்டின் பெரியவர்கள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் செய்யும் வேலையில் மேலதிகாரிகள் ஏதேனும் குறைகளை கண்டறிந்தால், நீங்கள் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் இன்று அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்ய வேண்டாம். நீங்கள் அலட்சியமாக இருந்தால், உங்களுக்கு பெரிய இழப்பு சாத்தியமாகும். இதனல் நீங்கள் தவறான விளைவையும் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், ஒரு சிறிய பிரச்சனையைக் கூட அலட்சியப்படுத்தாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் சரிவு உண்டாகலாம். உங்கள் உடல்நலம் தொடர்பான விஷயங்கள் உங்களை பலவீனமாக்கலாம். உங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் ஓய்வில் கவனம் செலுத்துங்கள். இன்று வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வீட்டில் பூஜை, யாகம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் சமூக வாழ்க்கையிலும் கவனம் செலுத்த முடியும். பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். சரியான நேரம் வரும்போது உங்கள் பிரச்சனைக் கண்டிப்பாக தீரும். வேலையைப் பற்றி பேசுகையில், உங்கள் முதலாளி உங்களுக்கு அலுவலகத்தில் ஏதேனும் முக்கிய பணியை ஒப்படைத்திருந்தால், அதை மிகவும் கவனமாக செய்து முடிக்க முயற்சிக்கவும். ஒரு சிறிய தவறு கூட உங்களுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தலாம். வியாபாரிகள் லாபத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சாதகமற்ற கிரக நிலை காரணமாக, எளிதில் முடிக்கும் வேலையிலும் உங்களுக்கு தடைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2:20 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று அவசரத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த மனகசப்புகள் அனைத்தும் நீங்கி, புதியதொரு வாழ்க்கைத் தொடங்குவீர்கள். உங்கள் நிதி சார்ந்த கவலைகள் உங்களை இன்று துன்புறுத்தலாம். இன்று நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம். நீங்கள் கடன் வாங்க நினைத்தால், கவனமாக உங்கள் முடிவை எடுங்கள். வேலையைப் பற்றிப் பேசும்போது, ​​அலுவலகத்தில் கடினமாக உழைத்தும், எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், பொறுமையுடன் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படுவது நல்லது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இல்லையெனில், நீங்கள் பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள் இன்று பெரிய அளவில் முன்னேற்றத்தை செய்ய வாய்ப்பு கிடைக்கும். இன்று வானிலை மாற்றங்களால் உங்கள் ஆரோக்கியம் குறையலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:45 மணி முதல் மதியம் 12:35 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் பதவியைப் பெறலாம். உங்களுக்கு சில புதிய பொறுப்புகளும் வழங்கப்படலாம். இன்று நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். இப்படி தொடர்ந்து உழைத்தால் விரைவில் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகள் தங்கள் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும். குறிப்பாக முதலீட்டு விஷயத்தில், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனையையும் பெறுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். இன்று, உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் ஒரு பெரிய கோரிக்கையை முன்வைக்கலாம். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், இன்று தொற்று ஏதேனும் ஏற்படலாம். கவனக்குறைவாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 21 November 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 21 November 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Monday, November 21, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion