Latest Updates
-
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...!
Today Rasi Palan 21 December 2022: இன்று இந்த ராசிக்காரர்களின் வேலையைக் கெடுக்க சிலர் முயற்சிக்கலாம்...
இன்றைய நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 21ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 21ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு மிகவும் நல்ல நாள். உங்களின் சில பெரிய ஒப்பந்தங்கள் உறுதிசெய்யப்படலாம். இதனால் பெரிய நிதிப் பலன்களும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று வாழ்க்கைத்துணை மிகவும் அன்புடன் நடந்து கொள்வார். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான முடிவுகளைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:25 மணி முதல் மதியம் 2:15 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளை கேட்டு ஏதாவது வேலை செய்தால் உங்கள் பெயர் கெட்டுவிடும். தொழிலதிபர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். குறிப்பாக ஆடை வணிகர்களுக்கு பெரிய ஆர்டர் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நீண்ட நேரம் விழித்திருப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:45 மணி முதல் இரவு 9:30 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்று பண விஷயத்தில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. விருப்பம் இல்லாவிட்டாலும், இன்று நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். வேலையில் சிறு அலட்சியமும் கூடாது. வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் உங்கள் அடியை மிகவும் சிந்தனையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அறிவுரைகளை புறக்கணிக்கும் தவறைச் செய்யாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் தந்தையுடனான உறவு மேலும் வலுவடையும். உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், இன்று உங்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று வேலையின் அடிப்படையில் நல்ல நாளாக இருக்கும். குறிப்பாக பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் மீது பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் சோர்வாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும். பண விஷயத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் புதிதாக எந்த வேலையைத் தொடங்கும் முன்பும், பெரியவர்களின் ஆசியைப் பெற மறக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மாலை 5:15 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, மற்றவர்களின் விஷயங்களில் அதிகம் தலையிடுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இன்று உங்களுக்கு நீங்களே பிரச்சனையை உருவாக்கி கொள்வீர்கள். இன்று அலுவலகத்தில் நீங்கள் பாதகமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடலாம். ஒரு சிறிய தவறுக்காக முதலாளி உங்கள் மீது கோபப்படுவார். எனவே, அலட்சியத்தைத் தவிர்ப்பது நல்லது. வணிகர்கள் இன்று விவாதத்திலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இன்று வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். பழைய கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இணக்கம் ஏற்படும். இன்று உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 8:55 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்காக போதுமான நேரத்தைப் பெறுவீர்கள். இன்று உங்கள் குடும்பத்தாருடன் சேர்த்து வீட்டு அலங்காரத்திலும் சில மாற்றங்களைச் செய்ய திட்டமிடலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பெரிய மரியாதை கிடைக்கும். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் நிச்சயம் கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல அறிகுறி தென்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:05 மணி முதல் மதியம் 12 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களது நிதிநிலை நன்றாக இருக்கும். இன்று திடீர் பண வரவு கிடைக்கும். உங்களின் அன்றாட தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். அலுவலகத்தில் முதலாளி உங்கள் கடின உழைப்பால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இன்று அவர்களிடமிருந்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீங்கள் பெரிய லாபத்தைப் பெற விரும்பினால், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று மனதளவில் நீங்கள் நன்றாக உணரமாட்டீர்கள். எதையாவது பற்றி நினைத்து மிகவும் குழப்பத்துடன் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் மனதை நெருக்கமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். யோசிக்காமல் எந்த செலவும் செய்யாதீர்கள். வேலையில் அதிக அழுத்தத்தை உணரலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க தினமும் யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்றைய நாளின் தொடக்கம் வணிகர்களுக்கு சற்று தாமதமாக இருக்கும். ஆனால், நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் இன்று முன்னேற்றத்தை அடையலாம். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். தடைப்பட்ட பணம் கிடைக்கும். இது தவிர, உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் தவறான அணுகுமுறை உங்களை வருத்தமடையச் செய்யலாம். உங்கள் உடல்நிலையில் சிறிதும் அலட்சியமாக இருக்காதீர்கள். குறிப்பாக உங்களுக்கு இதயம் தொடர்பான நோய் ஏதேனும் இருந்தால், சிறிய பிரச்சனையைக் கூட அலட்சியப்படுத்தாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று வணிகர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். சில காலமாக உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கவில்லை என்றால், இன்று ஓரளவு முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகம் கேலி பேசுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று முதலாளியின் பார்வை உங்கள் மீது இருக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். பழைய கடனில் இருந்து விடுபட விரும்பினால், சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வீட்டின் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் சமீபத்தில் ஏதேனும் போட்டித் தேர்வை வழங்கியிருந்தால், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று வியாபாரிகளுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று சில புதிய யுக்திகளை கையாளலாம். உங்கள் வணிகத் திட்டங்களிலும் சில மாற்றங்களைச் செய்யலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். இன்று உடல்நலம் சீராகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்று குடும்பத்தாருடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். உங்கள் தவறான நடத்தை அவர்களின் மனதைப் புண்படுத்தும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தவும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. அலுவலகத்தில் நேரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். தொழிலதிபர்கள் அவசரமாக எந்த முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், வானிலை மாற்றத்தால் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை



Click it and Unblock the Notifications











