For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 20 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது...

இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 20ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 20 January 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 20ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு பொருளாதார முன்னணியில் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். திடீர் பண வரவு கிடைக்கும். கடின உழைப்பிற்கேற்ற பலனைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். இன்று மேலதிகாரி உங்கள் வேலையால் மிகவும் கோபப்படலாம். வணிகர்கள் அதிக லாபம் ஈட்ட அவசரப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று பணம் தொடர்பான வேலையை செய்ய ஏற்ற நாள் அல்ல. அவசரப்பட்டால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். இன்று முதலாளி உங்கள் வேலையை மதிப்பாய்வு செய்யலாம். வணிகர்கள் இன்று பெரிய நிதி ஆதாயத்தைப் பெறலாம். குறிப்பாக தொழிலதிபர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். இன்று உடல்நலம் சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, அலுவலகத்தில் இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். போட்டி அதிகமாகலாம் என்பதால், முடிந்ததை செய்ய முயற்சி செய்யுங்கள். வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும், நிதி பரிவர்த்தனைகளைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்கவும். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் மதியம் 2 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதம் ஏற்படலாம். கோபத்தில் தவறான வார்த்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பணத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று நீங்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில், திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணத்தால் மிகவும் சோர்வடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் முக்கியமான வேலை குறித்த நேரத்தில் முடிவடையும். இன்று நீங்கள் நம்பிக்கையுடனும் மிகவும் நேர்மறையாகவும் இருப்பீர்கள். வணிகர்கள் வரி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும். அலட்சியத்தால் பெரும் விளைவை சந்திக்க நேரிடும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று அலுவலகச் சூழல் நன்றாக இருக்காது. உங்களின் தவறுகள் முதலாளியின் கோபத்தைத் தூண்டும். தொழிலதிபர்களின் முக்கிய வேலைகளில் சில தடைகள் ஏற்படலாம். இன்று உங்கள் பணம் தேவையற்ற விஷயங்களுக்காக செலவிடப்படும். வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று அதிகரித்து வரும் மன உளைச்சல் காரணமாக நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:45 மணி முதல் இரவு 8:30 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் தேவையற்ற விஷயங்களுக்காக மிகவும் கவலைப்படுவீர்கள். பொறுமையுடன் செயல்பட்டு, அமைதியான மனதுடன் முடிவுகளை எடுப்பது நல்லது. அலுவலக வேலையில் முழு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வாழ்க்கைத் துணையின் தவறான நடத்தை உங்களை வருத்தமடையச் செய்யும். உங்கள் துணையின் கசப்பான வார்த்தைகள் உங்கள் மனதைக் காயப்படுத்தலாம். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உடல் நலம் பலவீனமடையும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:55 மணி முதல் இரவு 8:05 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்களுக்கு சில முக்கியமான பொறுப்புகளும் வழங்கப்படலாம். தொழிலதிபர்களின் பொருளாதார பிரச்சனைகள் தீரும் வாய்ப்பு உள்ளது. தடைப்பட்ட பணம் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய மனகசப்புகள் அனைத்தும் இன்று நீங்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 9:50 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். கூட்டு வியாபாரிகளுக்கு இன்று எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் அலுவலகத்தில் விரைவாக முடிக்கவும். வேலைகளை தேக்கி வைக்காதீர்கள். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆடம்பர செலவைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, நீண்ட காலமாக கிடைக்காத பணத்தை, இன்று திரும்ப பெற வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் உங்கள் நிதி முடிவுகளை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். இன்று உங்கள் துணையின் உதவியுடன், பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்படும். வேலையில், இன்று கலவையான முடிவுகளைத் தரும். நீங்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு கைகள் அல்லது கால்கள் தொடர்பான பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, நீங்கள் விவாதத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில், நீங்கள் சட்ட விவகாரத்தில் சிக்கிக் கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்த பொன்னான வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். வணிகர்கள் பெரிய தொகையை கடனாக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்காலத்தில் உங்கள் கஷ்டங்கள் அதிகரிக்கலாம். வேலையுடன், உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உணவில் எந்த இடையூறும் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு காதலைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். விரைவில் உங்கள் திருமணம் கைக்கூடும். இன்றைய நாள் பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை சமநிலையற்றதாக இருக்கலாம். அலுவலக சூழ்நிலை நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனுடன், சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். உங்கள் உடல்நிலையில் அதிக அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 20 January 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 20 January 2023 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Friday, January 20, 2023, 5:30 [IST]
Desktop Bottom Promotion