For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சிறு விஷயங்களுக்கு கோபப்படுவதைத் தவிர்க்கவும்...

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 20 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 20 January 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 20 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நீங்கள் உங்கள் நிதி முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுங்கள். குறிப்பாக பணம் தொடர்பான அவசர பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உங்கள் வேலையைப் பற்றி பேசும்போது, பாதகமான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். முதலாளியின் மனநிலை மிகவும் மோசமாக இருக்கும். இன்று உங்களின் சிறிய தவறினால் அவர்களின் கோபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பொறுமையுடன் வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் கவனமாக முடிக்க முயற்சிப்பீர்கள். வியாபாரிகளுக்கு இன்று சராசரி நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, குடும்ப உறுப்பினர்களுடன் மோதலைத் தவிர்க்கவும். உடல்நலம் குறித்த அதிக கவனக்குறைவு செலவை அதிகரிக்க செய்யும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:15 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், இதுவே சரியான நேரம். அதே சமயம், உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். இன்று அலுவலகத்தில் நீங்கள் பெரிதும் பாராட்டப்படுவீர்கள். இது உங்கள் நம்பிக்கையையும் அதிகரிக்கும். இருப்பினும், எதிர்மறை உணர்வுகளிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். பெற்றோருடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நீண்ட நேரம் பட்டினி கிடக்கும் பழக்கத்தால் இன்று உங்கள் உடல்நலம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் இரவு 8:10 மணி வரை

மிதுனம்

மிதுனம்

பரவி வரும் இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க வேண்டும். உங்கள் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மேலும், தினமும் யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு அதிக வேலை சுமை இருக்கும். குறிப்பாக அரசு ஊழியர்கள், இன்று சிறிய வேலைகளைக் கூட கவனமாக செய்யவும். உங்கள் ஒரு தவறினால் பெரிய இழப்பு ஏற்படலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். பரபரப்பான கால அட்டவணை காரணமாக, இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக நேரம் செலவிட முடியாது. இருப்பினும், உறவில் நல்லிணக்கம் இருக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்ய வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

கடகம்

கடகம்

இன்று வணிகர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். தடைப்பட்ட ஒப்பந்தம் முடிவடையும். விரைவில், நீங்கள் ஒரு பெரிய நிதி நன்மையைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு போன்றவற்றிற்காக புதிய பாடம் பயில நினைத்தால் அதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் மதிப்புமிக்க பொருட்களை வாங்கலாம். வாழ்க்கைத் துணையுடன் நல்ல இணக்கம் இருக்கும். இன்று உங்கள் துணையின் மனநிலை நன்றாக இருக்கும். குழந்தை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:05 மணி முதல் மாலை 3:25 மணி வரை

சிம்மம்

சிம்மம்

பணம் தொடர்பான எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீர்கள். குறிப்பாக புதிதாக ஏதேனும் முதலீடு செய்யத் திட்டமிட்டால், மற்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உழைத்து சம்பாதித்த பணத்தை நன்றாக பயன்படுத்துங்கள். வேலை விஷயமாக இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று எளிதில் முடிக்கும் காரியங்களில் தடைகள் ஏற்படும். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக உடன்பிறந்தோரின் உணர்ச்சிபூர்வமான ஆதரவால், உங்கள் மன உறுதி உயரும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் உடல்நிலை சில காலமாக சரியாக இல்லை என்றால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி

கன்னி

உங்கள் வாழ்க்கைத் துணைக்கு அதிக நேரம் கொடுக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களுக்கிடையே உள்ள மனகசப்பை குறைக்கும். மேலும், உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் நிலைத்திருக்கும். முடிந்தால், உங்கள் அன்புக்குரியவருக்கு பிடித்த பரிசை வாங்கி கொடுங்கள். இன்று நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். இருப்பினும், நாளின் இரண்டாம் பாதியில், உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வணிகர்கள் பெரிய ஆர்டரைப் பெறலாம். உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

துலாம்

துலாம்

இன்று வணிகர்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் அவர்கள் உங்கள் வேலையை கெடுக்க முயற்சிக்கலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேண முயற்சி செய்யுங்கள். தேவையற்ற ஆணவம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இன்று பண விஷயத்தில் கலவையான நாளாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் துணையுடன் நேரத்தை சிறப்பாக செலவிடுவதன் மூலம் நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். வீட்டின் பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அமைதியான மனதுடன், முக்கியப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்:5

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

சிலர் தவறான தகவல்களைத் தந்து உங்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், ரியல் எஸ்டேட், போக்குவரத்து தொடர்பான வேலை செய்பவர்கள் இன்று சட்டவிரோதமான எந்த வேலையையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டமே சாத்தியமாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெற கடுமையாக உழைக்க வேண்டும். வெறும் கையால் அளப்பதால் உங்கள் எந்த வெற்றியும் கிடைக்காது. இன்று நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் நிறைய ஓடலாம். இதன் காரணமாக நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம். உங்களுக்காக நேரம் ஒதுக்கி ஓய்வில் கவனம் செலுத்தினால் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை

தனுசு

தனுசு

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தால், அதிக மன உளைச்சலைத் தவிர்ப்பது நல்லது. இது உங்கள் வேலை மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கும். இன்று அரசு ஊழியர்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் வாய்ப்பு அதிகம். நீங்கள் முன்னேறலாம். தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் நீங்கள் சரியான முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு சச்சரவுகள் இருக்கலாம். ஆனால் விரைவில் உங்களுக்கிடையில் எல்லாம் சாதாரணமாகிவிடும். நீங்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மகரம்

மகரம்

சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருக்கும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம் அல்லது உங்கள் வருமானமும் அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று வீட்டில் உங்கள் திருமணத்தைப் பற்றி பேசலாம். விரைவில் உங்கள் திருமணம் முடிவாகலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். நிதி ரீதியாக இன்று நீங்கள் நெருக்கமான ஒருவருக்கும் உதவலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் வழக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை

கும்பம்

கும்பம்

நீண்ட நாட்களாக ஏதேனும் வேலை நிலுவையில் இருந்தால், இன்றே அதை முடிக்க முயற்சி செய்யுங்கள். இன்று முதலாளி உங்கள் வேலையை மதிப்பாய்வு செய்யலாம். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்தால், அது தொடர்பான சில முக்கிய செய்திகளைப் பெறலாம். சில்லறை வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், இன்று நீங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடனான இடைவெளியைக் குறைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிறிய விஷயங்களுக்கு மோதலைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் தொடர்ந்து சோம்பலாக உணர்கிறீர்கள் என்றால், உடற்பயிற்சியுடன் உங்கள் நாளைத் தொடங்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மீனம்

மீனம்

நீங்கள் இலக்கு தொடர்பான வேலை செய்தால், இன்று உங்கள் எல்லா வேலைகளையும் எளிதாக முடிக்க முடியும். நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்கள் நேர்மறையைக் கண்டு அனைவரும் ஈர்க்கப்படுவார்கள். வியாபாரிகளும் இன்று முன்னேறலாம். தடைபட்ட வேலைகள் முடிவடையும். இன்று லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். உடன்பிறப்பால் இன்று நிதி ஆதாயம் சாத்தியமாகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதால், இன்று உங்களின் பெரிய கவலைகள் நீங்கும். முடிந்தால், இன்று உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு சில தசைகள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். இன்று கனமான பொருட்களை தூக்குவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 20 January 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 20 January 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Wednesday, January 19, 2022, 22:52 [IST]
Desktop Bottom Promotion