Today Rasi Palan 20 December 2022: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்துல கொஞ்சம் உஷாரா இருக்கணும்..

இன்றைய நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 20ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 20 December 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 20ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வீண் சச்சரவுகள், பிரச்சனைகளில் இருந்து விலகி உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வேலை விஷயமாக இன்று உங்களுக்கு பரபரப்பான இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் சுமை அதிகரிக்கலாம். மேலதிகாரி உங்களுக்கு சில புதிய பொறுப்புகளையும் வழங்கலாம். உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்ட படி முடிக்க முயற்சிப்பது நல்லது. தொழிலதிபர்கள் இன்று நிறைய ஓட வேண்டியிருக்கும். இருப்பினும், நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று வானிலை மாற்றத்தால் சில பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மாலை 3 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வீட்டில் சிறிய விருந்திற்கு ஏற்பாடு செய்யலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். வேலை தொடர்பான முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்காக புதிய பாடத்திட்டத்தை தொடர நினைத்தால், இந்த நேரம் அதற்கு சாதகமாக இருக்கும். தொழிலதிபர்களின் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் சராசரி நாளாக இருக்கும். அலுவலகத்தில், உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஒரு சிறிய தவறு கூட உங்களுக்கு பெரிய பிரச்சனையை உருவாக்கும். தொழிலதிகர்ள் இன்று பெரிய ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் பாதையில் சில தடைகள் இருக்கலாம். உங்களின் இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். சிந்திக்காமல் செலவு செய்யாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனையை பேசி தீர்க்க முயற்சித்தால் வெற்றி கிடைக்கலாம். அமைதியாக இருப்பது பிரச்சனையை பெரிதாக்கும். நீங்கள், குழந்தைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய நாள் பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். வேலையில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பை மேலதிகாரி கவனிக்கலாம். தொழிலதிபர்களுக்கு இன்று சிறப்பான வாய்ப்பு தேடி வரலாம். உங்கள் உடல்நிலையில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனையை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கலாம். நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், புதிய வேலையைத் தேடுவதற்கான இந்த நேரம் சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், உங்களுக்கு நரம்புகள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, நீங்கள் வணிகர்களாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக நீங்கள் புதிய முதலீடு செய்ய திட்டமிட்டால், மோசடி மற்றும் ஏமாற்றும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூட்டு வியாபாரம் செய்வோர் விவாதத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால், வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, ​​​​குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்தைப் பற்றிய உங்கள் அக்கறை அதிகரிக்கக்கூடும். இன்று நீங்கள் மருத்துவமனைக்கு அலைய வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கும் தவறைச் செய்யாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 39

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். சக ஊழியர்களே உங்களுக்கு துரோகம் செய்ய முயற்சிக்கலாம். அவற்றை பொருட்படுத்தாது, கடினமாக உழைத்தால், உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். எதிர்பாதார நிதி இழப்பும் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி பெரியவர்களிடமும் விவாதிக்கலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணர்ந்தால், வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓய்வில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 11:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று அலுவலகச் சூழல் உங்களுகக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இன்று, உங்களின் நல்ல செயல்பாட்டினால் உயர் அதிகாரிகளின் மனதை வெல்வீர்கள். உங்களுக்கு நல்ல வாய்ப்பும் வழங்கப்படும். உங்கள் தொழில் ஒரு புதிய திசையில் நகரும். வணிர்கள், தங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பெரிய லாபத்திற்காக, உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுங்கள். பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் இன்று அவசரப்படுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரத்திற்கு உங்களுக்கு முயற்சிகள் வெற்றி பெறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று அலுவலகத்தில் சக ஊழியர்களை மரியாதையுடன் நடத்துவது நல்லது. இன்று உங்கள் தவறான அணுகுமுறை பிறரால் விமர்சிக்கப்படலாம். இது போன்ற விஷயங்கள் உங்கள் வேலையை பாதிக்கும். தொழிலதிபர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்பு நிச்சயம் பலனளிக்கும். இன்று நீங்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்கள் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கவனக்குறைவாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்றைய நாள் பண விஷயத்தில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. ஆடம்பர செலவுகள் உங்கள் நிதி நிலையைக் கெடுக்கும். செலவுகளை குறைக்க விட்டால் வரும் நாட்களில் பெரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதை தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படலாம். தொழிலதிபர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். விரைவான லாபம் ஈட்ட தவறான பாதையில் செல்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தை சந்திக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். இன்று உங்கள் துணையின் மனநிலை சரியாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், உங்களை நீங்களே கட்டுப்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:40 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் மிகவும் பரபரப்பாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். விரைவில் அதன் சரியான பலனைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில், சிறு பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், ஒரு சிறிய பிரச்சனையைக் கூட அலட்சியப்படுத்தாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, இன்று பாதகமான சூழ்நிலைகளில் பொறுமையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் இன்று சில சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். உங்களிடம் கொடுக்கப்பட்ட எந்தப் பொறுப்பும் உங்களிடமிருந்து திரும்பப் பெறப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நம்பிக்கையில் சரிவு சாத்தியமாகும். வியாபாரிகள் இன்று புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். இன்று உங்கள் சிறிய முடிவை கூட புத்திசாலித்தனமாக எடுத்தால் நல்லது. உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், இன்று கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:20 மணி முதல் மாலை 3 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, December 20, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion