Today Rasi Palan 19 November 2022: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்... பேச்சில் கவனம் தேவை...

இன்று கும்ப ராசியின் சதயம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 19ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 19 November 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கும்ப ராசியின் சதயம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 19ம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைய தினம் மேஷ ராசிக்காரர்களுக்கு கடவுள் வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக சிறப்பான நாளாக இருக்கும். திட்டமிட்டபடி அனைத்து வேலைகளும் முடிவடையும். வியாபாரிகளுக்கு இன்று சில நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வீட்டில் உள்ளவர்களுடன் உங்களுடன் அன்பும் ஒற்றுமையும் மேலோங்கும். இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் வருமானத்தை மனதில் வைத்து, செலவு செய்வது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு வயிறு தொடர்பான நாட்பட்ட நோய்கள் வெளிப்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:40 மணி முதல் இரவு 8:05 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்றைய தினம் ரிஷப ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, இன்று எந்த பண பரிவர்த்தனைகளையும் செய்வதில் அவசரம் காட்டாமல் இருக்கவும். இல்லையெனில், லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு இன்று அலுவலகத்தில் கூடுதல் நேரம் செலவிட நேரிடலாம். உங்களது கடின உழைப்பு வீணாகிறது என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றி கொள்ளவும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன் விரைவில் கிடைக்கப்போகிறது. வியாபாரிகள் முன்னேற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்தால், இன்னும் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. சிறு வேலையாக இருந்தாலும், மிக கவனமாக செய்து முடிக்கவும். வீட்டின் சூழல் இன்று அமைதியாக இருக்கும். பெற்றோரின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களது அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களை செய்திட அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்றைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக அமையப் போகிறது. உங்களை தொந்தரவு செய்த பழைய நீதிமன்ற வழக்குகள் இன்று முடிவடையும். அதுவும் உங்களுக்கு சாதகமாக முடிவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்று நீங்கள் உங்கள் தந்தையின் ஆலோசனையால் சில பெரிய நிதி நன்மைகளைப் பெற போகிறீர்கள். இன்று நீங்கள் மனதளவில் மிகவும் வலுவாக இருப்பதோடு, தன்னமிக்கையுடன் முன்னேறி செல்வீர்கள். வியாபாரிகள் தங்களது தொழிலில் ஏதேனும் மாற்றத்தை செய்ய விரும்பினால், இன்று தினம் அதற்கு ஏற்றதாக இருக்கும். காரியம் கை கூடும். தேவையற்ற மோதலும், ஆணவமும் உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுகட்டை போடலாம். இன்று உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் உற்சாகமான நாளாக அமைந்திடும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவரது ஆதரவும் கிடைக்க பெறுவீர்கள். ஒரு ஆன்மீக பயணத்திற்கு செல்ல நீண்ட நாட்களாக திட்டமிடுகிறீர்கள் என்றால், இன்று அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திடும். நிதி நிலையை பொறுத்தவரை உங்களுக்கு ஏற்றம் உண்டாகும். திடீர் பண வரவுகள் கிடைக்கக்கூடும். எந்தவொரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுத்தால், பிரச்சனைகள் உங்களை நெருங்காது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகப்படியான நம்பிக்கையை தவிர்ப்பது நல்லது. உங்கள் செயலே உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். வியாபாரிகள் தொழில் முன்னேற்றத்திற்காக வங்கியில் கடன் வாங்க நினைத்தால், உங்கள் தகுதிக்கு மீறிய தொகையை கடனாக வாங்குவதைத் தவிர்த்திடவும். இல்லையெனில், எதிர்காலத்தில் கடுமையான அழுத்தத்திற்கு ஆளாக நேரிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று எந்த பிரச்சனையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்றைய தினம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். குறிப்பாக, திருமணமாகாதவர்களுக்கு காதல் முன்மொழிவு வரலாம். திருமணமானவர்களுக்கு, திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளை நீங்கள் கேட்லாம். இன்று உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். விலையுயர்ந்த பொருள் ஒன்றை வாங்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நேரத்தை கவனத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. எந்த வேலையையும் நாளை என்று தள்ளி போடாதீர்கள். வணிகர்கள் மீது பொறுப்புகளின் சுமை அதிகரிக்கலாம். இன்று நீங்கள் அதிகப்படியான அழுத்தத்தை உணரக்கூடும். உடற்சோர்வு மற்றும் மனஅழுத்தம் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் குறையக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை

கன்னி

கன்னி

இன்றைய தினம் கன்னி ராசிக்காரர்கள் சற்று சுமாரான நாளாக இருக்கும். இன்று பண வரவு சிறப்பாக இருந்தாலும், செலவுகள் அதிகரித்து கொண்டே போகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும். ஆனாலும், வீண் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் கட்டுபாடு இருந்தால், வீண் பிரச்சனையைத் தவிர்க்கலாம். உங்கள் துணையுடன் புரிதல் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், அவர்களுடன் கூடுதல் நேரம் செலவிட வேண்டும். பண விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் உதவியுடன் கடினமான வேலையை சிறப்பாக செய்து முடிக்கலாம். இதனால், அலுவலகத்தில் பாராட்டுகள் குவியலாம். வியாபாரிகளுக்கு, அனைத்து வேலைகளும் இன்று சுமூகமாக முடிவடையும். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை

துலாம்

துலாம்

இன்றைய தினம் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்களது நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலனைப் பெற போகிறீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொழில் புரிபவர்களுக்கு இன்று பெரும் ஏற்றம் உண்டாக போகிறது. நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலை இன்று முடிவடைவதால், நல்ல லாபத்தை பெறலாம். உயர் கல்வி தொடர விரும்புபவர்களுக்கு இன்று சாதகமாக அமைந்திடும். தொடர்ந்நத கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பழைய கடனை இன்று அடைத்திடுவீர்கள். இதனை குடும்பத்தில் மனஅமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு நரம்புகள் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் மாலை 3 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. இன்று நீங்கள் மிகவும் சுமையாக உணரலாம். மேலும், பல கவலைகளால் நீங்கள் சூழப்பட்டிருப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்களை கட்டுப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பொறுமையாக இருந்தால், சரியான நேரம் வரும் போது பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உத்தியோகஸ்தர்களூக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலை தொடர்பாக சிறு பயணம் செய்யவும் நேரிடலாம். நிதி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அவசரப்பட்டு எந்தவொரு வேலையையும் செய்து முடிக்காதீர்கள். பின்னர், பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சியைப் பெற, விட்டு கொடுத்து செல்வது நல்லது. வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க முயற்சிக்கவும். எக்காரணம் கொண்டும் பொய் பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை

தனுசு

தனுசு

இன்றைய தினம் தனுசு ராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் உங்கள் மீதான பொறுப்புகளின் சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எத்தகைய சூழலிலும் உங்கள் குடும்பத்தாரின் ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக, உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். நிதி நிலையைப் பொறுத்தவரை இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால் அதை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தம் இன்று அதிகரிக்கும். உங்கள் நிதி முடிவுகளை மிகவும் கவனமாக எடுப்பது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்தினால், விரைவில் கடனில் இருந்து விடுபட முயற்சிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். சரியான திசையில் பயணித்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 6 மணி வரை

மகரம்

மகரம்

இன்றைய தினம் மகர ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு இன்று மிகவும் கடினமாக நாளாக இருக்கும். உங்கள் கல்வியை தொடர்வதில் பெரும் தடைகள் ஏற்படலாம். இதனால் மனதில் பலவித எண்ணங்கள் தோன்றலாம். தேவையற்ற எண்ணங்களை ஒதுக்கிவிட்டு, படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் கடினமாக சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். உங்களின் சிறு தவறும் முதலாளியின் கோபத்தை தூண்டும் வகையில் அமையலாம். எனவே, எதிலும் நிதானமாக செயல்பட்டால் பெரிய பிரச்சனையைத் தவிர்க்கலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுக்ள நேராமல் பார்த்து கொள்வது நல்லது. வியாபாரிகளுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும். இன்று ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனை என்றாலும், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:05 மணி முதல் இரவு 8:50 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் பேச்சில் கட்டுப்பாடு தேவை. உங்களின் தவறான நடத்தை உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தலாம். குறிப்பாக, குடும்பத்தில் உள்ள பெரியவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். இன்றைய தினம் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம். புதிய வாகனம் வாங்க வேண்டுமென்ற கனவு, விரைவில் நிறைவேற போகிறது. வேலை தேடுபவர்களுக்கு, பெரிய நிறுவனத்தில் இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வரலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்பை உங்கள் முதலாளி கவனிக்க நேரிடலாம். எலக்ட்ரானிக்ஸ், பொம்மைகள், ஆடைகள், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவை தொடர்பான பணிபுரிபவர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 9:50 மணி வரை

மீனம்

மீனம்

இன்றைய தினம் மீன ராசிக்காரர்கள் தயக்கத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு இன்று அலுவலகத்தில் கூடுல் பணிகள் ஒதுக்கப்பட்டாலும், தயங்காமல் அதை ஏற்று கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ அவ்வளவு இனிமையாக பலனை பெற்றிடுவீர்கள். எனவே, அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய நாள். இன்று குடும்ப வாழ்க்கையில் இனிமையான சூழல் நிலவும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனகசப்பை பேசி தீர்க்க முயற்சி செய்யலாம். வணிகர்களின் தடைப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்க வேண்டுமெனில், கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் நிதி நிலை இன்று நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று மிகவும் சோர்வாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6:20 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, November 19, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion